Ad Space avaiable

கடும் பாதுகாப்பு கெடுபிடிகளையும் மீறி நேற்று மாலை மாணிக்க மடு சென்ற தேரர்கள் குழு ..



பலத்த பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியில் நேற்று மாலை மாணிக்கமடு மாயக்கல்லி மலையில் மத வழிபாடுகள் இடன்பெற்றுள்ளன.

நீதிமன்ற தீர்ப்பு வரும்  வரை மாணிக்கமடுவில்  சிலைவைக்கப்பட்டுள்ள பிரதேசத்தை அண்டிய பகுதிகளுக்கு செல்லவதால் இனமுறுகள் ஏற்படலாம் என பொலிஸ் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ள நிலையில் அப்பிரதேசத்துக்கு எவரும் செல்லக்கூடாது என உத்தரவிட்டுள்ள நிலையில் நேற்று மாலை பௌத்த தேரர்கள் குழு ஒன்று அவ்விடத்துக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளது.

நேற்று மாலை மாணிக்கமடு பிரதேசத்திற்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில் கிழக்கு பொலிஸாரின் அனுமதியுடன் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் தலைமையில் தேரர்கள் குழு மாணிக்கமடு மாயக்கல்லிக்கு  சென்று அங்கு பூஜைகளை நடத்தியுள்ளது.


கடும் பாதுகாப்பு கெடுபிடிகளையும் மீறி நேற்று மாலை மாணிக்க மடு சென்ற தேரர்கள் குழு .. கடும் பாதுகாப்பு கெடுபிடிகளையும் மீறி  நேற்று மாலை மாணிக்க மடு சென்ற தேரர்கள் குழு .. Reviewed by Madawala News on 5/11/2017 12:34:00 PM Rating: 5