Kidny

Kidny

கிழக்கு மாகாணத்தில் கல்வித்துறை சார் தொழிற்சங்கங்கள் மௌனிக்கப்பட வைக்கப்படமட்டமையினால் ஆசிரியர்கள் அவதி


அபூ முஜாஹித்
கிழக்கு மாகாணத்தில் கல்வித்துறை சார்பான தொழிற்சங்கங்கள் மௌனிக்கப்பட்ட நிலையில் ஆசிரியர்கள் தொடர்ச்சியான இடமாற்றம் மற்றும் அதிகாரிகளின் தனிப்பட்ட பழிவாங்கல்களால் பாதிக்கப்பட்டு பல்வேறு மன அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளர்களும், கல்வி ஆர்வலர்களும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
 
கிழக்கு மாகாணத்தில் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம், இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம், இலங்கை ஜனநாயக ஆசிரியர் சங்கம், இலங்கை மகா ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் இயங்கிய போதும் ஆசிரியர்களின் நலன் பேணும் விடயத்தில் அவை பொடுபோக்குத்தனமாக நடந்து கொள்கின்றன.
 
இலங்கை ஆசிரியர் சங்கம், கிழக்கு தமிழர் ஆசிரியர் சங்கம், இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் என்பன அவ்வப்போது சில விடயங்களை சுட்டிக்காட்டுகின்ற போதும் ஏனைய சங்கங்கள் வாய்மூடி மெளினகளாக இருப்பதாக ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
 
கிழக்கு மாகாணத்தில் கல்வித்துறை சார் பிரச்சினைகளை சுட்டிக்காட்டுகின்ற தொழிற்சங்க தலைவர்களும், உறுப்பினர்களும், தனிநபர்களும் ஒரு வகையான அடக்கு முறைகளுக்கும், நெருக்கு வாரங்களுக்கும் உள்ளாக்கப்படுகின்ற நிலையும் காணப்படுவதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
 
அண்மைக்காலமாக கிழக்கு மாகாண கல்வித்துறைசார் பிரச்சினைகள் தொடர்பாக ஆளுனர், கல்வியமைச்சு போன்ற நிறுவனங்களுக்கு எழுதப்படும் கடிதங்களுக்கு எவ்வித பதில்களும் அனுப்பப்படுவதுமில்லை. நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுமில்லை.
 
தொழிற்சங்கங்கள் மௌனமாக்கப்பட்டதன் காரணமாகவும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் காணப்படாததன் காரணமாகவும், தொழிற்சங்கத்தலைமைகள் தமது தனிப்பட்ட தேவைகளுக்கு சங்கங்களை பயன்படுத்துவதன் காரணமாகவும் ஆசிரியர்கள் மன உளைச்சலுடன் கடமை செய்ய வேண்டியுள்ளது.
 
இதன் காரணமாக கிழக்கு மாகாணம் கல்வி அடைவ மட்டத்தில் ஒன்பதாவது இடத்தில் உள்ளதுடன் கிழக்கிலுள்ள கல்வி வலயங்கள் சோர்வடைந்த நிலையில் காணப்படுவதாக கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் கல்வித்துறை சார் தொழிற்சங்கங்கள் மௌனிக்கப்பட வைக்கப்படமட்டமையினால் ஆசிரியர்கள் அவதி கிழக்கு மாகாணத்தில் கல்வித்துறை சார் தொழிற்சங்கங்கள் மௌனிக்கப்பட வைக்கப்படமட்டமையினால் ஆசிரியர்கள் அவதி Reviewed by Madawala News on 5/15/2017 12:51:00 AM Rating: 5