Kidny

Kidny

மஹிந்தவை இனவாதிகளாக சித்தரித்து ஆட்சிப் பீடம் ஏறியவர்கள் இன்று தோல் உரிந்து நிற்கிறார்கள்..



சிறுபான்மையினர் பல எதிர்பார்ப்புக்களை எதிர்பார்த்து  மஹிந்த ராஜபக்சவின் அரசை கவிழ்த்து நாட்டிலே தமது  கலாச்சாரம் மத கொள்கைகளை நாட்டில் சம உரிமையாக வாழவேண்டும் என்ற பெரிய கனவுகளோடு வாக்களித்து கொண்டுவந்த நல்லாட்சி சிறுபான்மையினருக்கு கடந்த மஹிந்த ராஜபக்சவின் யுகத்தில் நடந்த அதே தொடர் அவலம் இன்னும் இந்த நல்லாட்சி உருவாக்கப்பட்டும் விஸ்வரூபம் கொண்டு ஆடுவது கடந்த அரசுக்கும் இந்த நல்லாட்சி என்று பெயரளவில் சொல்கின்ற அரசுக்கும்  என்ன வித்தியாசம்  நாம் பெருமை படுவதற்கு ஒன்றுமில்லை. 

உண்மையில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட இனவாத நடவடிக்கைகளையும் விட தற்போது மிகவும் பாரதூரமான நடவடிக்கைகள் இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் பூரண அணுசரனையில் நடந்தேரி வருவதை அவதானிக்க முடியுமாக இருக்கிறது. 

கடந்த மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடைய ஆட்சியில் இனவாதிகளை முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டிவிடுகின்றார் என்று குற்றம் சுமத்தி முஸ்லிம்களை சூடேற்றி மஹிந்தவை இனவாதியாக காட்சிப்படுத்தி ஆட்சியைப் பிடித்த பசுத்தோல் போற்றியவர்கள் அவர்களுடைய தற்கால நடவடிக்கைகள் காரணமாக தோல் உரிந்து நிற்கிறார்கள்.

நல்லாட்சியின் பங்காளிகளாக இருக்கின்ற எங்கள் முஸ்லிம் தலைமைகள், சமூகம் வஞ்சிக்கப்படுவதையும் உரிமைகள் மறுக்கப்படுவதையும் முஸ்லிம் கட்சிகளுடைய தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் சத்தமிட்டு பேச நாதியற்றவர்களாக காணப்படுகின்றனர்.

இன்று அதிகமாக முஸ்லீம்களின் கலாச்சாரம்,மத ரீதியான நிந்தனைகள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது இதை கண்டும் காணாதது போல் அரசு இருப்பது இந்த நாட்டிலுள்ள முஸ்லிகளை அரசு கேவலப்படுத்துகிறது என்பதை தவிர வேறொன்றுமில்லை. 

பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் ஜனாசார தேரர் பகிரங்கமாக அல்லாஹ்வை தூற்றுவதை எமக்கு அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. 

முஸ்லீம் பெண்களின் முகத்திரை அடங்கிய ஆடை தொடர்பில் இனவாத கருத்துக்கள் தொடர்ந்தும் வெளிப்படையாக தெரிவித்தும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஊடாகவும் செயல்படுவது நாலாட்சியின்மீது முஸ்லிம்கள் நம்பிக்கை இழக்கின்ற தருணமாக மாறிவருகின்றது. 

நல்லாட்சி அரசும்  சட்டம் ஒழுங்கு என்ற விடயத்தை சிறுபான்மையினர்மீது மட்டும் அமுல்படுத்துவது பெரும்பான்மை  பௌத்த பிக்குகளுக்கு சட்டத்தை உத்தியோகமற்ற போலீசாக செயல் பட கொடுத்திருப்பது இந்த நாட்டில்  வாழும்  முஸ்லிம்களுக்கு குறிப்பாக சிறு பான்மையினருக்கு விடிவில்லை என்பதை வெளிப்படையாக புடம்போட்டுக் காட்டுகிறது. 

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் உருவாக்கப்பட்ட பொது பலசேனா அமைப்பிற்கும்  அதன் வளர்ச்சிக்கும்  அடைக்களம் கொடுக்கின்ற தளமாக  நல்லாட்சி அரசு தோற்றமளிக்கிறது. 

எனவே முஸ்லிம் அரசியல்வாதிகள் யானைக்கு வாலாக இருக்காமல் எறும்புக்கு தலையாக இருந்து எதிர்தரப்பில் இன்று அனுர குமார அவர்களைப் போன்று அரசாங்கத்தின் அமைச்சுப் பதவிகளை துறந்து தனித்து நின்று சமூகத்திற்காக குரல் எழுப்ப துணிவில்லாமல் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் இந்த தரப்பினருடன் ஏன் இணைந்து ஏன் செயற்பட மறுக்கிறார்கள்? என்பது பற்றி இவர்கள் முஸ்லிம் சமூகத்திற்கு பொறுப்புடன் பதில் சொல்ல வேண்டும்.

நல்லாட்சியை உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டவர்களும் நல்லாட்சியில் முஸ்லிம் சமூகம் பந்தாடப்படுவது கண்டு மௌனிகளாக இருக்கும் முஸ்லிம் தலைமைகளும் இனிமேலாவது அல்லாஹுவை பயந்துகொள்ள வேண்டும்.

கலாநிதி எம்.ஏ.எம்.ஹனீப்
மடவளை பஸார்.

மஹிந்தவை இனவாதிகளாக சித்தரித்து ஆட்சிப் பீடம் ஏறியவர்கள் இன்று தோல் உரிந்து நிற்கிறார்கள்.. மஹிந்தவை இனவாதிகளாக சித்தரித்து ஆட்சிப் பீடம் ஏறியவர்கள் இன்று தோல் உரிந்து நிற்கிறார்கள்.. Reviewed by Madawala News on 5/16/2017 12:46:00 PM Rating: 5