tg travels

கிழக்கின் அரசியல் இருப்புக்கான அடித்தளத்தை கிழக்கு மக்கள் அவையம் மாயக்கல்லியில் நட்டிருக்கிறது




 

அஸ்மி அப்துல் கபூர்
இன்று 2017.05.21 திகதி அம்பாரை மாவட்டத்தின் இறக்கா மத்தில் அம்பாரை மாவட்ட முஸ்லீம் மக்களின் காணி பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடலை கிழக்கு மக்கள் அமையம் என்கின்ற கிழக்கு மாகாண புத்திஜிவிகளின் அமைப்பால்  அரசியல் தலைவர்களை ஒன்றினைத்ததான கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது

இதற்கான அழைப்பை அதன் இணைச் செயலாளர் சட்டத்தரணி மர்சூம் மெளலானா விடுத்திருந்தார்
நிகழ்வில் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதிதுவப்படுத்து கின்ற அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்

தேசிய காங்கிரஸ் சார்பில அதன் தலைவர் அதாஉல்லா 
மாகாண எதிர்க்கட்சி தலைவர் உதுமா லெப்பை 
அ.இ.ம.காசார்பில் அதன் தவிசாளர் எம்.எஸ் அமீரலி செயலாளர் சுபைதீன் ஹாஜியார் உப தலைவர் ஜெமீல் முன்னாள் ப.உஎஸ்எஸ்பி மஜித் மற்றும் 
மு.கா மாற்று குழு சார்பில் முன்னாள் செயலாளர் ஹசனலி, தவிசாளர் பஷிர் சேகு தாவூத்,சட்டத்தரணி அன்சில், உயரபீட உறுப்பினர் நஸார் ஹாஜி முதலானோர் கலந்து கொண்டனர்

இங்கு சிவில் அமைப்புக்களால் பொதுவான காணி பிரச்சினைகளும்,சம்பந்தப்பட்ட தரப்புகளால் அந்தந்த பிரச்சினைகள் அதன் அடிப்படைகளுடன் பேசப்பட்டதுடன்
கிழக்கு மக்கள் அவையத்திடம் ஆவணங்களும் கையளிக்கப்பட்டன.

இன்று இந்நாட்டில் இடம் பெறும் பேரினவாத சக்திகளின் பகிரங்கமான நெருக்கடிகள்  காலா காலமாக தொடர்ச்சி யாக முஸ்லீம் தலைவர்களின் கவனிப்பின்றி இடம் பெற்ற மிக நுனுக்கமான அபகரிப்புகளின் விளைவுகளாகும்

இன்று கிழக்கு மக்கள் அவையம் முன்னெடுத்திருக்கின்ற
நகர்வுகள்
 ஏற்கனவே முஸ்லீம் அரசியலை சீரழித்து சர்வதேசத்தின் சதிகளுக்கு சோரம் போன முஸ்லீம் காங்கிரஸை தவித்திருப்பதும் 
கிழக்கிலுள்ள அரசியல் தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும்,
மக்கள் தமது பலத்தை கிழக்கினூடாக பிரயோகப்படுத்த வேண்டும் 
என்பதும் ஆரோக்கியமான கருத்துக்கள் 
ஆனால் முஸ்லீம் காங்கிரஸூக்கு எதிரான அதிகார அரசியல் நோக்கிய பயணமாக இது இருந்து விடக் கூடாது
என்பதும் 
இன்று கிழக்கு மட்டுமே எமக்கான அரசியலை இருப்பை தக்க வைக்கும் தளமாகவும் அதுவே வடக்கு ஏனைய வடகிழக்குக்கு வெளியே வாழ்கின்ற முஸ்லீம் மக்களின் இருப்பை தீர்மானிக்கும் என எண்ணுகின்ற பாமர முஸ்லீமின் நிலைப்பாடாகும்

இன்னும் எம்மை ஓர் இனமாக அங்கீகரிக்காத முஸ்லீம்களுக்கு அநீதி இழைத்து அது தொடர்பில் எந்த ஒரு இணக்கப்பாட்டுக்கும் வராத தமிழ் தேசியம் எம்மை அவர் தம் ஆளுகைகுள் தம்மை உள்வாங்க முற்படும் திட்ட மிட்ட சதிகளுக்கு கிழக்கு மக்கள் அவையம் எனும் அடையாளம் சவாலாதனாகவும முஸ்லீம் மக்களின் உணர்வுகளை உசுப்பி எம்மர்வர்களின் வாக்குகளை பெற்று அவர்களின் அரசியல் அபிலாசைகளை  சர்வதேசத்திடம் அடகு வைத்து திரிகின்ற முஸ்லீம் காங்கிரசின் இறுதி முடிவுக்கான சமிக்கையும் ஆகும்.

அதற்கான அடித்தளமே மாயக்கல்லியில் நடப்பட்டிருக்கிறது.

இதுவே இதுவரை எம்மவர்கள் கையிலெடுத்து முன் செல்ல வேண்டிய இறுதி நகர்வாக இருப்பதால் அதிகாரத்தை அடைந்து கொள்ளும் எந்த முயற்ச்சிக்கும் கிழக்கு மக்கள் அவையம் முன்னிக்க கூடாது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியதாகும்.
கிழக்கின் அரசியல் இருப்புக்கான அடித்தளத்தை கிழக்கு மக்கள் அவையம் மாயக்கல்லியில் நட்டிருக்கிறது கிழக்கின் அரசியல் இருப்புக்கான அடித்தளத்தை கிழக்கு மக்கள் அவையம்  மாயக்கல்லியில் நட்டிருக்கிறது Reviewed by Madawala News on 5/21/2017 11:25:00 PM Rating: 5