tg travels

கல்விப்புலத்தின்; நியமனங்கள் அர்த்தமுள்ளதாக்கப்படுமா?



- எம்.எம்.ஏ.ஸமட்-
கல்வி என்ற சொல்லுக்கு பல வரைவிலக்கணங்கள் காணப்படுகின்றன. பொதுவாக பிள்ளைகளில் காணப்படும் ஆற்றல்களை வழிப்படுத்துவது அல்லது வளர்க்கும் செயற்பாடு கல்வி எனப்படுகிறது.

நவீன கல்வித்துறையின் சவால்களுக்கு எதிர்நீச்சல் போடும் மாணவ சமுதாயத்தை கட்டியெழுப்பும் நோக்குடன், இக்கல்வியைத்தரத்தை விருத்தி செய்து மேம்படுத்துவதற்காக கல்வித்துறையில் பல நியமனங்கள்; காலத்திற்குக்காலம் வழங்கப்படுகின்றன. இருப்பினும், இந்நியமனங்கள் கல்வித்துறையில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது என்பது ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டியதாகும்.

கல்விச் செயற்பாட்டில் ஒரு முனையில் கற்போனாகிய மாணவரும்  மறுமுனையில் கற்பிப்பவரான ஆசிரியர்களும், அதிபர்களும் ஏனைய கல்வித்துறைசார் அதிகாரிகளும் காணப்படுகின்றனர். இரு முனைகளிலுமுள்ளோர் விழுமியங்களைக் கடைபிடித்து ஆரோக்கியமாக செயற்படுகின்றபோதுதான் கல்வியில் எதிர்பார்க்கப்படுகின்ற இலக்குகள் வெற்றிகரமாக அடையப்படுவதோடு விழுமியங்களை மதிக்கின்ற  சமூகமொன்றையும் தோற்றுவிக்க முடியும்.

கல்வியின் இலக்குகளைத் தொடுவதற்கும் பரீட்சைகளில் சிறந்த அடைவு மட்டங்களை மாணவர்கள்  பெறுவதற்கும் கற்பிப்போராகிய ஆசிரியர்கள் எந்தளவுக்கு முக்கியத்துவம் வகிக்கிறார்களோ அந்தளவுக்கு, கல்வியின் இலக்குகளை அடைவதற்கும், சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும், விழுமியங்களைக் காக்கும் எதிர்கால சந்ததியினரை உருவாக்குவதற்கும் முக்கிய வகிபங்கை வகிக்க வேண்டி பொறுப்பு ஆசிரியர்கள், அதிபாகள்;, கல்வி நிர்வாக அதிகாரிகள், ஏனைய கல்வித்துறைசார் நியமனங்களைப் பெற்றவர்கள் பக்கமும் காணப்படுகின்றன என்பதை மறுக்க முடியாது.

ஒரு மனிதன் அவனது வாழ்நாளில் பெறுக்கின்ற பதவியிலும் பொறுப்பிலும் அதிபர், ஆசிரியர் பதவிகளும்; அதன் பணிகளும் அமானிதங்கள் நிறைந்தவை. அந்த அமானிதமிக்க  பணிகளைச்; சுமந்தவர்களின் செயற்பாடுகளும் மனப்பாங்குகளும் மற்றவர்களுக்கு வழிகாட்டல்களாக அமையப்பெறுவதும் முக்கியமானதாகக் கருதப்படுவது அவசியம். ஏனெனில், சமகாலத்தில் ஒரு சில ஆசிரியர்களினதும், அதிபர்களினதும் அவர்களோடு சில கல்வி அதிகாரிகளினதும் செயற்பாடுகள் கல்விப்புலத்திற்கும் கற்றோருக்கும் அவமானத்தை ஏற்படுத்துவதாக அமைந்து விடுகின்றன.

அமானிதமிக்க முக்கிய பொறுப்பைச் சுமந்தவர்கள்; கல்வியினூடாக நாட்டிலும், சமூகத்திலும் மாற்றத்தைத் தோற்றுவிக்கவும,; அதற்கான வழிகாட்டல்களை வழங்கவும், நல்ல சமூகப் பிரஜைகளை உருவாக்கவும் வகிபங்காற்றுவது சமகாலத்தின் அதி முக்கிய தேவையாகவுள்ளது. அதிபர், ஆசிரியர் நியமனங்களைச் சுமந்தவர்களின் கல்விப்; பணி ஆரோக்கியமாகவும் நல்ல மனப்பாங்குகளுடனும் முன்னெடுக்கப்படுகின்றபோதுதான் அப்பணிகள் அழகும,; ஆரோக்கியமும் பெறுவதுடன் அர்த்தமுள்ளதாகவும் விளங்கும்.

கல்வித்துறையினரும்; பணிகளும்

கல்வித்துறiயின் பிரிவுகளுக்காக பலர் நியமிக்கப்படுகின்றனர். பாடசாலைகளை மையப்படுத்தி அதிபர் மற்றும் ஆசிரியர்கள் நியமனங்கள் வழங்கப்படுகின்றன. பாடசாலையொன்றில் கல்வியின் முனைகளாக இருக்கின்ற மாணவர்கள் கற்பவர்களாக, வழிநடத்தப்பட வேண்டியவர்களாக கருதப்படுகின்றவேளை, அதிபர்கள், ஆசிரியர்கள் என்போர் அரும்பணியொன்றின் கர்த்தாக்களாக பாடசாலையிலும,; கல்விச் சமூகத்திலும் கணிக்கப்படுகிறார்கள். ஐக்கிய நாடுகள் சபையின் கல்விக்கான அமைப்பான யுனஸ்கோவின் சாசனத்தில் ஆசிரியர் என்ற சொல்லுக்கு பாடசாலையில் மாணவ, மாணவியரின் கல்வி தொடர்பான பொறுப்பினைத் தாங்குபவர் என்று பொருள் வழங்கப்பட்டுள்ளது. அப்பொறுப்பு அதிபர்களுக்கும் உரித்தானதாக அமைகிறது.  

சமூகத்தில் உள்ள எல்லாப் பதவிகளை விடவும் அதிபர், ஆசிரியர் பதவி என்பது போற்றத்தக்கது. ஏனெனில், சமூகத்திலுள்ள ஒவ்வொரு வரும் ஏதோ ஒரு பதவி வகிப்பதற்கு அதிபர், ஆசிரிய சமூகத்தின் வகிபங்கு இன்றியமையாதது.

இவ்வாறான வகிபங்கைக் கொண்ட பதவிகள் பணம், பொருள் ஈட்டக் கூடியதொரு தொழிலாக அல்லாது ஒரு ஆதமாந'த பொறுப்பாக கருதப்படும்போதுதான் அப்பொறுப்புக்கள் கொண்டவர்களினால் அப்பணிகளின்; முழுமையான அடைவுகளை அடைந்துகொள்ள முடியும்.

அதிபர்,ஆசிரிய பணி என்பது புனிதமான பணி என்ற மனப்பாங்கு மாறி பணத்தை சம்பாதிக்கும் ஒரு தொழில் என்ற மனப்பாங்கிற்கு சில அதிபர், ஆசிரியர்கள் தங்களை மாற்றிக்கொள்வதை சமகாலத்தில் காணக் கிடைப்பது கவலையளிக்கக் கூடியதொன்றாகும்.

இதில் ஒன்றுதான் பாடசாலைகளில் பிள்ளைளைச் சேர்ப்பதற்காக சில அதிபர்கள் முறையற்ற வழிகளில் பணத்தைக் கோருவதும் அவ்வாறு கோரியவர்கள் கையுமெய்யுமாக அகப்பட்டு அவமானப்படுவதும,; இதனால் கௌரவிக்கப்பட வேண்டியவர்கள்; அவகௌரவத்திற்கு உள்ளாகவேண்டி ஏற்படுவதும் என்ற சூழ்நிலைகள் உருவாகின்றன. இது முழுக் கல்விச் சமூகத்திற்கும்; தலைக்குனிவைத் தோற்றுவிக்கிறது..

கல்வி அமைச்சின் 2013ஆம் ஆண்டுக்கான புள்ளி விபரங்களின் பிரகாரம் நாடு பூராகவுமுள்ள சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகள் அடங்களாக 10,012 பாடசாலைகள் காணப்படுகின்றன. இப்பாடசாலைகளில் அதிபர்கள், பிரதி அதிபர்கள் உதவி அதிபர்கள் என பலர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களோடு இலங்கை கல்வி நிர்வாக சேவைக்காகவும், இலங்கை ஆசிரியர் கல்வியிலாளர் சேவைக்காகவும் ஆட்களை நியமிப்பதற்கான போட்டிப் பரீட்சைகள் நடைபெற்று நேர்முகப் பரீட்சையும் நிறைவடைந்துள்ளன. நியமனங்களும் விரைவில் வழங்கப்படவுள்ளன. ஆனால் இந்நியமனங்கள் கல்வித்துறையின் இலக்குகளை அடைவதற்கு அர்த்தமுள்ளதாக்கப்பட வேண்டும்.

அத்தோடு. 226,982 ஆசிரியர்கள் கற்பித்தல் பணியில் உள்ளனர். இவர்களில் 63,123 ஆண்களும் 163,860 பெண்களும் அடங்குவர். இவர்களில் பட்டதாரி ஆசிரியர்கள் 90,515 பேரும், பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் 129,686 பேரும், பயிற்சி பெறாதவர்கள் 4,388 பேரும் பயிலுனர் ஆசிரியர்கள் 2,394 பேரும் உளளனர்.

நாட்டிலுள்ள ஏறக்குறையை 10 ஆயிரம் பாடசாலைகளில் நியமிக்கப்பட்டுள்ள அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பல வசதிகளும் விடுமுறைகளும் வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில், சமயோசித விடுமுறை, சுகவீன விடுமுறை, பிரசவ லீவு, ஓய்வு விடுமுறை, விஷேட விடுமுறை, விபத்து விடுமுறை, கடமை விடுமுறை, படிப்பு விடுமுறை, பல்கலைக்கழகத்திற்கான விடுமுறை, கல்விப் பட்டப்பின் படிப்பு விடுமுறை, இலங்கைக்கு வெளியே விடுமுறை, குறுகிய விடுமுறை, அரைநாள் விடுமுறை, பரீட்சை விடுமுறை, 'இத்தா' விடுமுறை,  ஆசிரியர் உதவியாளர் விடுமுறை, பெற்றுக்கொள்ளாத விடுமுறைக்கான சலுகைகள் என பல விடுமுறைகளும் சலுகைகளும் அதிபர், ஆரசியர் நியமனம் பெறுவோருக்கு வரப்பிரசாதமாக அமைகிறது. ஆனால் இவ்வரப்பிரசாதங்களைப் பெற்றுள்ளவர்கள் அவர்களின் பொறுப்புக்களை முறையாக நிறைவேற்றுகிறார்களாக என்றால் அது கேள்விக்குறியாகவே காணப்படுகின்றன.

ஏனெனில,; பாடசாலைக் கலைத்திட்டத்தில் முக்கிய பாடங்களாகக் கருதப்படும் பாடங்களில் கடந்த வருட க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றியவர்களில் பலர் சித்தியடையத் தவறியுள்ளனர். வடக'கு மற்றும்  கிழக்கு மாகாணங்களின் கடந்த க.பொ.த. சாதாரதரப் பரீட்சை அடைவகள் வீழ்ச்சியை அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மாணவர்களின் இந்த அடைவுமட்ட நிலை ஏன் ஏற்பட்டிருக்கிறது. தங்களது பட்டங்களை அதிகரித்துக்கொண்டு;, பதவி உயர்வுகளையும் சம்பள உயர்வுகளையும் எதிர்பார்த்து அதற்காக முயற்சிக்கின்ற கல்வித்துறையில் நியமனம் பெற்றவர்கள், மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காகவும் அவர்களின் பரீட்சை அடைவுமட்ட விருத்திக்காகவும், கல்வித்துறையின் இலக்குகளை அடைவதற்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதும் அவசியமாகும். அப்போதுதான் அந்த நியமனங்கள் அர்த்தமாக்கப்படும்.

ஏனெனில். நாட்டின் கல்வி விருத்தியை முதன்மைப்படுத்தி அரசாங்கம் பல பில்லியன் ரூபாய் நிதியினையினைச்; செலவு செய்கிறது. ஒரு நாட்டின் முதுகெலும்பாக இருப்பது கல்வித்துறைதான். கல்வித்துறை வளர்ச்சியடைந்தால்தான் ஏனைய துறைகளை வளர்ச்சியடைச் செய்ய முடியும். பாடசாலைக் கல்வியின் தரமும், வளர்ச்சியும், மேம்பாடும்தான் ஒரு நாட்டின் மொத்த கல்வி வளர்ச்சியை உச்சநிலைக்கு அடையச் செய்கிறது. அதற்காக வேண்டித்தான் பாடசாலைக் கல்வி விருத்திக்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.

அரசாங்கத்தின் இந்நடவடிக்கைகளில் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டிய முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் கல்வித்துறையில் நியமனம்பெற்ற கல்வி நிருவாக உத்தியோகத்தர்கள், அதிபர்கள், ஆசிரயர்கள் ஆவர். இவர்களின் தியாக மனப்பாங்குடனான செயற்பாடுகளே அரசாங்கம் எதிர்பார்க்கும் கல்வித்துறை இலக்குகளை அடைச் செய்யும் என்பதும் நிதர்சனமாகும்.

அதிபர், ஆசிரியர்களும் பெற்றோரும்

ஒவ்வொரு பெற்றோரும் தாம் எத்தகைய தொழில் புரிந்தாலும் தனது பிள்ளை கல்வி கற்று சமூகத்தில் உயர் பதவி வகிக்க  வேண்டும் என்ற எதிர்பார்புடன்தான் வாழ்நாட்களை நகர்த்திக் கொணடிருக்கிறார்கள். ஒரு பிள்ளையை தரம் ஒன்றில் அனுமதிப்பது முதல் அப்பிள்ளையின் பாடசாலைக் கல்வி வாழ்க்கை நிறைவுறும் வரையான காலம் வரை ஒவ்வொரு பெற்றோரும் பாடசாலை அதிபரிலும், ஆசிரியர்களிலும் முழு நம்பிக்கை வைக்கின்றனர்.

பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக பாடசாலைகளை, அதிபர், ஆசிரியர்களை நம்பி ஒப்படைக்கும் பெற்றோர் பிள்ளைகளுக்காக இரவு பகல் பாராது உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இத்தகைய பெற்றோர்களின் நம்பிக்கை எத்தனை அதிபர், ஆசிரியர்களினால் காப்பாற்றப்படுகிறது என்ற கேள்வி அதிபர், ஆசிரியர்களினால் சமூக மாற்றத்தை எதிர்பார்த்திருக்கின்றவர்கள் மத்தியில் எழுகிறது.

எத்தனை அதிபர்கள் பாடசாலையின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார்கள். ஒரு சில அதிபர்கள் பாடசாலையின் வளர்ச்சிக்காக தங்களை அர்ப்பணித்து செயற்பட்டாலும,; அவ்வாறானவர்கள் விரல்விட்டு எண்ணக் கூடியவர்களாகவே உள்ளனர். ஆனால், பலர் பாடசாலை மூலம் தங்களை எவ்வாறு வளர்த்துக்கொள்ளலாம் என்ற முயற்சியில் ஈடுபடுவதும் அதனால் அசௌகரியத்திற்குள்ளாகுவதும் என்ற நிழ்வுகள் பல ஊடகங்கள் வாயிலாக வெளிவரும் செய்திகள் மூலம் அறியக் கூடியதாகவுள்ளது.

அத்தோடு, தங்களுக்;கு வழங்கப்படும் நேர அட்டவணைக்கு ஏற்ப எத்தனை ஆசிரியர்கள் குறித்த தவணைக்குள் தங்களால் நிறைவு செய்யப்பட வேண்டிய பாட அலகுகளை பாடசாலைவேளையில் நிறைவு செய்கிறார்கள்?

பாடசாலை நேர காலத்திற்குள் நிறைவு செய்யப்பட வேண்டிய பாட அலகுகள் தனியார் கல்வி நிறுவனங்களில் மேலதிக வகுப்புக்களில் நிறைவு செய்யப்படுவதாக கூறப்படுவதையும் கவனத்திற்கொள்ள வேண்டியுள்ளது. இதனால்தான் இலவசக் கல்வி கேள்விக குறியாக்கப்பட்டுள்ளதுடன் கல்வித்துறையானது வருமானமிக்க வியாபாரமாகவும் மாற்றப்பட்டு வருவதை தற்காலத்தில் அவதானிக்க முடிகிறது.

இருப்பினும், அக்கால ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பணி மாத்திரமே பொறுப்பாக இருந்தது. ஆனால் இக்கால பாடசாலை ஆசிரியர்கள் பலர் லிகிதர் பணியையும் புரிய வேண்டிய கட்டாய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். அவர்கள் மீது அதிகாரிகளினால் அதிகளவிலான ஆவணச் சுமை சுமத்தப்பட்டுள்ளது என்பதையும மறைக்க முடியாது. ஒரு சில நிறுவனங்களினால் செய்யப்படுகின்ற தரவு திரட்டும் பணிகளைக் கூட ஆசிரியர்களைக் கொண்டு நிறைவேற்றுவதற்கு கல்விப்புலத்திலுள்ள சில அதிகாரிகள் முயற்சிப்பதானது அவ்வாசிரியர்களை அழுத்தததிற்குள்ளாகியுள்ளதுடன் கற்பித்தல் நடவடிக்கைகளையும் பாதித்துள்ளதுடன் இத்தகையவர்களின் செயற்பாடுகளுக்கு ஒரு சில பாடசாலை அதிபர்களும் துணைபோவது கவலையளிப்பதுடன் எதிர்காலத்தை ஆரோக்கியமற்றதாக மாற்றும் என்பதையும் சுயாதீனமாக சுட்டிக்காட்டுவது அவசியமாகும்.

இருந்தாலும், மாணவர்கள் நலன்களிலும், பாட அலகுகளை நிறைவு செய்வதிலும் தங்களுக்குரிய பொறுப்பையும் ஆசிரியர்கள் புரியக் கூடியவர்களாக இருக்க வேண்டும் என்ற வேண்டுதல்களையும் மறுக்க இயலாது.

பிள்ளைகளை மேலதிக வகுப்புக்களுக்கு அனுப்புவதால் பெற்றோர்களின்  பொருளாதாரச் சுமை மேலும் அதிகரிக்கிறது. ஏனெனில், ஒவ்வொரு மாணவரும் மேலதிக வகுப்புக்களுக்கு பணம் செலுத்தியே செல்ல வேண்டியுள்ளது. மேலதிக வகுப்புக்கள் கல்வியை பண மையப்படுத்தியுள்ளது. பணத்திற்கு மட்டும் முக்கியத்துவம் வழங்கி கல்வியை ஒரு வியாபாரமாக கருதி போதிக்கும் ஆசிரியர்கள் சமகாலத்தில் அதிகரித்திருப்பது மாத்திரமின்றி, மாணவர்கள் மத்தியில் ஆசிரியர்களுக்கான கௌரவமும் இழந்து வருவதையும், விழுமயங்கள் மீறப்படுவதையும் காண முடிகிறது.

இதனால், பாடசாலை நேரங்களில் மேலதிக வகுப்புக்களை நடாத்துவது முற்றுமுழுதாக தடை செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கதொன்றாவுள்ளது.

அரச சேவையில் அதிகம் பேசப்படும் ஒரு சேவையாக ஆசிரியர் மற்றும் அதிபர் சேவை காணப்படுகிறது. ஆசிரியர்களும் அரச ஊழியர்கள் என்ற வரையறைக்குள் அடங்குவதால் அவர்களுக்கும் காலத்திற்குக் காலம் இடமாற்றம் வழங்கப்படுகிறது. ஆனால், அதிபர், ஆசிரியர் இடமாற்றம் காலத்திற்குக் காலம் பேசுபொருளாக மாறுவதுடன் பல தடவை போரட்டங்களையும் பகிஷ்கரிப்புக்களையும் தோற்றுவித்திருக்கிறது. இந்நிலையானது கல்வித்துறை எதிர்பார்ப்புக்களைப் பின்னடையச் செய்துள்ளது.

நியமனங்களும் இலக்குகளும்

பாடசாலை மட்டத்தில் காணப்படும் வெற்றிடங்களுக்கு ஏற்ப எழுத்துப் பரீட்சை, நேர்முகப் பரீட்சை என்பவற்றினூடாக ஆசிரியர்கள், அதிபர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். ஓவ்வொரு வருடமும் கல்வியியற் கல்லூரிகளிலிருந்து ஆசிரியர் முன்பயிற்சி டிப்ளோமா கற்கை நெறியினை நிறைவு செய்து வெளியேறுகின்றவர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படுவதோடுது, பட்டதாரி ஆசிரியர்களும் தேவைக்கேற்ப பரீட்சை மற்றும் நேர்முகத் தேர்வினூடாக ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனர். ஆனால், அதில் பலர் நியமிக்கப்படும் பாடசாலைகளில் பணியில் ஈடுபடுவதற்கான மனப்பாங்கை ஏற்படுத்திக் கொள்ளாமால் உள்ளனர்.

அதேபோன்று, பல வருடங்கள் ஒரே பாடசாலையில் அதிபராக, ஆசிரியராக, பதவி வகிப்போருக்கு இடமாற்றம் வருகின்ற போது அவர்களிடத்திலும் இடமாற்றம் வழங்கப்படுகின்ற பாடசாலைக்குச் சென்று தங்களது பணிகளைப் புரிவதற்கான மனப்பாங்கு ஏற்படுவதாகவில்லை. தான் பிறந்த ஊரிலுள்ள பாடசாலையில் கல்வி கற்று, அதே பாடசாலையில் அதிபராக, ஆசிரியர் நியமனத்தைப் பெற்று, அந்த பாடசாலையிலிருந்தே ஓய்வு பெறும் மன நிலையில்தான் பலர்; தற்போதும் உள்ளமை சுட்டிக்காட்டப்பட வேண்டிதாகும்.

இந்நாட்டிலுள்ள 25 மாவட்டங்களில் சில மாவட்டங்கள் கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களாக நிர்ணைக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் பல கஷ்டப் பிரதேச பாடசாலைகள் என்றும் அதிகஷ்டப்  பிரதேச பாடசாலைகள் என்றும் வகுக்கப்பட்டுள்ளன. இப்பாடசாலைகளில்; கல்வி பயிலும் மாணவர்களுக்கும் போதிப்பதற்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். இப்பாடசாலைகள் சிறந்த நிலையை அடைவதற்கு அவற்றை வழிநடத்தக் கூடிய அதிபர்கள் நியமிக்கப்பட வேண்டும். அவர்களை கண்காணித்து மேற்பார்வை செய்து ஆலோசனை வழங்கக் கூடிய ஏனைய கல்வித்துறை அதிகாரி;கள் நியமிக்கப்பட வேண்டும். அப்போதான் அப்பிரதேச மாணவர்களும் கல்வி கற்று வாழ்க்கையின் வெற்றிக் கொடியை எட்டும் வாய்ப்பு ஏற்படும்.

அந்த வகையில், அரசாங்கம் கல்வித்துறையில் எதிர்பார்க்கும் இலக்குகள் அடையப்பட வேண்டுமாயின், கல்வித்துறையில் வழங்கப்படுகின்ற நியமனங்கள் அர்த்தமாக்கப்பட வேண்டும். கல்வித்துறை நியமனங்கள் அர்த்தமாக்கப்பட வேண்டுமாயின், சகல பிரதேசங்களுக்குமான கல்வி நிர்வாக அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் எவ்வித வேறுபாடுகளுமின்றி நியமிக்கப்பட வேண்டும். அவ்வாறு நியமிக்கப்படுகின்றபோதுதான் கல்வித்துறையில் எதிர்பார்க்கப்படுகின்ற இலக்குகள் வெற்றிகரமாக அடையப்படும.; கல்வி இலக்குகள் வெற்றிகரமாக அடையப்படும்போதான் கல்வித்துறையில் வழங்கப்படுகின்ற நியமனங்களும் அர்த்தமுள்ளதாக்கப்படும்.

வீரகேசரி – 11.05.2017
கல்விப்புலத்தின்; நியமனங்கள் அர்த்தமுள்ளதாக்கப்படுமா? கல்விப்புலத்தின்; நியமனங்கள் அர்த்தமுள்ளதாக்கப்படுமா? Reviewed by Madawala News on 5/11/2017 11:31:00 PM Rating: 5