tg travels

கைது செய்தால் மறக்கமுடியாத பாடம் புகட்டுவோம் !



தங்களை கைது செய்தால் வரலாற்றில் மறக்கமுடியாத பாடம் புகட்டுவோம் என பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் ஞானசார தேரர் குறிப்பிட்டார்.

இன்று நன்பகல் அஸ்கிரிய மஹாநாயக்க தேரரை சந்தித்து கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து கருந்து வெளியிட்ட அவர் , 

இன்று நாட்டில் பல பாகங்களிலும்  முஸ்லிம் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. இந்த நாட்டிற்க்கு தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பொருற்களுக்கு பின்னரே முஸ்லிம்கள் வந்தார்கள். இன்று அம்பாரையில் புத்த மடாலயம் அமைக்க முடியவில்லை அவர்களுக்கு உறுதி இருப்பதாக கூறுகிறார்கள்.

இந்த நாட்டில் ஒரே நீதி இருக்கவேண்டும் எமக்கு அவர்களுக்கு கிழே இருக்க முடியாது அவர்களே எமக்கு கிழே இருக்க வேண்டும்.முஸ்லிம் அமைச்சர்கள் எங்களை கைது ஏற்றுமதி கூறுகிறார்கள்.எமது பௌத்த அமைச்சர்கள் வாய் மூடி இருக்கிறார்கள். எங்களை கைது செய்தால் வரலாற்றில் மறக்கமுடியாத பாடம் புகட்டுவோம் இந்த விடயத்தில் எங்கள் உயிர் போனாலும் பரவாயில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

முஸ்லிம் அமைச்சர்களை அழைத்து தங்களையும்  அழைத்தால் தாங்கள் ஆதாரத்துடன் பல விடயங்களை நிரூபிப்பதாகவும் , முஸ்லிம்  சமுகத்தின்  உள்ளே நெருப்பு தனல் இருப்பதாகவும் அது தீப்பிடிக்கும்  எனவும் குறிப்பிட்டார்.

தன்னை கைது செய்வதை இட்டு தான் அச்சப்பட போவதில்லை  ஆனால் இளைஞர்கள் தாக்குவார்கள் பள்ளிவாயல்கள் புரளும் என குறிப்பிட்டார்.

கைது செய்தால் மறக்கமுடியாத பாடம் புகட்டுவோம் ! கைது செய்தால் மறக்கமுடியாத பாடம் புகட்டுவோம் ! Reviewed by Madawala News on 5/20/2017 07:36:00 PM Rating: 5