tg travels

பௌத்த மதத்தை பாதுகாக்க புறப்பட்டவர்கள் ஓரினசேர்க்கை திருமணத்தை அனுமதிக்கிறார்களா ?


இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் இழிவுபடுத்தும் இனவாத அரசாங்கத்தின் பூசாரியான ஞானசார பௌத்தமத துறவிதானா என்ற சந்தேகத்தை முதலில் அவர் தெளிவுபடுத்த வேண்டும். அதன் பிற்பாடே அவர் இஸ்லாத்தைப்பற்றி குறை நிறைகாண வரவேண்டும்.

சர்வதேசத்தின் தரகர்களான மைத்திரி  ரணில் அரசாங்கத்தின் மடியில் தவழும் ஞானசார, பௌத்த மதத்தை பாதுகாக்க புறப்பட்டதாக கூறிக்கொண்டு சிலை வைப்பதற்காகவும் விகாரை கட்டுவதற்காகவும் முஸ்லிம்கள் வாழும் பூர்வீக நிலங்களை அபகரிப்பதற்காக கலகம் ஏற்படுத்துவதும், முஸ்லிம் பள்ளிவாயல்களை உடைத்து இலங்கையில் இஸ்லாத்தை இல்லாமல் செய்யப்போவதாகவும் புறப்பட்டவர் நாட்டில் பௌத்தம் அழிந்து போவதை அவதானிக்க மறந்துவிட்டார்.

கௌதம புத்தர் அனுமதிக்காத, பௌத்த சமயத்தில் இல்லாத ஒரு சட்டமூலமான, ஓரினசேர்க்கை திருமணத்திற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளமை தொடர்பில் ஞானசார கவனம் செலுத்த மறந்துவிட்டாரா? துறவரம் பூண்டுள்ள அவருக்கு துணைக்கு ஆள் வேண்டும் என்பதற்காக அனுமதிக்கிறாரா? என்பது தொடர்பில் சிங்கள பௌத்த மக்களுக்கு அவர் தெளிவு படுத்த வேண்டும்.

முஸ்லிம்களின் பள்ளிவாயல்கள் தீவிரவாதிகளின் தங்குமிடமாக இருப்பதாக கூறி, நாடு பூராகவும் பௌத்த கொடிபறக்க விடப்பட வேண்டும், இது பௌத்தர்களின் நாடு என்ற கோசத்துடன்,  தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழி அமைச்சு அலுவலகத்தை முற்றுகையிட்டு அத்துமீறி நுழைந்த ஞானசார தேரர், உண்மையில் பௌத்த மதத்தினதும் சிங்கள  மக்களினதும் விசுவாசியாக இருந்திருந்தால் நாட்டில் ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக பிரித்தானிய தூதரகத்தில் பறக்கவிடப்பட்ட கொடியை பிடிங்கி வீச ஏன் பிரித்தானிக தூதரகத்தை முற்றுகையிடவில்லை என்பதை சிங்கள மக்கள் மாத்திரம் அல்ல நாட்டின் அனைத்து மக்களும் புரிந்துகொள்ள வேண்டும்.

சிறுபான்மையர் சமூகத்தை பலவீன படுத்தவும் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தவும் மேற்குலக சக்திகளின் கைக்கூலியாக இயங்கும் ஞானசார பௌத்த துறவி என்பதற்கு முதல் பௌத்த இனத்தையே சேர்ந்தவர்தானா? என்பதற்கு அவர் பதில் தேட வேண்டும்.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது அந்த நாட்டிற்குள் உள்ள பயங்கரவாதமெனும் புற்றுநோயாகும். அப்படியொரு நோய் இல்லாத நாடு வேகமாக வளர்ச்சியடைந்துவிடும், அதற்கு உதாரணமாக பல நாடுகளும் இருக்கின்றது. அதிஷ்டவசமாக இலங்கையின் புறையோடிக் கிடந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த மஹிந்தவுக்கு முஸ்லிம் நாடுகளின் மத்தியில் பெரும்மதிப்பும், வேண்டியதை நிறைவேற்றிக் கொடுக்கின்ற முஸ்லிம் நாடுகளும் நண்பனாக இருந்ததை பொறுத்துக் கொள்ள முடியாத மேற்குலக நாடுகள், தங்களுடைய நிகழ்ச்சி நிரழுக்கு தடையாக இருந்த மஹிந்தவை வீழ்த்த பலவகையான யுக்திகளை கையாண்டானர். அதில் தமிழர்களை ஒருபுறம் சூடேற்றி அவர்களுக்கு சர்வதேசம் வரை மஹிந்தவை பந்திக்கு இழுக்கும் சக்தியை திரை மறைவிலிருந்து செய்து கொடுத்த அமெரிக்கா, ஐக்கிய நாடுகளில் மனித உரிமைப் பேரவையில் மஹிந்தவுக்கு எதிரான வாக்கெடுப்பில் தோல்வி கண்ட முதல்வரலாறு சர்வதேச நாடுகளின் மத்தியில் பெரும் அவமானமாக அமைந்தது.

மஹிந்தவிடம் அமெரிக்கா தோற்பதற்கு காரணமாக இருந்த, மஹிந்தவுக்கு நேசக்கரம் நீட்டிய அரபு நாடுகளை அவரிடமிருந்து தூரப்படுத்தவும் நாட்டில் இனக்கலவரம் ஒன்றின் மூலம் தங்களுடைய வஞ்சத்தை தீர்த்துக்கொள்ளவும், துருப்புச் சீட்டாக பயன்படுத்தப்பட்ட ஞானசார முஸ்லிம்கள் மீது அவிழ்த்துவிடப்பட்டார். அதன் காரணமாக மஹிந்தவுக்கு உள்நாட்டில் பிரச்சினையை ஏற்படுத்தி ஆட்சியை இலகுவாக கவிழ்த்துவிடலாம் என்கிற திட்டத்தை அமெரிக்கா ஒரு பழிவாங்கள் நடவடிக்கையாக கையாண்டது.

பொதுவாகவே இலங்கையோடு நீண்ட காலம் உறவில் இருக்கும் அரபு நாடுகள் மஹிந்தவுடன் உள்ள தொடர்பை முறித்துக் கொள்ளவேண்டும் என்பதே அமெர்க்காவின் திட்டமாகும். அதற்காக சர்வதேச அளுத்தங்களை மஹிந்த மீது தொடராக பிரயோகித்துக் கொண்டிருந்த அதே வேளை உள்நாட்டிலும் பல அசம்பாவிதங்களுக்கு வித்திட்டு மஹிந்தவை நெருக்கடிக்குள்ளாக்கி அவரை வீழ்த்த வேண்டும். என்ற திட்டம் நிறைவேற முஸ்லிம்களை மகிந்தவுக்கு எதிராக மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது. காரணம் ஏலவே தமிழர் தரப்பு அமெரிக்காவின் கைகளுக்குள் அகப்பட்டு மஹிந்தவுக்கு எதிராக திருப்பி விடப்பட்டுள்ளனர். எனவே முஸ்லிம்களையும் அவருக்கு எதிராக திருப்பிவிட்டால் காரியம் நிறைவேறும் என்பதற்காக ஞானசார பாவிக்கப்பட்டார்.

முஸ்லிம்கள் மத்தியில் ஞானசார மஹிந்தவின் நண்பன் என்ற தோற்றப்பாட்டை உருவாக்கி அதை நம்பச் செய்ய ஊடகங்கள் மூலமாக பிரச்சாரம் செய்யப்பட்டு மஹிந்தவை இன்றுவரையிலும் முஸ்லிம்களின் விரோதியாக பார்க்கப்பட செய்த சாதனையை செய்தது அமெரிக்காதான், என்பதை முஸ்லிம்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.

கடந்த ஆட்சியில் ஞானசார தேரரை மஹிந்த கட்டுப்படுத்த தவறினார் என்பதை விடவும் அவருக்கு இருந்த சர்வதேச அழுத்தம் காரணமாக ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய தேவை அதிகமாகவே இருந்தது. அதனால் அரசின் பங்காளிகளான சம்பிக்க, ராஜித போன்றவர்கள் ஞானசாரவை காரணமாக காட்டி வெளியேறிவிடக்கூடாது என்பதில் மஹிந்த கவனமாக இருந்தார். அதே நேரம் முஸ்லிம்கள் விடயத்திலும் அவர் கவனமாகவும் இருந்தார். அளுத்கமை பிரச்சினை பூதாகரமாக வெடித்து நாட்டின் பல பகுதியில் சிங்கள முஸ்லிம் கலவரம் ஏற்படாமல் வெறும் 12 மணி நேரத்திற்குள் பிரச்சினையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தார். ஆனால் அந்த சம்பவத்தை காரணமாக காட்டும் முஸ்லிம் சமூகம் முப்பது வருடமாக சுட்டுக் கொள்ளப்பட்டும் மஹிந்தவுக்கு முன்பிருந்த ஜனாதிபதிகள் பல நாட்கள் கலவரங்களை அடக்காமல் பார்ந்துக் கொண்டிருந்த வரலாறுகளையும் மறந்துவிட்டார்கள்.

இருப்பினும் அந்த ஒரு நிகழ்வை முஸ்லிம்கள் மத்தியில் பூதாகரமாக்கி பிரச்சாரம் செய்து ஆட்சியை பிடித்த நல்லாட்சி அதற்கான நஷ்டஈட்டையோ சம்பவத்திற்கு காரணமாக இருந்தவர்களையோ தண்டிக்காமல் இருப்பதை முஸ்லிம் சமூகம் இன்னும் கண்டு கொள்ளவில்லை.. தண்டிக்கப்பட  ஞானசாரவுக்கு செங்கம்மல வரவேற்புடனும் அரச மரியாதை அலங்காரங்களுடனும் அவர் நாடு பூராகவும் பவனி வருகிறார். தங்களுடைய ஆட்சி மலரக் காரணமாக இருந்த ஞானசாரவை கைது செய்வதென்றால் தன்னிடம் அனுமதி பெறவேண்டும் என்று ஜனாதிபதி கூறுகின்றார்.

இந்த உண்மைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கும் முஸ்லிம் சமூகம் மஹிந்த ஏன் ஞானசாரவை அடக்கவில்லை என்று இப்போதும் கேட்கிறார்களே தவிற மைத்திரி அல்லது ரணில் ஏன் ஞானசாரவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள் என்று சிந்திக்கவில்லை, இதனூடாக மஹிந்தவால் மாத்திரம்தான் ஞானசாரவை அடக்க முடியும் என்று அவர்கள் மறைமுகமாக நம்புகின்றனர்.
மட்டுமல்லாது இன்னொரு புறத்தில் சிலர், இப்போதும் மஹிந்த அவர்கள் தான் ஞானசாரவை இயக்குகிறார், பாதுகாக்கிறார் என்ற குருட்டுத்தனமான வாதத்தையும் முன்வைக்கிறார்கள்.

உண்மையில், மஹிந்த தன்னையே பாதுகாக்க முடியாமல் விசாரணைக்கு அழைக்கப்பட்டு போகிறார், அவருடைய மனைவியை விசாரணைக்கு அழைக்கிறார்கள், அவருடைய சகோதரர்களை அழைக்கிறார்கள், அவருடைய புதல்வர்கள் கைது செய்யப்பட்டு கூண்டில் அடைக்கப்பட்டு இப்பொழுதும் நீதிமன்றம் செல்கிறார்கள். இப்படி இருக்க ஞானசார மஹிந்தவுக்கு யார்? அவரை மஹிந்த ஏன் இயக்க வேண்டும்? காப்பாற்ற வேண்டும்? என்று கூட சிந்திக்க முடியாத சிறுபிள்ளை வாதத்தை முன்வைக்கிறார்கள்.

ஞானசாரவின் மேலுள்ள கோபத்தை மஹிந்தவை பழிவாங்குவதனூடாக வெற்றி கொண்டுவிடலாம் என்றவர்கள்.
இப்போது வானம் பார்த்து அழுகின்றார்கள்.

முஸ்லிம்களின் இந்த குருட்டுத்தனமான நம்பிக்கையை தமக்கு மேலும் சாதகமாக பாவித்து எதிர்வரும் தேர்தலை வெற்றி கொள்ள அரசாங்கம் மீண்டும் ஞானசாரவை ஏவி விட்டுருக்கிறது. அதனூடாக மஹிந்த ஆட்சி ஏறுவதற்காக ஞானசாரவை பயன்படுத்துகிறார் என்ற பொய்ப் பிரச்சாரத்தை அவிழ்த்து விடுவார்கள். இனிமேலும் நல்லாட்சியின் கபட நாடகத்தை நம்பி முஸ்லிம்கள் ஏமாந்தால் 21ம் நூற்றாண்டின் முட்டாள்கள் இலங்கை முஸ்லிம்கள்தான்.


பௌத்த மதத்தை பாதுகாக்க புறப்பட்டவர்கள் ஓரினசேர்க்கை திருமணத்தை அனுமதிக்கிறார்களா ? பௌத்த மதத்தை பாதுகாக்க புறப்பட்டவர்கள்  ஓரினசேர்க்கை திருமணத்தை அனுமதிக்கிறார்களா ? Reviewed by Madawala News on 5/18/2017 12:15:00 PM Rating: 5