tg travels

வில்பத்துவில் வெளிநாட்டு முஸ்லிம்கள் குடியேற்றப்பட்டுள்ளனரா என பாதுகாப்பு தரப்பினர் தேடிப்பார்க்க வேண்டும்..


வில்பத்து காட்டில் வெளிநாட்டு முஸ்லீம்கள் குடியேற்றப்பட்டுள்ளனரா என தேடிப்பார்க்க வேண்டும் என ஞானசார தேரர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

பெரும்பான்மை ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர் ..

கடந்த வாரம் மியன்மாரில் இருந்து அகதிகள் என்ற போர்வையில் இலங்கைக்குள் வந்துள்ளவர்களுக்காக ரிஷாட் பதியுதீன் சட்டத்தரணி அனுப்பியமையை பார்க்கும் போது அதன் பின்னணியில் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.வில்பத்து காட்டில் வெளிநாட்டு முஸ்லீம்கள் குடியேற்றப்பட்டுள்ளார்களா என தேடிப்பார்க்க வேண்டும்.

'மியன்மார் அகதிகள் பாதுகாப்பு பிரிவினரின் கண்ணில்  பட்டதால் அவர்கள் தொடர்பான தகவல்கள் வெளியானது.இல்லாவிட்டால் அவர்களை வில்பத்து அல்லது கிழக்கில் குடியேற்றி இருப்பார்கள்.

வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து தொடர்ந்து முஸ்­லிம்கள் அக­தி­க­ளாக வந்து குடி­யே­று­கின்றனர்.நீர்­கொ­ழும்பில் மாத்­திரம் 1500 பேர் தங்­கி­யுள்ளனர்.இவர்கள் போதைப்­பொருள் விற்­பனை போன்ற சட்­ட­வி­ரோத செயல்­களில் ஈடு­பட்டு வரு­வதால் எமது கலா­சாரம் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

பல்­வேறு நாடு­க­ளி­லி­ருந்தும் முஸ்­லிம்கள் இலங்­கைக்கு வந்து தங்­கி­யி­ருக்­கி­றார்கள். மாலை­தீ­வி­ருந்து மாத்­திரம் இங்கு வந்து 50 ஆயிரம் பேர் தங்­கி­யி­ருக்­கி­றார்கள். இவர்கள் பல்­வேறு சட்ட விரோத செயல்­களில் ஈடு­பட்­டுள்­ளார்கள். பல்­வேறு நாடு­களைச் சேர்ந்த முஸ்­லிம்­களால் கொழும்பு மீதொட்­ட­முல்லை குப்­பை­மேடு போலா­கி­யுள்­ளது. எதிர்­கா­லத்தில் மீதொட்­ட­முல்லை அனர்த்­தத்தை விட பாரிய அனர்த்தம் இங்கு ஏற்­படும். இந்த விட­யங்­களை நாம் எடுத்துச் சொன்னால் நாம் சதி செய்­ப­வர்கள், இனக்­க­ல­வ­ரத்தை உரு­வாக்க முயற்­சிப்­ப­வர்கள் என எம்­மீது குற்றம் சுமத்­தப்­ப­டு­கி­றது.

வில்பத்துவில் வெளிநாட்டு முஸ்லிம்கள் குடியேற்றப்பட்டுள்ளனரா என பாதுகாப்பு தரப்பினர் தேடிப்பார்க்க வேண்டும்.. வில்பத்துவில் வெளிநாட்டு முஸ்லிம்கள் குடியேற்றப்பட்டுள்ளனரா  என  பாதுகாப்பு தரப்பினர் தேடிப்பார்க்க வேண்டும்.. Reviewed by Madawala News on 5/10/2017 07:35:00 PM Rating: 5