Ad Space avaiable

உத்தியோகபூர்வமில்லாத பொலிஸாக செயற்படப் போகிறோம் ; பொலன்னறுவை சோமாவதிக்கு விஜயம் செய்த ஞானசார தேரர் தெரிவிப்பு ..


இன்று ஞானசார தேரர் உள்ளிட்ட குழு பொலன்னறுவை சோமாவதியை அண்மித்த வணப்பிரதேத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.

அங்குள்ள முஸ்லிம்கள் அரசியல்வாதிகளின் அனுசரனையுடன் காடழிப்பு செய்து தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பௌத்த சின்னங்களை அழித்துள்ளதாகவும் அப்பிரதேசத்தை முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் அப்பிரதேசத்தை பார்வையிட தேரர்கள் குழு குறிப்பிட்டனர்.

அரசாங்கமும் அதிகாரிகளும் இது தொடர்பில் பாரமுகமாக இருப்பதால் எதிர்காலத்தில் அனைத்து இளைஞர்களையும் ஒன்றினைத்து உத்தியோகபூர்வமில்லாத பொலீசாராக மாறி இவற்றை பாதுகாக்கப்போவதாக  பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அங்கு மாணிக்கமடு விகாரை தொடர்பில்  கருத்து வெளியிட்ட ஞானசார தேரர் அல்லாஹ்வை அவமதிக்கும் வகையிலும் கருத்து வெளியிட்டுள்ளார்.
உத்தியோகபூர்வமில்லாத பொலிஸாக செயற்படப் போகிறோம் ; பொலன்னறுவை சோமாவதிக்கு விஜயம் செய்த ஞானசார தேரர் தெரிவிப்பு .. உத்தியோகபூர்வமில்லாத பொலிஸாக செயற்படப் போகிறோம் ; பொலன்னறுவை சோமாவதிக்கு விஜயம் செய்த ஞானசார தேரர் தெரிவிப்பு .. Reviewed by Madawala News on 5/14/2017 05:25:00 PM Rating: 5