Ad Space avaiable

மோடி எனும் முஸ்லீம்களின் எதிரிக்கு நல்லாட்சி செங்கம்பளம் விரிப்பது ஏனோ ?


அஸ்மி அப்துல் கபூர்
என் கலீமா மொழிந்த சகோதரனை அன்று குஜராத்திலும் இன்று காஷ்மீரிலும் கொன்று குவித்து அநாதையாக்கிய அகதிகளாக 70000  முஸ்லீம்களை குஜராத்தில் இருந்து துரத்தியடித்த பாதகன் மோடி யின் வருகை குறித்து, தங்களால் பெறப்பட்ட பணங்களால் வாயை அடைத்திருக்கும் அரசியல் தலைமைகள் குறித்து நீங்கள் கருதுவது என்ன?  எனப் புரியவில்லை

ஆனால் என் இனத்தின் நீண்ட கால எதிரி பல வன்முறைகளுக்கு காரணமான இந்திய உபகண்டத்தின் கலவரக்காரன்.இன்று முஸ்லீம் மக்களால் உருவாக்கப்பட்ட நல்லாட்சியுடன் உறவு கொண்டாடுவதன் அர்த்தம் புரிகிறதா?

சமுக ஊடகங்களின் பெருவாரியான பங்களிப்புடன்தான் நல்லாட்சியும் மோடி ஆட்சியும் உருவானது என்பதையும் இவற்றுக்கான அடிப்படை எதுவாக எந்த சக்தி யாக இருக்கிறது என்பதையும் இன்று இந்தியா சர்வதேச பொலிஸ்காரனுக்கு சாமரம் வீசுவதையும் நாம் இன்னுமா உணர முடியாமல் இருக்கிறது.

இங்கு எம் விரல்களை கொண்டு எம் கண்களை குத்தி அந்த காயங்களுக்கு ஒத்தடம் போடுவதாக எம்மை அடிமையாக்க பார்க்கிறார்கள்.

இன்று அரசில் அங்கம் வகிக்கும்  முஸ்லீம் தலைவர்கள் இதை உணரவில்லை என நினைக்கிறீர்களா? இல்லை 

ஏற்கனவே அவர்கள் பணத்துக்காகவும் பதவிக்காகவும் சோரம் போயினர்.இன்று அதை தக்க வைத்து கொள்ள ஒருவர் மாய்கல்லியையும், ஒருவர் வில்பத்தையும் கையிலெந்தி இருக்கிறார்கள்.

ஒழுங்கமைக்கப்பட்ட நாடகங்களில் ஆளுக்கொரு பாத்திரம் வழங்கப்பட்டும் சம்பந்தமே இல்லாமல் மக்களை வேறு வேடிக்கைகளிலும் மூழ்கடித்து விடுகின்றனர்

இன்று மிக நேர்த்தியான இளைஞர்கள் எழுத்து உலகில் தம்மை நிலை நிறுத்த அரபு வசந்தம் என்றும் இஸ்லாமிய கிலாபத் என்றும் பல வரலாறுகளை கற்றுக் கொண்ட வல்லவர்கள் என்ன பேசுகிறார்கள் ஏதும் எழுதுகிறார்களா?

நல்லாட்சி எனும் சொல்லை கண்டவுடன் கொதித்து திரண்ட ரத்தம் மகிந்த என்கின்ற ஒருவரை விட மோடி என்கின்றவன் எவ்வளவு மோசமாக கலீமா சொன்ன என் சகோதரனுக்கு தீங்கிளைத்தான் என உணராமல் தங்களின் முதுகெழும்பை வளைத்து கொண்டு நிற்கிறீர்கள்.

பாலஸ்தீனை போன்று இராக்கை போன்று லிபியாவை போன்று அழித்தொழிக்கப்பட்ட எனது இனத்தின் அடையாளம்தான் குஜராத்
இன்று மோடியால் அழிக்கப்படும் காஷ்மீர்.

நாம் மெளனம் காப்பதும் எம்மால் உருவாக்கப்பட்ட நல்லாட்சியில் குரல் கொடுக்காமையும் மோடி யை நியாயப்படுத்துவதாகவும் இவ்வாறான இந்த ஆட்சியின் போக்கையும் முஸ்லீம் விரோத போக்குகளுக்கும் அங்கிகாரம் வழங்கும் என்கிறதை நாம் உணரவில்லை.

நாம் என்று ஒன்றுபட்டு சூழ்ச்சிகளையும் எமது   தலையை தடவி கண்களை புழுங்கும் அரசியல் நகர்வுகளையும் புரிந்து கொள்ள போகிறோம்.
மோடி எனும் முஸ்லீம்களின் எதிரிக்கு நல்லாட்சி செங்கம்பளம் விரிப்பது ஏனோ ? மோடி எனும் முஸ்லீம்களின் எதிரிக்கு நல்லாட்சி  செங்கம்பளம் விரிப்பது ஏனோ ? Reviewed by Madawala News on 5/12/2017 12:13:00 AM Rating: 5