Kidny

Kidny

அவசியமான தகவல் . உங்களுக்கும் இது பயன்படலாம் .


"உங்கள் Computers, Smart Phones & I pads போன்றவற்றை Hackers களிடம் இருந்து பாதுகார்த்து கொள்ளுங்கள்.               

கடந்த வாரம்  ( 2017 மே மாதம் இரண்டாம் வாரம்  ) இணையத்தினூடாக     Ransomeware என்ற வைரஸை மிகவும் நூதனமான முறையில் பரவ செய்துள்ள Hackers 👹👹 ( முடக்குபவர்கள், நூதன திருடர்கள் ) 👹  இம்முறை உலகலவில் பாரிய அலவிலான Cyber Attack ஒன்றை தொடுத்துள்ளனர். 

அமெரிக்காவின் உளவு துறை ( C I A -  Central Intelligence Agency ) இல் வேலை பார்க்கும் ஒருவரின் Computer இல் இருந்த முக்கிய  தரவு ஒன்றை திருடியுள்ள Hackers,  குறித்த தரவுடன் Ransomware என்ற Virus ஐ இணைத்து அனுப்பியே குறித்த Cyber Attack ஐ இம்முறை தொடுத்துள்ளனர்.                                      

UK, USA, Russia, Spain, China, Germany  உள்ளிட்ட உலகின் பல முதல்நிலை  நாடுகளும்  ( First World Countries) ஏனைய பல நாடுகளும் இதனால் அதிகலவு பாதிப்புக்குள்ளாகியுள்ளன.  90 இற்கு மேற்பட்ட நாடுகளின் அரச, தனியார் துறைகள்  பாதிக்க பட்டுள்ளதாக ஒரு தகவலும் 150  நாடுகளின் அரச, தனியார் துறைகள்  சிலவை இதனால் பாதிக்க பட்டுள்ளதாகவும்   உறுதியான பல தகவல்கள்  கூறுகின்றன.                    

குறித்த தாக்குதலினால் UK இல் NHS ( National Health Service ) கடந்த வாரம் முழுவதும்  முடக்க பட்டு விட்டது. குறிப்பாக London இல் உள்ள அதிகமான வைத்தியசாலைகளின் Computers ஐ கடந்த வாரம் முழுவதும் Open பண்ண முடிய வில்லை.    

நான் எனது GP இடம் ( குடும்ப டாக்டர் போன்றவர் ) கடந்த வெள்ளி கிழமை ( 12/05/2017 ) சென்றேன். எனது Medical Reports ஐ பார்வையிட அவரது Computer இடம் கொடுக்க வில்லை. கடந்த வாரம் UK இல் உள்ள முழு NHS உம் ஸ்தம்பிதம் என்று கூறினார்.                         

கடந்த செவ்வாய் கிழமை Hospital Appointment இற்கு சென்றேன். அங்கும் அதே நிலை ( சில Computers மட்டுமே செயற்படுவதாக சொன்னார்கள் ) UK இல் NHS, Banks இன்னும் பல வகையான பெறும் நிறுவனங்கள் குறித்த Cyber Attack இனால்  பாதிக்க பட்டுள்ள. 

ஐக்கிய இராஜ்ஜியம், ரஷ்யா, சீனா, அமெரிக்கா, ஸ்பைன், ஜேர்மனி, இந்தியா உள்ளிட்ட  முக்கிய பல நாடுகளின்  சில அமைச்சுக்கள், சில நாடுகளின் பாதுகாப்பு துறை, தொலை தொடர்பு துறை, வங்கி துறை, சுகாதார துறை, போக்குவரத்து துறை பல தனியார் துறைகள் போன்றவை  இதனால் பாதிக்க பட்டுள்ளன. இதனால்  ஏற்பட்டுள்ள நஷ்டம் பல பில்லியன் US Dollars அளவு இருக்கலாம் என இது வரை அன்னலவாக மதிப்பிட பட்டுள்ளது. 

இதனை புரிந்த Hackers இது வரை பல லட்சம்  Dollars களை சம்பாதித்திருக்கின்றார்கள். Computer களை முடக்கி தமது கட்டுபாட்டுக்குள் கொண்டுவரும் Hackers அதனை வழமைக்கு மீள திருப்பி  கொள்ள பெரும் அளவு பணத்தை குறித்த அவர்களது கணக்கிற்கு பரிமாற்றுமாறு பாதிக்க பட்டவர்களை நிர்பந்திப்பார்கள்.  Bit Coin பண பறிமாற்று முறையின் கணக்குகளை  ( Bit Coin Account System ) பயன்படுத்தியே  Hackers களால்  பணம் அறவிட படுகின்றது. அதில் யார் பணத்தை வைப்பு செய்தாலும், எவருக்கு அனுப்ப பட்டாலும்,எவ்வளவு பரிமாற பட்டாலும் அதனை யாராலும் கண்டு பிடிக்க முடியாது. ( Swiss Bank இல் கருப்பு பணத்தை  பதுக்குவது போன்ற ஒரு ரகசிய நடைமுறை என்று கூட வைத்து கொள்ளலாம் )      

லண்டனில் வசிக்கும் எனது மிக நெருங்கிய நன்பர்  ஒருவர் Cyber Security Department இன் உயர் பதவியொன்றில் வேலை செய்கின்றார். அவர் குறித்த Hackers 👹👹👹 பற்றியும் இம் முறை தொடுக்க பட்டுள்ள Cyber Attack பற்றியும் பல திடுக்கிடும் தகவல்களை வழங்கினார். கேட்டு விட்டு அதிர்ந்தே போனேன்.                           

உலகில் பொருளாத ரீதியாக தொடுக்க படும் மிகப் பெரும் தாக்குதல்கள் குறித்த Cyber Attacks  தாக்குதல்களாகவே இருக்க வேண்டும். பல நாடுகளினதும் பல  தனியார் நிறுவனங்களினதும்  Official ரீதியான செயற்பாடுகளை ஒரு சில மணி நேரங்களில் முழுமையாக முடக்கி விடுவர் குறித்த Hackers.  இதற்கு முன்பும் இது போன்ற Cyber Attack தாக்குதல்களுக்கு பல நாடுகள் முகம் கொடுத்திருந்த போதிலும் இம் முறை தொடுக்க பட்டுள்ள தாக்குதல்களால் உலகின் பல முன்னிலை Cyber Security அமைப்புக்கள் கூட திக்குமுக்காடி போயுள்ளதுடன் குறித்த தாக்குதலை சமாளித்து வழமை நிலைக்கு திரும்புவதில் பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளனர். UK இன் NHS Department இப்போது தான் மெதுமெதுவாக வலமைக்கு திரும்ப ஆறம்பித்து கொண்டிருக்கின்றது.                     
தனிப்பட்ட பலரின்  Computers, I pads போன்றவையும்  இதனால் பாதிப்புக்குளாகியுள்ளன. உங்கள் E Mail Inbox இல் வழமைக்கு மாறான, சந்தேகத்திற்குறியவர்களிடமிருந்து ஏதும் Mails வந்திருந்தாலோ, நீங்கள் ஏதும் வெப்தளத்திற்கு செல்லும் போது அதில் ஏதும் சந்தேகத்திற்குறிய இணைப்புக்கள் ( Links ) இருந்தாலோ அவற்றை Open செய்யாதீர்கள். அது குறித்த Hackers இன் வேளையாக இருப்பின் உங்கள் Computer முடக்க படும். பின்பு அவர்கள் கேற்கும் பணத்தை அனுப்பும் வரை உங்களை விட மாட்டார்கள். (ஒருத்தரை கடத்தி வைத்து கொண்டு கப்பம் கோருவது போல் தான் இது)          

Google ஊடாக Ransomware Cyber Attack என டைப் செய்து மேலதிக தகவல்களை நீங்கள் பெற்று கொள்ளலாம்.

ஆகவே Internet பாவனைக்காக நீங்கள் உபயோகிக்கும்  உங்கள் Computers, I pads & Smart Phones   போன்ற எதுவாயினும்  அவற்றை Hackers களிடம் இருந்து பாதுகார்த்து கொள்ளுங்கள்"
         
ஷfபீக்  zஸுபைர் UK இல் இருந்து.
அவசியமான தகவல் . உங்களுக்கும் இது பயன்படலாம் . அவசியமான தகவல் . உங்களுக்கும் இது  பயன்படலாம் . Reviewed by Madawala News on 5/19/2017 09:27:00 PM Rating: 5