Ad Space avaiable

முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பாக சட்டத்தரணி வை.எல்.எஸ். ஹமீத் அவர்கள் தொடர்ந்து எழுதவேண்டும் ; கோரிக்கை ..



2017 மே 08 ந்; திகதி முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பாக சட்டத்தரணி வை.எல்.எஸ். ஹமீத் அவர்களால் எழுதப்பட்டிருந்த விளக்கத்தினை 'மடவலை நியுஸ்' வெப்தளத்தில் பார்வையிட்டேன். அது மிகவும் அறிவுபூர்வமான ஒரு விளக்கமாக இருந்தது.மேலும், உண்மையை உருக்கமாகவும் தெளிவாகவும் கூறியுள்ளார். 

அவர்களுக்கு நான் எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.மேலும், இதன் இனிவரும் தொடர் அறிக்கைகளையும் எதிர்பார்த்திருக்கின்றேன்.இது போன்ற நல்ல விளக்கங்களை ஏனைய புத்திஜீவிகளுக்கும் கிடைக்க வேண்டும் என வல்ல அல்லாஹ்விடம் ஆதரவு கோருகின்றேன்.

அத்தோடு குறிப்பாக, செய்தி வெப்தளங்களிடம் வேண்டிக் கொள்வதாவது பொதுவாக தங்களுக்கு கிடைக்கும் அறிக்கைகளை உடனுக்குடன் பதிவு செய்யாமல் அவைகளை ஆராய்ந்து மக்களுக்கு தேவையானதா என்று ஒரு கணம் பார்த்து, சிந்தித்து வெப்தளத்தில் வெளியிடுங்கள். ஏனெனில், கடைசியாக முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பாக முக்கியமான ஒரு நபரின் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை) அறிக்கையினை பார்வையிட்டேன். 

அவ்வறிக்கை அவர்களுக்கு வெறுமனே எழுத்தாற்றல் மட்டுமே உள்ளது என்பதை மாத்திரம் உணர்த்தக்கூடியதாக இருந்தது. அறிவுபூர்வமானதாக இருக்கவில்லை. அவர் குறிப்பிட்டிருந்த அனேகமான விடயங்களுக்கு ஏற்கனவே பல அறிக்கைகளில் தெளிவுகள் வெளிவந்துவிட்டன. 

அவைகளைப் பார்க்காமல் அவர் தனக்குப் பட்டதை எழுதிவிடுவதால் மக்கள் குழம்பிவிடுகின்றார்கள்.எனவே செய்தித் தளங்கள் இவ்விடயத்தில் மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கின்றேன்.

தல்துவை – பவாஸ் ஹாரூன்
முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பாக சட்டத்தரணி வை.எல்.எஸ். ஹமீத் அவர்கள் தொடர்ந்து எழுதவேண்டும் ; கோரிக்கை .. முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பாக சட்டத்தரணி வை.எல்.எஸ். ஹமீத் அவர்கள் தொடர்ந்து எழுதவேண்டும் ; கோரிக்கை .. Reviewed by Madawala News on 5/09/2017 08:05:00 PM Rating: 5