Kidny

Kidny

இனவாதிகள் எம்மை குறிவைப்பதற்கு முஸ்லிம்களாகிய நாமே காரணம்...!


இன்று இலங்கையில் முஸ்லிம்களை குறிவைத்து நடக்கும் இனவாத தாக்குதல்களுக்கும், எதிர்ப்புகளுக்கும் மூலவேர் எது என்று நாம் சிந்திக்க துவங்கினோமானால் அதற்கு நாமும் ஒரு காரணம்தான் என்பதை புரிந்து கொள்ளமுடியும்.

அதற்கு இந்தியாவின் தமிழ் நாட்டு அரசியலைபற்றியும் கொஞ்சம் சீர்தூக்கி பார்க்கவேண்டும் அப்போதுதான் நமது நாட்டு அரசியலில் ஏற்பட்ட குறைபாடுகளுக்கு அர்த்தம் கண்டுபிடிக்க முடியும். 

இன்று தமிழ்நாட்டு அரசியலை பொருத்தவரை அங்கே ஒருகோடிக்குமேல் முஸ்லிம் மக்கள் வாழ்ந்தாலும், தமிழ்நாட்டின்  சட்டசபைக்கு முஸ்லிம்கள் தரப்பாக யாரும் சட்டசபை உறுப்பினராகவோ அமைச்சராகவோ கோலோச்சிய வரலாறுகளை காணமுடியவில்லை, அதனால் முஸ்லிம்கள் என்ற காரணத்தினால் அபிவிருத்தியிலும் உரிமையிலும் நாங்கள் பின்தள்ளப்படுகின்றோம் என்று போராடுவதற்கு பதிலாக  தாழ்த்தப்பட்டோர் என்ற ரீதியில் எல்லா இனமக்களையும் சேர்த்தே போராடுவதை நாம் அவதானிக்கலாம்.

இருந்தாலும் தாழ்த்தபட்ட சமூகம் என்ற ரீதியில் எல்லா இன மக்களும் சேர்ந்து இடஒதுக்கீடு வேண்டும் என்று ஒற்றுயாக போராடி வருகின்றார்கள்.அங்கே முஸ்லிம் தமிழ் என்ற இனக்கலவரங்கள் பெரிதாக ஏற்படுவதில்லை.

ஒன்று இரண்டு இடங்களில் அப்படி ஏற்பட்டாலும் உடனே அதனை தடுத்துவிடுவார்கள்,அதே நேரம் பி.ஜே.பி போன்ற இனவாதிகள் அங்கே தீய கருத்துக்களை பரப்பி வந்தாலும் அதனை அந்த பெரும்பாண்மை மக்கள் ஏற்றுக் கொண்டதாக தெறியவில்லை, அதனால் ஒட்டு மொத்தமாக தமிழர்களையும் முஸ்லிம்களையும் மூட்டி விட்டு கூத்துப்பார்க்கும் விடயம் தமிழ் நாட்டில் தோல்வியே கண்டுவருவதை நாம் அவதானிக்கலாம்.

இதற்கு காரணம் என்ன என்று நாம் ஆராய்ந்துபார்த்தால் இதற்குறிய விடையை கண்டுகொள்ளலாம். தமிழ் நாட்டை பொறுத்தவரை அங்கே முஸ்லிம்கள் தனிக்கட்சி வைத்திருந்தாலும் அதனை இனங்கிய அரசியல் மூலமாகவே செயல்படுத்திவருகின்றனர், தி.மு.க என்றும், அ.தி.மு.க என்றும் வேறு கட்சிகள் என்றும் மட்டுமே எல்லா மக்களும் பிரிந்து நின்று வாக்களிப்பார்கள் அதனால் கட்சி ரீதியாகத்தான் மக்களை பிரித்து பார்ப்பார்ளே தவிர, இனரீதியாக பிரித்துப் பார்க்கமாட்டார்கள் இதனால் தேர்தல் காலங்களில் இனரீதியான துவேசப் பேச்சிக்களை அந்த தமிழ் நாட்டில் காணமுடிவதில்லை. அதனால் இனஒற்றுமைக்கு அங்கே பெறுமட்டுக்கு பங்கம் ஏற்படுவதில்லை.

ஒரு கட்சிக்காரனான கந்தசாமிக்கு இன்னொரு கட்சிக்காரனான இஸ்மாயில் அடித்துவிட்டான் என்று சொன்னால் அவர்கள் அதனை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்றால் அ.தி.மு.காரன் அடித்துவிட்டான் அல்லது தி.மு.கா காரன் அடித்துவிட்டான் என்றுதான் பேசிக்கொள்வார்ளே தவிர, முஸ்லிம் அடித்துவிட்டான் அல்லது தமிழன் அடித்துவிட்டான் என்று அவர்கள் பேசிக்கொள்வதில்லை, அதனால் பாமர மக்களுக்குள் இனரீதியான வேறுபாடுகள் அங்கே தோன்றுவதில்லை இது ஒரு ஆரோக்கியமான விடயமாக அந்த மக்களுக்கு இருக்கின்றது.

கட்சிகளினால் உதவிகள் வழங்கப்படும்போதும், எனது கட்சிக்காரன் என்றுதான் பார்ப்பார்களே தவிர, எந்த இனம் என்று பார்க்கமாட்டான், இதனால் அந்த மக்கள் இனரீதியான குழப்பங்களுக்கு பெருமட்டும் ஆளாவதில்லை, இருந்தாலும் அரசாங்கங்களினால் சில விடயங்கள் நடந்தாலும் அதனை ஆர்ப்பாட்டங்களின் முலம் சரிகண்டுவிட முயற்சிப்பார்கள் இந்த விடயங்களை பெரும்பாண்மை தமிழ் மக்கள் கண்டுகொள்வதேயில்லை என்பதே உண்மையாகும்.

இதனால் தமிழ் நாட்டு அரசியலில் முஸ்லிம் மக்கள் கோலோட்ச முடியாது விட்டாலும், மறுபக்கம் பெரும்பாண்மை மக்களுடன் அன்யோன்னியமாக வாழ்வதை நாம் கண்கூடாக காணலாம்.

இதே போன்றுதான்..முன்னய காலங்களில் இலங்கையிலும் முஸ்லிம் மக்கள் பெரும்பாண்மை சிங்கள மக்களுடன் அரசியல் விடயங்களில் இனரீதியாக பிரிந்து நடந்து கொள்ளாமல் இனங்கிய அரசியலை செய்துவந்தார்கள், அதன் மூலம் பெரும்பாண்மை சிங்கள மக்கள் மத்திலும், அரசியல் வாதிகள் மத்தியிலும் இனவாத கருத்துக்கள் பெரிதாக அன்று தோன்றவில்லை, ஆனால் சிங்கள அரசியல் வாதிகளின் திட்டமிட்ட இனவாத செயல்பாடுகள் இருந்துவந்தது என்னமோ உண்மைதான், அதனை அன்றய முஸ்லிம் சமூக அரசியல் வாதிகள் யாருக்கும் நோகாமல் இயன்றளவு பேசிதீர்க்க முற்பட்டார்கள், அதனை சிங்கள பாமர மக்கள் கண்டு கொள்ளவே இல்லை என்பதே உண்மையாகும்.

அதற்கு இன்னுமொரு காரணமும் இருந்தது, தேர்தல் காலங்கள்தான் வாக்குகளை பெறுவதற்காக இனரீதியாக குரோதத்தை வளர்க்கும் காலங்களாகும்.
அந்த காலங்களில் சிங்கள அரசியல் வாதிகளோ அல்லது முஸ்லிம் அரசியல் வாதிகளோ துவேசமான கருத்துக்களை கூறுவதில்லை காரணம் எல்லா இன மக்களும் அவருடைய ஆதரவாளர்களாக இருப்பதேயாகும்.  அதனால் சிறுபாண்மையான முஸ்லிம்களுக்கே இந்த அணுகுமுறை லாபமாக அமைந்து வந்தது எனலாம்.

இப்படியான செயல்பாடுகளின் மூலம் லாபமும் இருந்தது நஸ்டமும் இருந்தது ஆனால் லாபம்தான் அதிகமாக இருந்தது. இந்த நேரத்தில்தான் முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக ஒன்றுசேர வேண்டும் என்றும், முஸ்லிம்களுக்கு தமிழர்களினாலும், சிங்களவர்களினாலும் அநியாயங்கள் நடக்கின்றது என்ற கூறினார்கள்.  நாம் ஒன்று சேர்ந்தால்தான் இப்படியான பிரச்சினைகளை தனித்துநின்று குரல் கொடுத்துவெற்றியடைய முடியும் என்ற அவர்களின் கருத்து முஸ்லிம் மக்கள் மத்தியிலே விதைக்கப்பட்டது.

அந்த விடயத்தின் நன்மை தீமைகளை ஆழ்ந்து ஆராய்ந்து பார்க்கும் நிலையில் அன்று முஸ்லிம் மக்கள் இருக்கவில்லை, அவர்களுக்கு இந்த கருத்து சரியாக பட்டதினால் பெரும்பாண்மை கட்சிகளுக்கு வாக்களித்து பழகிய மக்கள் எங்கள் இனக்கட்சி என்ற என்னத்தில் ஒன்றுசேர்ந்து வாக்களித்தார்கள்.

இது பார்ப்பதற்கும் கேட்பதற்கும் நன்றாக இருந்தாலும் பின்னாலில் இந்த நடவடிக்கை முஸ்லிம்களை பெரும்பாண்மை மக்களிடமிருந்து நிரந்தரமாகவே பிரித்துவிடும் இந்த பிரிவினை இனவாதிகளுக்கு தீனியாக அமைந்துவிடலாம், அதுமட்டுமல்ல பாமர சிங்கள மக்களிடமும் இந்த நோய் பரவலாம் என்ற தீர்க்க தரிசனத்தை அன்றய முஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம் மக்களை நோக்கி கூறியிருந்தார்கள், அந்த கூற்றுக்கள் எல்லாம் காற்றோடு கரைந்துவிட்டது.

முஸ்லிம்கள் முஸ்லிம்களுக்கு வாக்குகளை கொடுக்கலாம் என்றால் ஏன் நாங்கள் சிங்கள இன வேட்பாளருக்கு வாக்கு போடக்கூடாது என்று அவர்களை சிந்திக்க வைத்தவர்கள் நாங்கள்தான். அதனால் இன்று என்ன கொடுமைகளை நாம் அனுபவிக்கின்றோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
இப்போது விடயத்துக்கு வருவோம்...

அதன் பிற்பாடு சிங்கள அரசியல்வாதிகளின் வீடுகளில் சிங்கள மக்கள்தான் நின்றார்களே தவிர அங்கே ஒரு முஸ்லிம் மகனும் நிற்கவில்லை, அதன் காரணமாக சிங்களவன் சிங்களவன்தான் முஸ்லிம் முஸ்லிம்தான் என்ற நிலை தோன்றிவிட ஆரம்பித்துவிட்டது என்பதே உண்மையாகும்.

அதன் பிற்பாடு சிங்களபகுதிகளிலே வசிக்கும் முஸ்லிம்களை இனவாதிகள் இலக்குவைத்தாலும் சிங்கள அரசியல்வாதிகள் கண்டுகொள்ளாமல் இருந்து விடுகின்றார்கள். இதனால் முஸ்லிம்கள் (சப்பவும் முடியாமல் துப்பவும் முடியாமல்) திண்டாடிக்கொண்டிருக்கின்ற நிலையே இன்றும் தொடர்கின்றது.

இப்படியான நிலைவரும் போது நமது வாக்குகளை பெற்றுச் சென்ற முஸ்லிம் அரசியல் வாதிகள் பஞ்சோந்திகளைப்போல் ஓடி ஒழிந்து கொள்கின்றார்கள் இதனால் முஸ்லிம் சமூகம் சொல்லொன்னா துயரத்தை கண்டுவருகின்றது. அரசியல் விடயங்களில்,
(அரசனும் இல்லை புரிசனும் இல்லை) என்ற நிலைதான் நமது முஸ்லிம்களின் நிலை என்பதை நாம் யாதார்த்தமாக இன்று கண்டும் பார்த்தும் வருகின்றோம்.

இந்த விடயங்களை சிங்கள மக்கள் மத்தியில் வசிக்கும் முஸ்லிம் மக்களும் இப்போது நன்றாகவே உணர்ந்துவருகின்றார்கள், அதனால்தான் கடந்த மாகாணசபை தேர்தலிலே பதுளை மக்கள் நமது முஸ்லிம் கட்சிகளுக்கு தகுந்த பாடத்தை கற்பித்திருந்தார்கள்.

பிரச்சினைகள் வரும்போது தங்களின் தனித்துவத்தின் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தரவேண்டிய இந்த கூத்தாடிகள் பதவிக்கும் பட்டத்துக்கும் அடிமைப்பட்டவர்களாக இருப்பது மட்டுமல்ல, தங்களுடைய பதவிகளை காப்பாத்துவதற்கு அரசாங்கங்களிடம் பச்சோந்திகளைப்போல் நடந்து கொள்கின்றார்கள்.

தேர்தல் காலங்களில் இந்த பச்சோந்திகள், எங்களுக்கு வாக்குபண்ணுங்கள் நாங்கள் உங்களுக்கு பாதுகாப்பாயிருப்போம் என்று கூச்சலிடுவார்கள், ஆனால் வெற்றியடைந்து சென்றதன் பிற்பாடு (பழய குருடி கதவை திரடி) என்ற நிலைக்கே சென்றுவிடுகின்றார்கள்.

இவர்களும் ஒரு இனத்துவேசிகள்தான், வாக்குகளுக்காக முஸ்லிம்களை உசிப்பேத்திவிட்டு, தங்களது காரியங்களை சாதித்துக்கொள்ளும் நரகவாதிகள்தான் இவர்கள் என்பதை நமது சமூகம் அறியத் தவறுகின்றது என்பதே உண்மையாகும்.

இன்று இனவாதிகள் முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழிப்பதற்கு முயற்சித்து வருகின்றார்கள், அதன் முதற் கட்டமாகவே பெரிய பெரிய கடைகளுக்கு தீவைத்து வருகின்றார்கள், இந்த செயல்பாட்டை நமது வீரர்களான முஸ்லிம் அரசியல் வாதிகளும், அரசாங்கமும் கண்டுகொள்வதாகவே தெறியவில்லை இந்த செயல்பாடுகள் எங்கே கொண்டுபோய் எம்மை நிறுத்தும் என்று, எமது முஸ்லிம் சமூகம் உணராதவரை நமது சமூகத்தின் நிலை மிகவும் பாரதூரமானதாகவே இருக்கும் என்பதே உண்மையாகும்.

எம்.எச்.எம்.இப்றாஹிம்.
கல்முனை.
இனவாதிகள் எம்மை குறிவைப்பதற்கு முஸ்லிம்களாகிய நாமே காரணம்...! இனவாதிகள் எம்மை குறிவைப்பதற்கு முஸ்லிம்களாகிய நாமே காரணம்...! Reviewed by Madawala News on 5/22/2017 03:14:00 PM Rating: 5