tg travels

ஞானசாரவை கைது செய்வது போல் நாடகமாடுவதை நாம் சமூகம் நம்பத் தயாரில்லை.


நல்லாட்சி மலர்ந்தால் ஞானசாரவை நாய்க்கூண்டில் அடைப்போம் என சபதம் எடுத்து வந்தவர்கள் கடந்த இரண்டரை வருவடங்களாக ஞானசாரவின் அட்டூளியங்களுக்கு துணைபோய்விட்டு, நாட்டில் தேர்தல் ஒன்றை சந்திக்க வேண்டிய காலக் கட்டாயத்தில் இருப்பதால் ஞானசாரவை கைது செய்வது போல் நாடகமாடுவதை முஸ்லிம் சமூகம் நம்பத் தயாரில்லை.

கடந்த ஆட்சியை காரணம் காட்டி முஸ்லிம் சமூகத்திடம் யாசகம் கேட்டவர்களுக்கு தட்டு நிறைய வழங்கியது மிகப்பெரிய தவறு என்பதை முஸ்லிம் சமூகம் நல்லாட்சியின் நடவடிக்கைகளில் இருந்து புரிந்து கொண்டதுள்ளது. எனவே எதிர்வருகின்ற தேர்தலில் நல்லாட்சிக்கு பாடம் புகட்ட முஸ்லிம் காத்துக் கொண்டிருக்கிறது.

ஞானசாரவுக்கும் நல்லாட்சிக்கும் தொடர்பில்லை என்றால் நல்லாட்சியின் இரண்டரை வருட ஆட்சிக்காலத்திற்குள் நல்லாட்சி நீதியை நிலைநாட்டி நிரூபித்துக் காட்டியிருக்க வேண்டும்.

மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை சமர்பித்து விசாரணைக்கு அழைத்து, கைது செய்து மாதக்கணக்கில் சிறைபிடிக்கும் அரசாங்கம், சாதாரண பௌத்த தேரர் ஒருவரை கைது செய்வதில் இருந்து பின்வாங்குவதும் ஞானசாரவின் அதட்டல்களுக்கு பொலிசார் தலைவணங்குவதும் அதிக சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. 

நாட்டின் பிரதமர், ஜனாதிபதியை ஒழுக்கமற்ற விதத்தில் விமர்சிப்பதும் நீதிமன்ற கட்டளைகளை கிழித்துவீசுவதும் பொலிஸ் அதிகாரிகளை தூசிப்பதும் அவர்களது கடமையை செய்யவிடாது குழப்பம் ஏற்படுத்துவதையும் பொலிசார் அனுமதிக்கு அதிகாரத்தை ஞானசாரவுக்கு வழங்கியது யார்?

கைது செய்ய சென்ற போது தான் தீக்குளிக்கப்போவதாக பொலிசாரை அச்சுறுத்தும் ஞானசாரவை தற்கொலைக்கு முயற்சி செய்தார் என்ற குற்றத்திலாவது பொலிசாரால் கைது செய்ய முடியாமல் போனது ஏன்?
தன்னை கைது செய்தால் பள்ளிவாயல்களை தீயிட்டு கொளுத்துவோம் என்று எச்சரிக்கை செய்த ஞானசாரவின் அடியாட்கள் குருநாகல், மல்லவபிட்டிய ஜும்மா பள்ளிவாசல் மீது இன்று அதிகாலை பெற்றோல் குண்டு தாக்குதல் சம்பவத்தில் தொடர்பு பட்டிருக்க அதிக வாய்ப்புக்கள் இருப்பதை அரசாங்கம் கவனிக்க தவரக் கூடாது.

ஞானசாரவின் அட்டகாசங்களுக்கு அவர் கைது செய்யப்பட வேண்டும் என்பதில் எம்மிடம் மாற்றுக்கருத்து இல்லை இப்போதாவது ஞானசாரவை கைதுசெய்ய அரசாங்கம் முன்வந்திருப்பதை பாராட்டுகிறோம் அதே வேளை முஸ்லிம் சமூகத்தின் அபிமானத்தை பெறுவதற்காகவும் அடுத்து வரும் தேர்தலை குறிக்கோளாகக் கொண்டும் வெறும் கண்துடைப்பு நாடகமாக ஞானசாரவின் கைது அமைத்து விடக்கூடாது என்பதையும் நாம் அரசாங்கத்திற்கு சொல்லிவைக்க விரும்புகிறோம்.

அளுத்கமை தர்கா நகர் பிரச்சினைக்கு பகிரங்க காரணமாக இருந்ததோடு மட்டுமல்லாமல் நாட்டில் சிறுபான்மை சமூகத்திற்கு நடத்தப்பட்ட அத்தனை இனவாத அசம்பாவிதங்களுக்கும் காரணமாக ஞானசார இயங்கினார் என்ற குற்றச்சாட்டையும் இதுவரை அவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்ட புகார்களையும் ஏற்று நீதியான விசாரணை நடத்தி அவருக்குறிய தண்டனையை வழங்குவதே நிரந்தர தீர்வுக்கு வழிவகுக்கும்.

அஹமட் புர்க்கான்
கல்முனை
ஞானசாரவை கைது செய்வது போல் நாடகமாடுவதை நாம் சமூகம் நம்பத் தயாரில்லை. ஞானசாரவை கைது செய்வது போல் நாடகமாடுவதை நாம் சமூகம் நம்பத் தயாரில்லை. Reviewed by Madawala News on 5/21/2017 03:37:00 PM Rating: 5