tg travels

முஸ்லிம்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் குழி தோண்டி புதைத்துவிட வேண்டாம் !

அரசாங்கம் எமக்கு வழங்கியுள்ள காலக்கெடு வரையே எம்மால் பொறுமை காக்க இயலும் எனவும் இனவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த  ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படாவிட்டால் அனைத்து முஸ்லிம் எம் பிக்களும் ஒன்று சேர்ந்து அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள நேரிடும் என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ் எம் மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.

சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயகவுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

சமகால பிரச்சினை தொடர்பில் சட்டம் ஒழுங்கு அமைச்சருக்கு தெளிவுபடுத்தியுள்ள அவர் மேலும் எடுத்துக் கூறியுள்ளதாவது,

இந்த ஆட்சி மாற்றத்தில் முஸ்லிம்களுக்கு பாரிய பங்குண்டு அதிலும் இந்த நாட்டு முஸ்லிம்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகிறார்கள். எமது கட்சி அவர்களை அரவனைத்து செல்லும் என அவர்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள். அவர்களது நம்பிக்கையை காப்பாற்ற வேண்டிய தார்மீக பொறுப்பு எமக்கு உள்ளது.

கடந்த ஒருவாரமாக எமது சமூகம் பலத்த ஆத்திரத்திலும் பொறுமை காத்துக்கொண்டுள்ளனர்.அவர்களின் பொறுமைக்கும் எமது பொறுமைக்கும்  ஒரு எல்லையுண்டு நீங்கள் வழங்கியுள்ள காலகெடுக்குள் அனைத்து விடயங்களையும் கட்டுப்படுத்த வேண்டும் இல்லையென்றால் நாம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அரசாங்த்தை நெருக்கடிக்கு உள்ளாக்கும் முடிவுகளை எடுக்க நேரிடும் என குறிப்பிட்டுள்ளார்.


மேலும் இந்த அரசாங்கம் எமக்கு வழங்கியுள்ள காலக்கெடு முடியும்  வரை நாம் சற்று பொறுமை காத்து இருப்போம் என முஸ்லிம்களிடம் கோரிக்கை ஒன்றை முன்வைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகப் பிரிவு...
முஸ்லிம்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் குழி தோண்டி புதைத்துவிட வேண்டாம் ! முஸ்லிம்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் குழி தோண்டி புதைத்துவிட வேண்டாம் ! Reviewed by Madawala News on 5/24/2017 07:26:00 PM Rating: 5