Ad Space Available here

ஊடகவியளாலர்களும்,எழுத்தாளர்களும்,என்றும் போற்றப்பட வேண்டியவர்கள்


M.H.பர்சீன்
வரிப்பத்தன்சேனை, இறக்காமம்.                                                                                   எம் சமுகத்திற்கு மகத்தான பணியை செய்யும் மனிதர்கள்தான் இவர்கள், ஆனால் எமது சமுகம்  இவர்களை எப்படி பார்க்கின்றார்கள், இவர்களால் எவ்வாறான பயன்களை எமது சமுகம் பெறுகின்றது என்பதற்கான ஒரு சிறு கண்ணோட்டம்தான் இந்த பதிவின் நோக்கமாக இருக்கின்றது.

இத்துறையில் பயணிப்பவர்களில் அதிகமானவர்கள் பொருளாதரத்தில் உச்சமமான நிலையை அடைந்திருக்க மாட்டார்கள், இருப்பினும் இரத்தத்தில் உதித்த அந்த சமுக சிந்தனையால் எவ்வளவோ கஷ்டம் ,நஷ்டம் ,உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் அவர்களது நேரத்தை செலவழித்து, எமது சமுகத்தில் அரசியல்,பொருளாதாரம்,கல்வி,சுகாதாரம்,விளையாட்டு இன்னும் அனைத்து துறைகளிலும் நாம்  இருக்கும் நிலைமயை மற்ற சமூகத்துடன் ஒப்பீட்டின் அடிப்படையில் அளவிட்டு, நாம் பின் தங்கி இருப்பதற்கான காரணங்களையும் ,அதற்கான தீர்வுகளையும் சிறந்த முறையில் முன்வைத்து கொண்டிருக்கும் இந்த உள்ளங்களை, சமுகமான நாங்கள்  எவ்வாறான அந்தஸ்த்தையும் ,ஊக்குவிப்பையும் ,ஒத்தாசைகளையும் நாம் அவர்களுக்கு வழங்குகின்றோம் என்று உங்கள் உள்ளத்தை தொட்டு கேளுங்கள் சகோதரர்களே’

எழுத்தாளர்கள் இல்லையென்றால் வரலாறு இல்லாத ஒரு சமுகமாகவும், ஊடகவியாளர்கள் இல்லையென்றால் உரிமைகள் நசுக்க படுக்கின்ற ஒரு சமுகமாகவும் இருப்போம்,எமது சமுதாயத்திற்கு இடம்பெறுகின்ற பாதிப்புகளையும் ,அணியாங்களையும் இரவு ,பகல் என்று பாராமல் அவசரமான முறையில் தெரியப்படுத்துவதன் மூலமாகத்தான் குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக நாம் விழிப்படைகின்றோம், சம்மந்தபட்ட அதிகாரிகளுக்கு எடுத்து சென்று சாத்தியமான  நடவடிக்கைகளை  எடுப்பதற்கு முயற்சிக்கின்றோம். 

ஆனால் எமது சமுகத்தில் தற்போது இருக்கின்ற பொட்டை அரிசியல் வாதிகள் அதிலும் அரசியல் செய்து, தனது  அதிகாரத்தையும் ,பதவியையும் தக்கவைப்பதற்கு செயல்பட்டு கொண்டிர்ருகின்றார்கள் , அத்துடன் எமது சமுகம் ஒடுக்கப்படுவதை சர்வதேசரீதியாக அறியும் வாய்ப்பை ஏற்படுத்தும் இந்த உள்ளங்களை எந்தளவு நாம் மதிக்கின்றோம் என்பதை மனதை தொட்டு கேளுங்கள்”

எமது சமுகத்தின் தேவை என்னவென்று தெளிவில்லாத ,அறிவில்லாத நபர்களை சில காரணக்களுக்காக அதாவது ஆரம்பகட்ட போராளி என்றும், தொழில் அதிபர் என்றும், செல்வந்தர்கள் என்றும் ,மக்கள் செல்வாக்கு உள்ளவர் என்றும் எமது அரசியல் வாதிகளை தேர்ந்தேடுப்பதனால் எம் சமூகத்திலுள்ள கல்விமான்கள் ,எழுத்தாளர்கள் ,கருத்தாளர்கள் ,சமுக ஆர்வலர்கள்  முன்வைக்கும் துரா நோக்கு சிந்தனைகளை  வெளியிடுவதற்கு சுயலாபம் கொண்ட அரசியல்வாதிகளின் அதிகாராம் பல நேரம் எழுதும் கைகளை கட்டுகின்றது.அதையும் தாண்டி எமது சமுகம் எதிர் நோக்குகின்ற நடைமுறை பிரச்சினைகளுக்காண தீர்வுகளை எழுதுகின்றபபோது,  அரசியல்வாதிகளின் அறியும் அறிவு குறைவினால் அவர்களின் கருத்துகள் புறக்கனிக்கபடுகின்றது.

 இவ்வாறான செயற்பாடுகளால் நல்ல எழுத்தாளர்கள் அவர்கள் கருத்து சொல்வதில் இருந்து தூரமாகின்றார்கள். இதனால் எமது சமுக்கத்தின் எதிர்கால இருப்பிடம் கேள்விகுள்ளாக்கபடுகின்றது,இப்படியான மகத்தான சேவை செய்யும் இவர்களை எமது சமுகம் எப்படி பார்க்கின்றது என்பது இதனூடாக தெளிவாகின்றது .
எமது சமுகத்தில் எத்தனை செல்வம் படைத்தவர்கள் இருக்கின்றார்கள் ,அரசியல் வாதிகள் இருக்கின்றார்கள் இது வரைக்கும் எவராவது நினைந்ததுண்டா எம் சமூகத்திலுள்ள ஊடகவியலார்களை வைத்து சக்தி,தெரென,செரசெ போன்ற இன்னும் பல சக்திமிக்க தொலைகாட்சி அலைவரிசைகளை போன்று நாமும் உருவாக்குவதன் ஊடாக, எமது சமுகத்தின் பிரச்சனைகளை சர்வதேசத்திற்கு தெரியபடுத்துவதற்கு இலகுவாக இருப்பதோடு, இனவாதிகாளால் எம் சமுகம் சம்மந்தமாகவும் , மார்க்கம் சம்மந்த்தமகவும் சாதாரண மற்ற இன மக்களிடம் விதைக்க படுகின்ற உண்மைக்கு புறம்பான செய்திகளுக்கு, தெளிவு தன்மையை சிங்கள (குறித்த மொழிப்பிரிவின் ) பிரிவின் ஊடக தெளிவு படுத்துவதனால், குழுவாக இயங்குகின்ற இனவாதிகளின் திட்டங்களை சிதறடிக்க செய்யும் சந்தர்ப்பம்வ அதிகம் என்று ஏன் இன்னும் எண்ணவில்லை. 

தூய்மையான எழுத்தாளர்கள் ,ஊடகங்கள் ,உடகவியலாளர்கள் இல்லை என்று நீங்கள் வாதிடலாம் அதற்க்கு காரணம் நாம் என்பதை மறந்து விடாதீர்கள் ,அவர்களுக்கு கொடுக்க வேண்டிய அந்தஸ்த்தை கொடுப்பதில்லை ,அரசியல்வாதிகளும் ,அதிகாரிகளும் அவர்களுக்கான வாய்ப்புகளையும் வசதிகளையும் ஊடகத்துறையில் இருப்பவர்களுக்கும் ,வர இருப்பவர்களும்  ஏற்படுத்தி கொடுக்காமையே இதற்கானகாரணம் என்பதை மறுக்க முடியாது . 

இனியும் இப்படி இல்லாமல் இனிவரும் காலங்களிலாவது எமது எழுத்தாளர்களையும்,ஊடகவியலார்களையும் ,கல்விமான்களையும் நன்கு பயன்படுத்தி சிறப்ப்புபடுத்த முன்வாருங்கள் என்பது இந்த சாதாரண மனிதனின் வேண்டுகோள்.
ஊடகவியளாலர்களும்,எழுத்தாளர்களும்,என்றும் போற்றப்பட வேண்டியவர்கள் ஊடகவியளாலர்களும்,எழுத்தாளர்களும்,என்றும் போற்றப்பட வேண்டியவர்கள் Reviewed by Madawala News on 5/06/2017 02:30:00 PM Rating: 5