Yahya

மாயக்கல்லில் சிலை வைப்புக்கு ஜனாதிபதியும், பிரதமரும் ஆதரவுக் கடிதம் வழங்கியுள்ளனர்...


இன்று இறக்காமம் ஜாமிஉத் தைய்யார் ஜும்மா பள்ளிவாசலில் அஷ்சேஹ் அப்துல் காதர் செய்யது மௌலானா அவர்கள், பள்ளிநிர்வாகத்தினருடனும், பொதுமக்களிடமும் மாயக்கல்லில்  சிலைவைப்பு சம்பந்தமான கருத்துக்களை கேட்டறிந்து கொண்டார்கள். அப்போது இப்பள்ளியின் நிர்வாக சபையினரும் சட்டத்தரணி பாறூக் ஸாஹித் போன்றோரும் கருத்துக்களை தெறிவித்திருந்தனர்.

இந்த மாயக்கல் பிரதேசம் இறக்காமம் பிரதேசசபை எல்லைக்குள் உள்ளதாகவும், திகவாபி பிரதேசம் என்பது அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குள் இருப்பதாகவும் குறிப்பிட்டார்கள், இந்த மாயக்கல் பிரதேசங்களில் சிங்கள மக்கள் வசிக்கவில்லை யென்றும் கூறினார்கள். 
இம்மலை தொல்பொருள் திணைக்களத்துக்கு சொந்தமான ஒன்றாக அடையாளப்படுத்தப்பட்டு அந்த திணைக்களத்தினால் பாதுகாக்கப்பட்டு வந்தாலும் அதனை சுற்றியுள்ள பல ஏக்கர் காணிகள் முஸ்லிம் விவசாயிகளுக்கு சொந்தமானதாகும், இந்த காணிகள் பலவருடங்களாக அவர்களுடைய சொந்த பராமரிப்பில் இருந்துவருகின்ற அதேநேரம் அதற்கான எல்.டி.ஓ பேர்மிட் 1990.08.30 அன்று அவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருந்ததாகவும் கூறினார்கள்.

இந்த நேரத்தில்தான் 2016.10.27 ஆம் திகதி சில புத்த துறவிகள் தனியார் காணிகளுக்குள்ளால் அத்துமீறி பிரவேசித்து தொல்பொருள் திணைக்களத்துக்குறிய இடமான மாயக்கல்லி மலையில் சிலையொன்றை வைத்துவிட்டுச் சென்றனர். அதனை அன்று அப்பிரதேச மக்கள் கண்டித்திருந்தனர், இதனை அறிந்த தமணை பொலிசார் சமாதானத்துக்கு பங்கம் ஏற்படுகின்றது என்ற தோரணையில் இரு பகுதியாருக்கும் எதிராக அம்பாரை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கலும் செய்துள்ளனர்.

2017.03.24 அன்று திடீரென சில பௌத்தபிக்குகள் மாயக்கல்லை அண்டியுள்ள தனியாருக்கு சொந்தமான காணிகளில் (பள்ளியான் செய்னுதீன் என்பவரின் காணியின் அரைவாசியில்) அடாத்தாக கட்டடம் கட்டுவதற்கு முயற்சித்ததை அறிந்த அவ்வூர்மக்கள் எதிர்ப்பு தெறிவித்துள்ளனர்.

நீங்கள் சட்டத்தை மீறி இப்படி நடந்து கொள்வதற்கு என்னகாரணம் இருக்கின்றது என்று அந்த மக்கள் கேள்வி எழுப்பியபோது அவர்களிடம் இது சம்பந்தமான எதுவித ஆதாரங்களையும் காட்டமுடியவில்லை, இருந்தாலும் எங்களிடம் இது எங்களுடைய பூமி என்பதற்குறிய ஆதாரம் இருப்பதாகவும் அதனை உங்களிடம் காட்டமுடியாது காட்ட வேண்டிய இடத்தில் காட்டுவோம் என்று பிடிகொடாமல் பேசியுள்ளார்கள்.

இருந்தாலும் இவர்களிடம் உள்ள ஆதாரங்கள் நான்கு கடிதங்கள் மட்டுமே என்பதுதான் உண்மையாகும் என்று பள்ளி நிர்வாகத்தினர் கூறியது மட்டுமல்ல அந்த கடிதத்தையும் காட்டினர், அது என்ன கடிதம் என்றால், 2016.11.18ம் திகதி இலங்கை ஜனாதிபதியினாலும், இலங்கை பிரதமரினாலும் அவர்களின் செயல்பாட்டுக்கு வழங்கிய ஆதரவுக் கடிதங்களாகும்,  அந்த கடிதத்தின் பிரகாரம்தான் அரசாங்க அதிபரும் செயல்படுகின்றார் என்ற உண்மையும் அவர்கள் அவ்விடத்தில் குறிப்பிட்டார்கள்.

அதன் பிறகுதான் இந்த கடிதங்களின் பிரகாரமும், ஞானசார தேரரின் கடுமையான எச்சரிக்கையின் காரணமாகவும் 2017.03.24ம் திகதி கிழக்கு மாகாண காணி ஆணையாளர் அம்பாரை மாவட்ட இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவின் மாயக்கல்லி பிரதேசத்துக்கு சமூகமளித்து அந்த தனியார் காணி சொந்தக்காரரான பள்ளியான் செய்னுதீன் அவர்களிடம் அவரின் காணியின் அரைவாசியை பௌத்த மடாலயம் அமைக்க விட்டுக்கொடுக்குமாறும் அதற்கு பகரமாக அந்த காணிக்கு நஸ்டஈடு பெற்றுத்தருவதாகவும், அந்த காணிக்கு பதிலாக வேறு காணி தறுவதாகவும், அவருடைய பிள்ளைகளுக்கு அரச உத்தியோகம் பெற்றுத்தருவதாகவும் ஆசைவார்த்தை கூறியுள்ளார். 

இப்படியான அவருடை செயல்பாடுகள் அவருடைய கடமையை துஷ்பிரயோகம் செய்யும் விடயமாகும் என்றும், நீதியை நிலைநாட்டவேண்டிய இவரே ஒருபக்கச்சார்பாக நடந்து கொள்ளும் முறையானது வேலியே பயிரை மேயும் செயலாகும் என்றும் கூறி இந்த காணிக்கு சொந்தக்காரரின் அனுமதியுடன் இறக்காமம் ஐக்கிய சமூக நலம்புரிச் சங்கம் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கும் இன்னும் பல உயர் அதிகாரிகளுக்கும் கடிதங்களை அனுப்பியுள்ளார்கள்.

ஆகவே இதன் அடிப்படையில்தான் இறக்காம பிரதேச மக்கள் இந்த விடயம் சம்பந்தமாக பல பேர்களிடம் நீதி கேட்டு அழைகின்றார்கள், அந்த வகையில் நமது முஸ்லிம் கட்சி தலைவர்களிடம் முக்கியமான அரசியல் பிரமுகர்களிடமும் இந்த விடயத்தை எத்திவைத்துள்ளார்கள்.

இந்த விடயம் சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் கூறியிருந்தாலும், இனவாதிகளின் நடவடிக்கைகள் ஓய்ந்தபாடாக தெறியவில்லை என்ற காரணத்தினால் இதனை சர்வதேச மட்டங்களுக்கு கொண்டுசென்றாவது நாங்கள் நீதியை பெறவேண்டும் என்று இறக்காம மக்களும், ஊர்பெரியார்களும், பள்ளிவாசல் நிர்வாகமும் முயற்சிப்பதையும் அதற்காக நாங்கள் எங்கு செல்லவும் தயாராக இருப்பதாகவும் அந்த மக்கள் கூறி கவலைப்படுவதை காணக்கூடியதாகவும் இருந்தது.

அதே நேரம் ஜனாதிபதியினால் அவர்களுக்கு வழங்கப்பட்ட கடிதத்தில் தவரான விடயங்களும் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அது ஒரு திட்டமிட்ட செயலாக உள்ளதாகவும் அந்த மக்களால் சுட்டிக்காட்டப்பட்டது. மாயக்கல்லி பிரதேசம் இறக்காமத்துக்கு சொந்தமான பிரதேசமாகும், திகவாபி பிரதேசம் அட்டாளைச்சேனைக்கு சொந்தமான பிரதேசமாகும், ஆனால் ஜனாதிபதியின் கடிதத்தில் இந்த மாயக்கல்லி பிரதேசம் தீகவாபி பிரதேசத்துக்கு சொந்தமானது என்று தவறாக குறிப்பிடப்பட்டள்ளது, இந்த விடயம் ஜனாதிபதி அவர்களுக்கு தெறிந்து செய்யப்பட்டதா, அல்லது தெறியாமல் செய்யப்பட்டதா என்ற குழப்பமான நிலையும் தோன்றியுள்ளது.

ஜனாதிபதி அவர்களும் பிரதமர் அவர்களும் இந்த பகுதி மக்களிடமும், அவர்களுடைய மக்கள் பிரதிநிதிகளிடமும் கலந்தாலோசிக்காமல் ஒருபக்க சார்பாக கடிதங்களை வழங்கி இனவாதிகளின் செயல்பாட்டுக்கு துணைபோவது என்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒருவிடயமாகும் என்றும் அங்கு உள்ளவர்களினால் கவலை தெறிவிக்கப்பட்டது.

அம்பாரையை பொருத்தவரை எல்லா உயர் அதிகாரிகளும் சிங்கள பெரும்பாண்மை சமூகத்தை சார்ந்தவர்களாகவே காணப்படுகின்றார்கள்.
அதேநேரம் இதுசம்பந்தமாக கிழக்குமாகாணசபை ஒரு தீர்மாணத்தை நிறைவேற்றி அதனை அரசாங்க அதிபருக்கு அனுப்பியபோதும், அந்த தீர்மானம் என்னைக் கட்டுப்படுத்தாது என்றும்,  மத்திய அரசாங்கம்தான் எனக்கு கட்டளையிட வேண்டும் என்றும் அந்த தீர்மானத்தை அரசாங்க அதிபர் நிராகரித்துள்ளார்.

இப்படியான நடவடிக்கைகள் அந்த மக்களை இன்னும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது மட்டுமல்ல நீதியை பெற்றுத்தரவேண்டிய எங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களின் அசமந்த போக்கும், எங்களுக்கு நியாயத்தை பெற்றுத்தரவேண்டிய நாட்டின் ஜனாதிபதி பிரதமர் ஆகியோரின் செயல்பாடுகளும் மிகுந்த மனவேதனை அளிப்பதாகவும் அந்த மக்கள் கூறி கவலைப்படும் விடயமானது,  கல் மனதையும் கரையவைக்கும்  செயலாக உள்ளது என்பதே உண்மையாகும்.

ஆகவே இந்த விடயம் அந்த பகுதி மக்களுக்கு மட்டும் சொந்தமான விடயமாக நாம் கருதக்கூடாது, இது எல்லா முஸ்லிம் மக்களின் பிரச்சினையாகவும் பார்க்கப்பட்டு நாம் எல்லோரும் இதற்கு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும் என்பதே எங்கள் என்னமாகும்.
ஜனாதிபதியினுடையதும், பிரதமருடையதுமான கடிதங்களை பின்னால் இணைத்துள்ளோம்.


மாயக்கல்லில் சிலை வைப்புக்கு ஜனாதிபதியும், பிரதமரும் ஆதரவுக் கடிதம் வழங்கியுள்ளனர்... மாயக்கல்லில் சிலை வைப்புக்கு ஜனாதிபதியும், பிரதமரும் ஆதரவுக் கடிதம் வழங்கியுள்ளனர்... Reviewed by Madawala News on 5/18/2017 11:23:00 AM Rating: 5