tg travels

மோடியை தூக்கிச்சுமந்த போலி தமிழ் தேசியவாதிகளே இதற்கு என்ன கூறப்போகிறீர்கள் ..


இலங்கை வந்த இந்திய பிரதமர் மோடி மலையகத்துக்கு விஜயம் செய்து அங்கு இலங்கை மக்களுக்கான பல அன்பளிப்புகள் மற்றும் சலுகைகள் தொடர்பிலான  அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

தமிழ் நாட்டு விவசாயிகள் தமக்கான  சலுகைகளை பெற்றுக்கொள்ள தலைநகர் டெல்லியில் 41 நாட்களாக பிரதமர் அலுவலம். முன்னால் போராட்டம் நடத்தினார்கள். நிர்வாணமாக , சிறுநீர் அருந்தி இன்னும் பல விதமாக போராட்டம்  நடத்தியும் மோடியின் கண்கள் அவர்கள் மீது படவில்லை.

அண்மையில் ஒரு இந்திய குடிமகன் அரச மருத்துவமனையில் அம்புலன்ஸ் கிடைக்காமல் தனது மனைவியின் பிணத்தை பல கிலோமீற்றர் வரை தலையில் சுமந்து சென்ற வீடியோ உலக அளவில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது இது வெளிச்சத்துக்கு வந்த ஒரு சம்பவமே  இது போன்ற ஒரு நிலையில் இந்திய குடிமகன்கள் இருக்கு நிலையிலே எந்த ஒரு கைமாறும் இல்லாமல் நம் நாட்டோடு உள்ள பிரண்ட்ஷிப்புக்கு கைமாற இந்திய பிரதமர் பல வகையான  அன்பளிப்புகள் மற்றும் சலுகைகள் தொடர்பிலான  அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

இது ஒரு புறம் இருக்க மலையகத்தில் உரையாற்றிய இந்திய பிரதமர் மோடி..

"நீங்க‌ள் த‌மிழ்த் தாயின் புத‌ல்வ‌ர்க‌ள். ப‌ழ‌மையான‌ செம்மொழியான‌ த‌மிழைப் பேசுகிறீர்க‌ள். அத்துட‌ன் சிங்க‌ள‌ மொழியையும் பேசுகிறீர்க‌ள் என்ப‌து பெருமைக்குரிய‌ விட‌ய‌ம். மொழி என்ப‌து ச‌மூக‌ங்க‌ளை ஐக்கிய‌ப் ப‌டுத்துகிற‌து. ப‌ன்மொழிச் ச‌மூக‌ம் போல‌ சிற‌ந்த‌து வேறு இல்லை. 

ஜாத‌க‌க் க‌தைக‌ளிலும் ம‌ற்றைய‌ பௌத்த‌ நூல்க‌ளிலும், த‌மிழ் மொழியின் த‌ந்தையாக‌ க‌ருத‌ப் ப‌டும் அக‌த்திய‌ முனிவ‌ர் குறிப்பிட‌ப் ப‌டுகிறார்.  க‌ண்டி நாய‌க்க‌ ம‌ன்ன‌ர்க‌ள் ம‌துரை நாய‌க்க‌ர்க‌ளோடு திருமண‌த் தொட‌ர்பு வைத்திருந்தார்க‌ள். சிங்க‌ள‌மும், த‌மிழும் அர‌ச‌ க‌ரும‌ மொழிகளாக‌ இருந்த‌ன‌. இந்து, பௌத்த‌ ஆல‌ய‌ங்க‌ள் ச‌ம‌மாக‌ வ‌ழிப‌ட‌ப் ப‌ட்ட‌ன‌. இந்த‌ ஒற்றுமையையும் ந‌ல்லிண‌க்க‌த்தையும் மேம்ப‌டுத்த‌ வேண்டுமே த‌விர‌ பிரித்தாள‌க்கூடாது " என குறிப்பிட்டிந்தார்.

இலங்கை ரானுவத்தை சிங்கள ராணுவம் என்றும் இலங்கை கிரிக்கட் வீரர்களுக்கு தமிழ் நாட்டில் விளையாட அனுமதிக்க கூடாது என கோஷம் போட்டு ஆர்பாட்டம் செய்யும் தமிழ் நாட்டில் உள்ள போலி தமிழ் தேசியவாதிகளும் மோடியை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் ஈழத் தமிழ்த்தேசியவாதிகளும், இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்?

வேறு என்ன செய்வார்கள் வழமை போல கள்ள மௌனம் சாதிப்பார்கள்.

மோடியை தூக்கிச்சுமந்த போலி தமிழ் தேசியவாதிகளே இதற்கு என்ன கூறப்போகிறீர்கள் .. மோடியை தூக்கிச்சுமந்த போலி தமிழ் தேசியவாதிகளே இதற்கு என்ன கூறப்போகிறீர்கள் .. Reviewed by Madawala News on 5/12/2017 11:20:00 PM Rating: 5