Yahya

ஞானசார நாடகம்? திரைக்குப்பின்னால் ?இந்த நூற்றாண்டின் பெளத்த மதம் கண்ட கரும்புள்ளி ஞானசார. இவன் பற்றிய கேள்விகள் நீண்டனவாகத் தொடரும் போதும், சமீபத்தில் வெளியாகிய சில வீடியோ காட்சிகளில் தொடை நடுங்கியாகக் காட்சிதரும் இவன் வெறும் கோது என்பது தெளிவு. ஆனால் ஞானசார எனும் பெயருக்குப்பின்னால் மறைந்துகிடக்கும் திரையானது மிகவும் அகலவிரிந்ததாகும். திரைக்குப்பின்னால் அரங்கேறும் திட்டமிடலுக்கு அவன் உருவம் கொடுக்கின்றான்.

நமது நாட்டில் உள்ள சிங்களவர்கள், பெளத்தர்கள் கண்ணியமானவர்கள். அவர்கள் இனவாதிகள் கிடையாது. அவர்கள் இனவாதியாக இருந்திருந்தால் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் நாகத்தில் களம் குதித்த ஞானசார வெற்றி பெற்றிருக்கவேண்டும். அவ்வாறாயின் இவனுக்குப்பின்னால் இயக்கு சக்திகள் ஒரு குறுகிய அரசியல் லாபத்திற்காகவே இவனை பயன்படுத்தியிருக்கின்றன.

மகிந்தவின் ஆட்சிக் காலத்தில் இவன் தோற்றம் பெற்றது என்னவோ உண்மைதான் மறுப்பதற்கில்லை. ஆனால் அன்றைவிடவும் இன்றே இவன் ஆட்டம் உச்சம் தொடுகிறது. மகிந்தவின் மகனை , தம்பியை சிறைக்கு அனுப்பிய நல்லாட்சி, மகிந்தவின் மனைவியை விசாரணைக்கு உட்படுத்திய நல்லாட்சி ஞானசாரவை கைது செய்ய எடுக்கின்ற முயற்சிகள் தோல்வியடையக் காரணம் என்ன?

பல ஆயிரக்கணக்கான ஆயுதம் தாங்கிய புலிகளை ஒரே நாளில் கொன்றுகுவித்து பிரபாகரனை கைப்பற்றிய இலங்கை அரசு வெறும் நிராயுத பாணியாகவும் மண்ணெண்ணை போத்தலுடனும் நின்று இனவாதம் கொப்பளிக்கின்ற இவனை கைது செய்வதில் தோல்வியுற்றதே ஆசியாவின் ஆச்சர்யம். இருப்பினும் இன்றுவரை அவனை மகிந்தவே இயக்குவதாக கூறும் அப்புராணி முஸ்லிம்கள் ஒரு புறமும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

எழுதி வைத்துக் கொள்ளுங்கள்! இது தான் சர்வதேச விருதுக்குரிய இலங்கை நல்லாட்சி அரசின் நாடகம். ஞானசாரரை கைது செய்ய இந்த அரசால் முடியாது. அவ்வாறு கைது செய்தாலும் தண்டனை வழங்க முடியவே முடியாது. மீறி அவனைத் தண்டிதால் மறுகணமே அவனை திரைக்குப் பின்னால் இயக்கியவர்கள் இவர்கள் தான் என்பதனை வெளியிடுவான்.இவற்றை திசை திருப்பவே முஸ்லிம்களின் கடைகள் தீயூட்டப் படுகின்றன. ஞானசார கைது செய்யப்பட்டால் பாரிய இனக்கலவரங்கள் வெடிக்கும் என அச்சமூட்டி எச்சரிக்கப் படுகின்றன. மீறியும் இன்றைய இவனுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு சாதகபாதகம் திடர்பில் முஸ்லிம்கள் அலட்ட வேண்டிய தேவையில்லை. காரணம் நமது அதீத மகிழ்ச்சி அவர்களுக்கு எரிச்சலை உண்டுபண்ணலாம்.

ஆகவே இது விடையத்தினை முஸ்லிம்கள் புத்திசாதுர்யமாகவும் பொறுமையாகவும் கையாள்வதே சிறப்பாகும். எம்மைப் பொறுத்தவரை கொடுப்பதும் எடுப்பதும் அல்லாஹ் ஒருவனே என்கின்ற ஈமானிய பலம் உள்ளவரை இது போன்ற சூழ்ச்சிகளினால் எம்மை எதுவும் செய்துவிட முடியாது. நாம் சூடேறி முறுக்கேறும் ஒவ்வொரு தருணமும் ஒவ்வொரு நல்ல பெளத்தனும் ஞானசாரரின் இனத்துவேச போதனைக்கு ஆட்படுகின்றான் என்பதனை சிரத்தையோடு புரிந்துகொள்ள வேண்டும்.

Shifaan Bm
மருதமுனை.
ஞானசார நாடகம்? திரைக்குப்பின்னால் ? ஞானசார நாடகம்? திரைக்குப்பின்னால் ? Reviewed by Madawala News on 5/24/2017 11:11:00 AM Rating: 5