Ad Space avaiable

இலங்கை வரும் மோடிக்கு உச்ச கட்ட பாதுகாப்பு !


இலங்கைக்கு வாரவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பிற்காக  பாதுகாப்பு பிரிவை சேர்ந்த 6000 பேர் கடமையில் அமர்த்தப்படவுள்ளனர்.

இதற்காக பாதுகாப்பு பிரிவின் உயர்மட்ட ஆலோசனைகள் இடம்பெற்றுவருவதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் விசேட பிரமுகர்களுக்கான பாதுகாப்பு சிறப்பதிகாரிகளும் அடங்குவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் வெசாக் தின நிகழ்வில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 11 ஆம் திகதி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

மோடிக்கு எதிராக கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஒன்றிணைந்த எதிரணி அறிவித்துள்ளது.எனவே, கொழும்பு மற்றும் கண்டி முதலான நகரங்களில் பாதுகாப்பு செயற்பாடுகள் பலப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,  ஆகியோர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கை வரும் மோடிக்கு உச்ச கட்ட பாதுகாப்பு ! இலங்கை வரும் மோடிக்கு உச்ச கட்ட பாதுகாப்பு ! Reviewed by Madawala News on 5/07/2017 01:45:00 PM Rating: 5