tg travels

இன்று இரவு ஜனாதிபதி தலைமையில் சுதந்திரகட்சி அமைச்சர்களுடன் முக்கிய கலந்துரையாடல் ..


இன்று இரவு ஜனாதிபதி தலைமையில் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி அமைச்சர்களுக்கு இடையேயான விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக கொழும்பு அரசியல் உயர்மட்ட தகவல்கள் மடவளை நியுஸுக்கு தெரிவித்தன.

அமைச்சரவை மாற்றம் தொடர்பில் கடந்த இரு மாதங்களுக்கு மேல் அரசியல் மேடைகளில் பேசப்பட்டுவரும் நிலையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

அமைச்சரவை மாற்றம் ஒன்று எதிர்வரும் தினங்களில் இடம்பெறும் எனவும் அதற்கு அரசின் இரு தரப்புகளும் இணங்கியுள்ளாதாகவும் சுதந்திர கட்சி அமைச்சர் ஒருவர் இது தொடர்பில் வினவியபோது மடவளை நியுஸுக்கு குறிப்பிட்டார்.
இன்று இரவு ஜனாதிபதி தலைமையில் சுதந்திரகட்சி அமைச்சர்களுடன் முக்கிய கலந்துரையாடல் .. இன்று இரவு ஜனாதிபதி தலைமையில் சுதந்திரகட்சி அமைச்சர்களுடன் முக்கிய கலந்துரையாடல் .. Reviewed by Madawala News on 5/08/2017 07:20:00 PM Rating: 5