Ad Space avaiable

நாளைய அமைச்சரவை கூட்டத்தை புறக்கணிக்கும் ஜனாதிபதி !


ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் வழமையாக வாராவாரம் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற்று வரும் அமைச்சரவைக்கு கூட்டம் நாளை (16 ஆம் திகதி) நடைபெறமாட்டாது என அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் சிங்களமொழி பத்திரிக்கைக்கு தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளிநாடு சென்றுள்ள சமயங்களில் ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை இதற்கு முன்னர் கூடியுள்ளது.என்றாலும் இம்முறை பிரதமர் வெளிநாடு சென்றுள்ள போதும், ஜனாதிபதியின் தலைமையில் அமைச்சரவை கூட்டத்தை நடத்தாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

எதிர்வரும் 17ஆம் திகதி புதன் கிழமை பிரதமர் நாடு திரும்பவுள்ள நிலையில் அதன் பின்னர் அநேகமான புதிய அமைச்சரவையாக,அமைச்சரவைக்கு கூடுவதற்கு சந்தர்ப்பம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

வழமையாக அமைச்சரவை கூட்டம் நிறைவடையும் போது, அடுத்த அமைச்சரவை கூட்டம் நடைபெறும் திகதி நேரம் அமைச்சர்களுக்கு அறிவிக்கப்படும் அதேவேளை, கடந்த வாரம் அவ்வாறு நேரம் மற்றும் திகதி அறிவிக்கப்படவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மையில் பலமுறை அமைச்சரவை மாற்றங்கள் நிகழ்வும் என பல்வேறு செய்திகள் வெளியாகியிருந்தபோதும், இதுவரை எந்தவிதமான மாற்றங்களும் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதே நேரம் எதிர்வரும் 18 க்கும் 25 க்கும் இடையில் முக்கிய அதிரடி மாற்றம் தொடர்பில் ஜனாதிபதி தீர்மாணங்களை வெளியிடுவார் என தெரிவிக்கப்படுகிறது.

நாளைய அமைச்சரவை கூட்டத்தை புறக்கணிக்கும் ஜனாதிபதி ! நாளைய அமைச்சரவை கூட்டத்தை புறக்கணிக்கும் ஜனாதிபதி ! Reviewed by Madawala News on 5/15/2017 02:27:00 PM Rating: 5