Ad Space avaiable

அமைச்சரவை மாற்றம் தொடர்பில் புதிய திருப்பம் ! பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு யோசனை முன்வைக்கப்பட்டது ..


ஓரிரு அமைச்சுக்களை மாற்றம் செய்யாமல் முழு அமைச்சரவையையும் மாற்றம் செய்யுமாறு பிரதமருக்கு  யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு அரசியல் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓரிரு அமைச்சர்களை மாற்றம் செய்தால் அவ்வமைச்சர்கள் தொடர்பில் ஊழல் விமர்சனங்கள் எழுவதோடு அவர்களை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கும் என்பதால் சகல அமைச்சுகளில் மாற்றம் செய்வது சிறந்தது என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த யோசனை ஜனாதிபதிக்கும் எத்திவைக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகிறது.

இந்த யோசனை தொடர்பில் ஜனாதிபதியை பிரதமர் தொலைபேசியில் தொடர்புகொண்டு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சரவை மாற்றம் தொடர்பில் புதிய திருப்பம் ! பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு யோசனை முன்வைக்கப்பட்டது .. அமைச்சரவை மாற்றம் தொடர்பில் புதிய திருப்பம் ! பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு யோசனை முன்வைக்கப்பட்டது .. Reviewed by Madawala News on 5/16/2017 09:00:00 PM Rating: 5