Ad Space Available here

பலஸ்த்தீன் விடயத்தில் பதுங்கி நிற்கும் நல்லாட்சி ..!

இஸ்ரவேலுக்கு எதிரான  யுனஸ்கோவின் தீர்மானத்துக்கு எதிராக இலங்கை வாக்களிக்காமல் பின்வாங்கிய விடயம் பலஸ்த்தீன மக்களின் முகத்தில் கரியை பூசியவிடயமாகும் என்று கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் பேசிய ரஹுப் ஹக்கீம் அவர்கள் தெறிவித்திருந்தார்.

இந்த கூற்று காலம்கடந்த கூற்றாக இருந்தாலும்,இந்த நல்லரசாங்கம் பலஸ்தீன் விடயத்தில் பஞ்சோந்தி தனமாக நடக்கின்றது என்ற செய்தியை கூறி நிற்கின்றது. 

2006ம் ஆண்டு மஹிந்த ஆட்சியில் வெளிவிவகார அமைச்சராக இருந்த இதே மங்களசமரவீர அவர்கள் பலஸ்தீனத்திற்கு ஆதரவான ஒரு தீர்மானத்தை ஆதரிக்காமல் நடுநிலை வகித்திருந்தார், அந்த நேரம் மஹிந்த ராஜபக்ச அவர்கள், மங்கள நடந்து கொண்ட விதத்தை கண்டித்து அதற்கு கடும் கண்டனம் தெறிவித்திருந்தார்.

அதன் பிற்பாடுதான் மங்கள சமரவீர மஹிந்தவை விட்டு பிரியவேண்டிய நிலையும் ஏற்பட்டிருந்தது.
அந்தளவு பலஸ்த்தீன் மக்கள் மீது பாரிய கரிசனை கொண்டிருந்த மஹிந்தராஜபக்ஸ அவர்கள் அண்மையில் பலஸ்தீன கைதிகளின் விடுதலைக்கு ஒத்தாசை வழங்குமுகமாக இலங்கையின் பலஸ்தீன தூதகரகத்துக்கு சென்று ஆதரவு கைஒப்பமும் மிட்டிருந்தார், அதனை தொடர்ந்து ஹக்கீம் உட்பட பல அரசியல் பிரமுகர்களும் அந்த ஆதரவு ஏட்டில் கைஒப்பமிட்டு ஆதரவு தெறிவித்து வருகின்றார்கள்.

இதுவரை இந்த நாட்டின் ஜனாதிபதியோ, பிரதமரோ, வெளிவிவகார அமைச்சரோ, அந்த மக்களுக்கு சார்பாக கைஒப்பம் இடவில்லை என்பது கவணிக்கப்படவேண்டிய ஒன்றாகும்.

இந்த நல்லாட்சியின் இந்த நடவடிக்கைகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கும், இஸ்ரவேலின் மிலேச்சதனத்துக்கும் துணைபோகும் செயலாகும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.

இந்த நல்லாட்சியை கொண்டுவருவதற்கும், மஹிந்தவை வீழ்த்துவதற்கும் ஒபாமா அரசாங்கம் பலகோடிகளை ஒதிக்கியதாக அதிர்ச்சியூட்டும் செய்திகளும் இப்போது வந்தவண்ணம் உள்ளது.

இன்று இலங்கையில் அமெரிக்காவினதும் இஸ்ரவேலினதும் நடவடிக்கைகளுக்கு பூரண அனுமதி வழங்கப்பட்டுள்ளது, இதனை எந்த முஸ்லிமும் கண்டுகொண்டதாக தெறியவுமில்லை.

இதே நேரம் அன்று தொட்டு இன்றுவரை பலஸ்த்தீன் மக்களுக்காக குரல் கொடுப்பதில் பின்நிற்காத மஹிந்த ராஜபக்ச அவர்களை வீழ்த்துவதற்கு அமெரிக்காவும், இஸ்ரவேலும் பின்னாலிருந்து செயல்பட்டதற்கு நியாயமான காரணங்களும் உண்டு.

இந்த நல்லரசாங்கம் முஸ்லிம்கள் விடயத்தில் பாரபட்சமாக செயல்படும் விடயத்தை நமது முஸ்லிம் சமூகமும் அறிந்து கொள்ளமுயற்சிக்கவேண்டும்,
மஹிந்தவை முஸ்லிம்களின் எதிரியாக மாற்றுவதற்கு இந்த மேற்குலகம் போட்ட சதித்திட்டத்தில் முஸ்லிம் மக்கள் வீழ்ந்த விடயம் மிகவும் கவலைக்குறிய விடயமாகும்.

ஆகவே, இலங்கை முஸ்லிம்களை அமெரிக்காவும், இஸ்ரவேலும், மோடியின் இந்தி அரசாங்கமும் எப்படியெல்லாம் மூலைச்சலவை செய்து மஹிந்தவுக்கு எதிராக மாற்றி வெற்றிகண்டார்கள் என்பது பற்றிய செய்திகள் மெல்ல மெல்ல கசிந்து வருவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.
இந்த சதியில் முஸ்லிம் மக்கள் இனிமேலும் மாட்டிக்கொள்ளாமல், முஸ்லிம்களின் எதிரிகள் யார் நண்பர்கள் யார் என்பதை தெளிவாக புரிந்து கொண்டு எதிர்காலத்தில் முடிவுகளை எடுக்கவேண்டும் என்பதே எங்களின் என்னமாகும்.

இல்லாதுவிட்டால் எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகம் சொல்லொன்னா துயரங்களை சந்திக்கவேண்டிவரலாம்

இலங்கை நாட்டில் இதுவரை இருந்து வந்த அரச தலைவர்களில் மஹிந்த ராஜபக்ஷ மட்டுமே முஸ்லிம்நாடுகளின் நண்பனாக இருந்துவருகின்றார்.
அவருக்கு பஃரைன் நாட்டு மன்னர் கலிபா பட்டம் வழங்கி கௌரவித்திருந்தார், அதுமட்டுமல்ல பலஸ்தீன் நகரத்தின் மத்தியில் ஒரு வீதிக்கு மஹிந்த அவர்களின் பெயரைச் சூட்டி அந்த மக்கள் கௌரவபடுத்தியிருந்தார்கள்.

அதுமட்டுமல்ல 2009ம் ஆண்டு இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் நிறைவேற்றிய போது, முஸ்லிம் நாடுகளின் உதவியுடன் நான்கு வாக்குகளினால் அமெரிக்காவின் தீர்மானத்தை தோற்கடித்திருந்தார், அந்த தீர்மானத்துக்கு எதிராகவும் மஹிந்தவுக்கு ஆதரவாகவும் அமெரிக்காவின் செல்லப்பிள்ளை என்று கருதப்படுகின்ற குவைத் நாடுகூட வாக்களித்திருந்தது.

இந்த நடவடிக்கை அமெரிக்காவின் கோபத்தை கிளரியிருக்கும் என்பதே அரசியல் அவதானிகளின் கருத்தாகும், இப்படியான காரணங்களினால்தான் மேற்குலகம் மஹிந்தவை வீழ்த்துவதற்கு பின் கதவை பயன்படுத்தியது.

உலகவரலாற்றில், அமெரிக்காவுக்கு பிடிக்காத அரச தலைவர்களை உள்நாட்டுக்குல் குழப்பத்தை உண்டுபண்ணி எப்படி அந்த நாடுகளை குட்டிச்சுவராக்கி வருகின்றார்கள் என்பது யாரும் அறியாத ஒன்றல்ல.

இந்த விடயத்தில் ஆச்சரியமான விடயம் என்னவென்றால் இந்த சதிகளுக்கு எல்லாம் இலேசாக பழியாகி கொண்டு வருவது முஸ்லிம்கள்தான். 

ஆகவே மேற்குலகம் எவனைப்பார்த்து கெட்டவன் என்கின்றோனோ அவனை நாம் இலேசாக எதிரி என்று நம்பிவிடக்கூடாது, 
அதேநேரம் மேற்குலகம் எவனைப்பார்த்து நல்லவன் என்று கூறுகின்றானோ அவனை நண்பன் என்று நம்பி விடவும் கூடாது.

இதனை முஸ்லிம் சமூகம் உணர்ந்து செயல்படாதவரை, இலங்கையில் மட்டுமல்ல உலகத்திலும் முஸ்லிம்கள் நிம்மதியாக வாழமுடியாது என்பதே நடுநிலைவாதிகளின் கருத்தாகும்.

எம்.எச்.எம்.இப்றாஹிம்
கல்முனை...
பலஸ்த்தீன் விடயத்தில் பதுங்கி நிற்கும் நல்லாட்சி ..! பலஸ்த்தீன் விடயத்தில் பதுங்கி நிற்கும் நல்லாட்சி ..! Reviewed by Madawala News on 5/06/2017 02:01:00 PM Rating: 5