Kidny

Kidny

சுதந்திர கட்சி ஒன்றினையும் தருவாய் நெருங்கிவிட்டது !

சுதந்திர கட்சியை ஒன்றினைக்கும் முயற்சிகள்  வெற்றியளிக்கும் தருவாயை எட்டிவிட்டதாக  அமைச்சர் ஜோன் செனவிரத்ன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கையுடன் தொடர்ந்து பயணிக்க முடியாது எனவும் விரைவில் சுதந்திர கட்சியை இணைத்து சுதந்திர கட்சி தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர் சுதந்திர கட்சியை ஒன்றினைத்து ஒரு அணியாக கொண்டுசெல்லும் பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் தெரிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த கண்டி மே தின மேடையில் தங்கள் கட்சி குழு ஒன்று கோல் பேசில் மே தின கூட்டம் நடத்துவதாகவும் எதிர்வரும் வருட மே தின கூட்டம் பிரிந்திருந்திருக்கும் இரு அணிகளும் ஒன்றுபட்டு ஒரே மேதின கூட்டத்தை நடத்தவேண்டும் என ஜனாதிபதியிடம் ஜோன் செனவிரத்ன பகிரங்க வேண்டுகோள் விடுத்திருந்தார்.

குறித்த மே தின மேடையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவிடம் சுதந்திர கட்சி இணைந்து செயற்பட வேண்டும் என  சில சுதந்திர கூட்டமைப்பு முக்கியஸ்தர்களால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சுதந்திர கட்சி ஒன்றினையும் தருவாய் நெருங்கிவிட்டது ! சுதந்திர கட்சி ஒன்றினையும் தருவாய் நெருங்கிவிட்டது ! Reviewed by Madawala News on 5/07/2017 01:12:00 PM Rating: 5