Ad Space Available here

புதன்கிழமை ஹர்த்தாலும் தொடர வேண்டிய மாணவர்கள் எழுச்சியும்

இனவாதம் உச்சம் தொட்டு நிற்கும் நிலையில் எமது சகல விமர்சனங்களும் அரசியல் தலைவர்களை நோக்கி முன்வைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்த பிரச்சினைக்காக முக்கியமாக போராட வேண்டிய சில குழுக்களையும் எம் மீது உள்ள கடமையையும் நாம் இந்த விமர்சனங்களுக்கிடையில் மறந்து விட்டோம். 

உண்மையில் ஒட்டு மொத்த அரசியல்வாதிகளையும் இணைத்து தலைமை தாங்கி ஒரு போராட்டத்தை வழி நடாத்த வேண்டிய பொறுப்பு எம்மை வழி நடாத்தும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாக்கு இருக்கின்றது. அது போலவே அந்தந்த பிரதேசங்களில் செல்வாக்கு செலுத்தும் SLTJ, NTJ, மற்றும் ஏனைய அமைப்புக்களுக்கும் இது தலையாய கடமையாகும். 

என்று ஞானசார இறைவனை கொச்சைப்படுத்தி பேசினானோ அன்று தொட்டு இதனை ஒரு அரசியல் பிரச்சினையாக பார்க்க முடியாது, தனிப்பட்ட அரசியல் தலைவர்களுடைய எதிர்ப்பு நடவடிக்கையை மாத்திரம் எதிர்பார்த்து பிரச்சினைகளை கிடப்பில் போட முடியாது. மேலும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சொல்லுவது போன்று குனூத் மாத்திரம் ஓதி முடிவு காணவும் முடியாது. 

என்று இறைவனையும், றசூலையும் கொச்சைப்படுத்தினானோ அந்த சந்தர்ப்பத்தில் இருந்து ஒவ்வொரு முஸ்லிமும் அவன் மீது ஜிஹாத் செய்ய வேண்டிய கட்டாயத்திற்குட்படுத்தப்பட்டுள்ளோம். 

நாடு கடந்து முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் சிரிய யுத்தத்திற்கு ஆர்ப்பாட்டம் செய்து கோஷம் போட தைரியம் உள்ள மத தலைவர்களுக்கும், அரசியல் வாதிகளுக்கும், இலங்கை மக்கள் பாதிக்கப்படும் போது மட்டும் குனூத் ஓத சொல்லுவதும், மெளனம் காப்பதும், தமது முதுகெலும்பு அற்ற, கையாலாகத நிலையை வெளிக்கொணருகின்றது. 

பெளத்த மதத்தை அவமதித்தார் என்பதற்காக SLTJ றாசிக்கிற்கு எதிராக அறிக்கைகள் பல விட்ட அகில இலங்கை ஜம்மியதுல் உலமா மெளலவிமார்களும், ஏனைய அமைப்பு மெளலவிகளும் இன்று அல்லாஹூத்தாலாவை அவமானப்படுத்தி பேசியுள்ளது கண்டும் மெளனித்துவிட்டனர். கேவலம் கொண்ட கொள்கை பிடிப்பு, இறைவன் மீதுள்ள அன்பை விட அதிகமாகவுள்ளது இந்த இயக்கக வாதிகளிடையே. 

தமிழர்களோடு ஞானசார மோதிய இரண்டு சந்தர்ப்பங்களிலும் மூக்குடைபட்டு சென்றுள்ளார். 

மட்டக்களப்பு விஜயமும், மனோகணேசனின் சந்திப்பும் அவையாகும். ஆனால் முஸ்லிம்களோடு பகைத்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் முஸ்லிம்கள் மூக்குடைந்து குனூத் ஓதியது மாத்திரமே எஞ்சியுள்ளது. இதற்கு காரணம் முதுகெலும்பற்ற எமது அரசியல் தலைமைகளை மாத்திரம் நம்பியிருந்து எதிர்த்து போராட வேண்டிய எமது கடமையை மறந்து விட்டமையே. மட்டக்களப்பு விஜயத்தின் போது மக்கள் வீதிக்கு வந்து போராடியதே அன்று ஞனசார தோல்வியடைந்து திரும்பி சென்றதற்கு பிரதான காரணமாகும். 

சமகாலங்களில் அண்டை நாடுகளில் நடந்த பல போராட்டங்கள் எமக்கு படிப்பினையாக அமைந்துள்ளன. நாம் வீதியில் இறங்கி போராடதவரை எமது உரிமைகளை வெல்ல முடியாது. 

இலங்கை சட்டத்தால் SLTJ றாசிக் பெளத்த மத நிந்தனைக்காக கைது செய்யப்பட முடியுமாயின், ஏன் ஞானசார முஸ்லிம்களின் இறைவனை அவமதித்தற்காக கைது செய்யப்பட முடியாது?? முஸ்லிம்களுக்கு ஒரு சட்டமும் பெளத்தர்களுக்கு என்று ஒரு சட்டமுமில்லை இலங்கையில். 

புதன்கிழமை நடைபெற இருக்கும் ஹர்த்தாலை கிழக்கு மாகாணத்தின் கல்முனையை அல்லது அக்கரைப்பற்றை மையப்படுத்தி, ஞானசார கைது செய்யப்படும்வரை கொண்டு செல்லப்பட வேண்டியது பல்கலைக்கழக மாணவர்களாகிய உங்களால் மாத்திரமே முடியும். பல்கலைக்கழக செல்வங்களே!  சமுதாயத்தை இந்த போராட்டத்தில் நெறிப்படுத்தி வெற்றி காண உங்களால் மாத்திரமே முடியும். 

இறைவன் எமக்கு வெற்றியை நிச்சயம் தருவான் இன்ஷாஅல்லாஹ். 

அட்டாளைச்சேனை அஸ்லம் கத்தாரிலிருந்து
புதன்கிழமை ஹர்த்தாலும் தொடர வேண்டிய மாணவர்கள் எழுச்சியும் புதன்கிழமை ஹர்த்தாலும் தொடர வேண்டிய மாணவர்கள் எழுச்சியும் Reviewed by Madawala News on 5/23/2017 12:13:00 AM Rating: 5