tg travels

சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துங்கள் : பொலிஸ் மா அதிபரிடம் நேரடி வேண்டுகோள்

கடந்த நாட்களில் இலங்கை முஸ்லீம்களுக்கு எதிராக இடம்பெற்று வரும் வெறுப்பு பேச்சு மற்றும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் உடனடி சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று மாலை பொலிஸ் மா அதிபரை அவரது காரியாளயத்தில் சந்தித்த அமைச்சர்களான  ரிஷாத் பதியுதீன், பைஸர் முஸ்தபா, பா உறுப்பினர் எஸ் எம் மரிக்கார், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அஸாத் சாலி ஆகியோர் இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர்.


தற்போது நாட்டில் திட்டமிட்ட வகையில் இடம்பெறும் முஸ்லிம் விரோத செயற்பாடுகள் மற்றும் தாக்குதல் சம்பவங்களை தடுத்து நிறுத்த உடனடி நடவடிக்கை எடுக்கும்படி பொலிஸ் மா அதிபரிடம் குறித்த மக்கள் பிரதிநிதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் இனமுறுகளை ஏற்படுத்த முயற்சிக்கும் ஞானசார தேரரை கைது செய்யுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.



 
சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துங்கள் : பொலிஸ் மா அதிபரிடம் நேரடி வேண்டுகோள் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துங்கள் : பொலிஸ் மா அதிபரிடம் நேரடி வேண்டுகோள் Reviewed by Madawala News on 5/18/2017 04:49:00 PM Rating: 5