Kidny

Kidny

ஹக்கீமின் சர்வதிகார முடிவினால் அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் அரசியல் அனாதைகளாகவே பார்க்கப்படுகின்றனர்


ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்
அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சினை ரவூப் ஹக்கீம் வழங்காமையே முக்கிய காரணம் ; நாபீர் பெளண்டேசன்.

இன்று அம்பாறை மாவட்டத்தில் இன ரீதியான முரண்பாடுகளுக்கும், பிரச்சனைகளுக்கும் முக்கிய காரணம் முஸ்லிம்களிடம் இருந்த அரசியல் அதிகாரம் கை நழுவி போனமையே முக்கிய காரணம் என நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபக தலைவரும் பொறியியலாளருமான அல்-ஹாஜ் உதுமான்கண்டு நாபீர் தெரிவிக்கின்றார்.

மேலும் தனது கருத்தினை தெரிவித்த உதுமான்கண்டு நாபீர்.. இது வரை காலமும் அதிகாரமிக்க அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக ஏ.ஆர்.எம்.மன்சூர், மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரஃப், ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் போன்றவர்கள் இருந்ததினால் மாவட்ட அரசியல் அதிகாரமும், மாவாட்ட அபிவிருத்தி குழுவின் தவிசாளார் பதவிகளும் முஸ்லிம்களிடத்திலே இருந்து வந்தது. இதனால் இன ரீதியான முரண்பாடுகள் அல்லது பிரச்சனைகளை எதிர் நோக்குகின்ற பொழுது ஒரு சுமூகமான நிலைக்கு மீண்டும் எல்லா சமூகங்களையும் பிரதி நிதித்துவப்படுத்துகின்ற அரசியல் தலைமைகள் வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக காணப்பட்டது.

ஆனால் எப்பொழுது அம்பாறை மாவட்டத்து முஸ்லிம்களிடத்தில் இருந்த அரசியல் அதிகாரமிக்க அமைச்சு பதவிகள் கை நழுவி போனதோ அன்றிலிருந்து மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்தவர்களாகவே இருந்து வருகின்றனர். ஆனால் மறு பக்கத்தில் முஸ்லிம் காங்கிரசின் தலைமை ஒரு பொழுதும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவியினை அம்பாறை மாவட்ட முஸ்லிம்களுக்கு கொடுப்பது என்பது பகற்கனவாகவே இருக்கும்.

இதற்கு முக்கிய காரணம் தேசிய அரசியலில் முஸ்லிம் காங்கிரசின் தலைமை தான் மட்டும்தான் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இருக்க வேண்டும் என்ற சர்வதிகார அரசியல் போக்கினை கொண்டவராக இருப்பதாகும். ஆளும் கட்சிகள் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சினை கொடுக்க முற்பட்டாலும் அதனை முஸ்லிம் காங்கிரசின் தலைமை ஹக்கீம் தடுத்து நிறுத்துபவராக இருக்கின்றார்.

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இஸ்தாபக தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரஃப் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இருந்த காலத்தில் இவ்வாறான இன ரீதியான பிரச்சனைகள், பிரதேசமெங்கும் சிலை வைப்புக்கள், போன்ற முரண்பாடுகளை தோன்ற விடமால் முஸ்லிம்களினுடைய அரசியல் ஆளுமைகள் மூலமும் மாவட்ட அபிவிருத்தி குழுவின் தவிசாளருக்கு இருக்கின்ற அதிகாரங்களின் மூலமாகவும் இவ்வாறான பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டே வந்ததைதே வரலாறு எமக்கு சொல்கின்றது.

ஆனால் இன்று திகாமடுல்ல மாவட்டத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழுக்கின்ற பிரதேசங்களை பிரதி நிதித்துவப்படுத்தி மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் அவர்களுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவியானது மர்ஹும் அஸ்ரஃபிற்கு பிற்பாடு இன்னும் வழங்கப்படாமல் இருப்பதுதான் மாவட்டத்தில் முஸ்லிம்கள் எதிர் நோக்குகின்ற அனைத்து அரசியல் ரீதியான பிரச்சனைகளுக்கும் முக்கிய காரணமாகும்.

அது மட்டுமல்லாமல் இன்று பேரினவாத சக்திகளின் ஆதிக்கம் அம்பாறை மாட்டத்தில் கையோங்குவதற்கு முக்கிய காரணம் மேற் கூறிய அரசியல் அதிகாராம் இன்மையாகும். முக்கியமாக மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் கூடுகின்ற பொழுது அமைச்சரவை அந்தஸ்துள்ள ஒரு அமைச்சர்தான் அங்கு மாவட்ட அபிவிருத்தி குழுவின் தவிசாளராக இருக்கின்றார். அவர் தன்னுடைய நிகழ்ச்சி நிரலினை முடித்தற்கு பிற்பாடு அவர் எந்த பிரதி நிதிநிதிகளையும் கணக்கில் எடுக்காமல் தன்வழிவே சென்று கொண்டிருக்கின்றார். ஆனால் மாவட்ட அப்விருத்தி குழுவின் இணை தலைவர்களாக இருப்பவர்கள் என்ன செய்து கொண்டிருகின்றார்கள் என்பது எவருக்கும் புரியாத கேள்வியாகவே இருந்து கொண்டிருக்கின்றது.

ஆனால் அம்பாறை மாவட்ட அரசியல் வரலாற்றினை பார்க்கின்ற பொழுது கடைசியாக அமைச்சர் அதாவுல்லா அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக இருக்கும் வரைக்கும் முஸ்லிம்களினுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்பட்டே வந்ததனை நாங்கள் பார்க்க கூடியதாக இருக்கின்றது. ஆனால் இன்று முஸ்லிம்களினுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படுகின்றதா என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது.
இதற்கு முக்கிய காரணம் முஸ்லிம் காங்கிரசினுடைய தலைமையினால் எந்த சந்தர்ப்பத்திலும் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவியினை பெற்றுக்கொடுக்க முடியாமல் இருப்பதேயாகும். இதற்கு உதாரணமாக முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவூத் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சினை பெற்றார் என்பதற்காக இன்று கட்சியினை விட்டு பசீர் சேகுதாவூத்தினை வெளியேற்றும் அளவிற்கு கட்சியின் தலைமை தான் மட்டும்தான் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சினை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற முனைப்புடன் செயற்பட்டு வருவதாகும்.

இப்படியான முஸ்லிம் காங்கிரசின் தலைமை அப்துர் ரவூப் ஹக்கீமின் சர்வதிகார முடிவினால் அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் அரசியல் அனாதைகளாகவே பார்க்கப்படுகின்றனர். ஆகவே இனி வருகின்ற காலங்களில் அம்பாறை மாவட்ட மக்கள் இப்படியான பிரச்சனைகளுக்கு தீர்வாக தகுந்த பாடத்தினை புகுட்டுவார்கள் என்ற நம்பிக்கை தங்களுக்கு இருப்பதாக தெரிவிக்கின்றார் நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபக தலைவர் உதுமான்கண்டு நாபீர்.
ஹக்கீமின் சர்வதிகார முடிவினால் அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் அரசியல் அனாதைகளாகவே பார்க்கப்படுகின்றனர் ஹக்கீமின் சர்வதிகார முடிவினால் அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் அரசியல் அனாதைகளாகவே பார்க்கப்படுகின்றனர் Reviewed by Madawala News on 5/09/2017 04:45:00 PM Rating: 5