Ad Space avaiable

"ஆசிரியர்களுக்கு ஓர் மணி மகுடம் " ஆசிரியர்கள் கெளரவிப்பு விழா.

Y2K STARS ASSOCIATION ஏற்பாட்டில் "ஆசிரியர்களுக்கு ஓர் மணி மகுடம் "
ஆசிரியர்கள் கெளரவிப்பு விழா 14. 05. 2017 (ஞாயிற்றுக் கிழமை) இடம் பெற்றது.

இந் நிகழ்வில் 2000ம் ஆண்டு க.பொ.த சாதாரண தரம் கற்பித்த 24 ஆசிரியர்கள் விருது வழங்கி கெளரவிக்கப் பட்டனர் இந்நிகழ்விற்கு அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி பணிப்பாளர் A.S இஸ்ஸதீன் அவர்களும் ஓய்வு பெற்ற வலயக்கல்வி பணிப்பாளர் U.L.M ஜெயினுதீன் அவர்களும் அலிகார் தேசியப் பாடசாலின் அதிபர் S.A நஜீப் அவர்களும் மற்றும் ஓய்வு பெற்ற அதிபர்களான U.H முஹம்மட் மற்றும் S.J றபியுதீன் ஆகியோரும் கலந்து சிறப்பித்த தோடு  2000ம் ஆண்டு பழைய மாணவ மாணவிகளும் கலந்து சிறப்பித்தனர் சுமார் 17 வருடங்களின் பின்னர் கற்பித்த ஆசான்களை கெளரவித்த சம்பவம் ஆசிரியர்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீரை வரவழைத்தது இந்நிகழ்வில் பாடசாலையின் தேவை கருதி Y2K அமைப்பினரால் நவீன தொழிநுட்பத்துடன் கூடிய போட்டோ கொப்பி இயந்திரம் ஒன்றும் கையளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தகவல்: றபீக் ஜலீல்
"ஆசிரியர்களுக்கு ஓர் மணி மகுடம் " ஆசிரியர்கள் கெளரவிப்பு விழா.  "ஆசிரியர்களுக்கு ஓர் மணி மகுடம் " ஆசிரியர்கள் கெளரவிப்பு விழா. Reviewed by Madawala News on 5/19/2017 06:42:00 AM Rating: 5