tg travels

சீன தூதுக் குழுவினர் கண்டிக்கு விஜயம்.


-ஜே.எம்.ஹபீஸ்-

சீனாவின் குவான்க்ங்சை (guangxi) பிராந்தியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும்  கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் பென்ங் குவன்ஹுவா (Peng Qinghua)  தலைமையிலான குழுவினர் கண்டிக்கு விஜயம் செய்தனர்.

அதன்போது மத்திய மாகாண ஆளுநர் திருமதி நிலூக்கா ஏக்கநாயக்கவை அவரது அலுவளகத்தில் சந்தித்து (20.5.2017) மத்திய மாகாணத்திற்கும் குவான்க்ங்சை பிராந்தியத்திற்குமிடையிலான இரு தரப்பு பேச்சு வார்த்தைகள் இடம்பெற்றன. அத்துடன் இரு நாடுகளுக்கிடையிலான பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் பேச்சுவார்த்தைகள் இடம் பெற்றன.

அதன் பின் ஆளுநர் திருமதி நிலூக்கா ஏக்கநாயக்காவி ற்கு பென்ங் குவன்ஹுவா  அவர்கள் நினைவுச் சின்னம் ஒன்றையும் வழங்கினார். அதன் போது எடுக்கப்பட்ட படம்.
சீன தூதுக் குழுவினர் கண்டிக்கு விஜயம். சீன தூதுக் குழுவினர் கண்டிக்கு விஜயம். Reviewed by Madawala News on 5/21/2017 09:11:00 AM Rating: 5