tg travels

இறக்கமாம் காணி அபகரிப்பு விவகாரம் ; அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் காணி விவகாரக் குழு சந்திப்பு :.


இறக்காமம் பிரதேசத்தின் சிலை பிரச்சினைக்கு தீர்வு எடுக்க இராஜங்க அமைச்சர் ஹிஸ்புல்லா உறுதி   மாயக்கல்லி பிரச்சினை பற்றி அனைத்து முஸ்லிம் கட்சி தலைவர்களுடனும் பேசி கூட்டாக நடவடிக்கை அமைச்சர் ஹிஸ்புல்லா உறுதி.

இன்று காலை இறக்காமம் மாயக்கல்லி மலை மற்றும் காணி விவகாரக் குழு கௌரவ அமைச்சர் ஹிஸ்புல்லா அவர்களை அவரது காத்தான்குடி இல்லத்தில் சந்தித்து விரிவாக கலந்துரையாடி உரிய ஆவணங்களையும் கையளித்தனர்.

இதன் போது அமைச்சர்  " இது ஒரு அமைச்சருடன் சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்ல முழு சமூகத்தினதும் பிரச்சினை என்பதால் அனைத்து முஸ்லிம் கட்சி தலைவர்களும் இருந்து பேசி தீர்க்கமான முடிவொன்று எடுப்பேன்" என உறுதியளித்தார்.

மேலும் உங்கள் ஊரின் வேறு ஏதும் வேலைகள் உண்டா என அமைச்சர்   குழுவின் செயலாளரிடம் கேட்டபோது இறக்காமம் றோயல் கல்லூரி 3 மாடிக் கட்டிடம், காபட் வீதி என்பன அத்தியவசியத் தேவை என சுட்டிக்காட்டிய போது உடனே 50 இலட்சம் கட்டிடத்துக்கு தருகிறேன் என வாக்குறுதியளித்தார்.

இதன் போது இறக்காமம் ஜாமியுல் தையார் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் மௌலவி சுல்பிகார், குழுவின் செயலாளர் சட்டத்தரணி பாறூக் சாஹிப் , வரிப்பத்தான்சேனை ஜும்ஆ பளிளிச் செயலாளர் ஆசிரியர் நியாஸ், குழு இணைப்பாளர் வஹாப், சிரேஷ்ட ஆசிரியர் ஹமீம், ACMC அமைப்பாளர் முனாஸ், மத்திய குழு தலைவர் மௌலவி நௌபர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இறக்கமாம் காணி அபகரிப்பு விவகாரம் ; அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் காணி விவகாரக் குழு சந்திப்பு :. இறக்கமாம் காணி அபகரிப்பு விவகாரம் ; அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் காணி விவகாரக் குழு சந்திப்பு :. Reviewed by Madawala News on 5/06/2017 02:36:00 PM Rating: 5