Ad Space avaiable

பிரான்ஸ் தேர்தலும் மக்களின் ஆணையும் ..


உலகத்தில் நீண்ட அரசியல் வரலாற்றினை உடையநாடும், மனித உரிமைக்காக போராடிய நாடும், ரூசோபோன்ற அறிஞர்களை பெற்ற நாடுமாகிய பிரான்ஸ் ஒருநீண்ட அரசியல் வரலாற்றுப் பின்னணியினை கொண்டுகாணப்படுகின்றது. 

சுமார் ஐந்து குடியரசு யாப்புக்களைமிகவும் குறுகிய காலத்திலேயே அமைத்துக் கொணட்டதும்குறிப்பிடத்தக்கது. மக்கள் தீர்ப்பு முறை, மத சார்பற்றமக்களாட்சி குடியரசு, ஜனாதிபதி பாராளுமன்ற அரசாங்கமுறையினைக் கொண்ட நாடு, இருவகை நீதிமன்றங்களையும், பலகட்சி முறையினையும் கொண்டநாடாக பிரான்ஸ் விளங்குகின்றது.

பிரான்சின் அரசியல்வரலாற்றை நோக்கும் போது டீ கோலிற்கு முன்பும், டீகோலிற்கு பின்பும் என்று நோக்குவது அரசியல்அரிஞர்களின் பொதுவான நோக்காகும். பிரான்சின் நவீனஅரசியல் வரலாறு 1789 பிரான்சிய புரட்சியின் பின்னரேதொடங்கியது. 

இதன் பின்னர் 1958 வரை நான்கு குடியரசுயாப்புக்களை கொண்டு காணப்பட்டதோடு பிரான்ஸின்நவின தலைவர் என்று அழைக்கப்படும் டீ கோலினால் ஐந்தாவது குடியரசு அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டது. இதுவே இன்று வரை நடைமுறையில் உள்ளது. 

நடந்து முடிந்த பிரான்ஸ்  தேர்தல்  முடிவுகள்    எல்லருக்கும்  ஒரு  பாடமாய்  அமையவேண்டும் 1958  யில்  இருந்து  இரு பிரதான கட்சிகள்    மாறி  மாறி  வந்த    பிரான்ஸ்  முன்னணிக்கு  கட்சி  இரண்டையும்  தூக்கி  வீசிவிட்டு  மக்கள்  புதிய  கட்சியை  அமோக  பெரும்பான்மையுடன்  தேர்ந்து  எடுத்தார்கள்.

நேற்றய தேர்தல் முடிவுகளிலில் இருந்து இம்மானுவல் மாக்ரோன் பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி, 3 வருடத்துக்கு முன் அரசியலில் நுழைந்து ஒரு வருடத்துக்கு முன் தனிக்கட்சி தொடங்கி 60 வீதத்துக்கு மேல் வாக்கு பெற்று வெற்றிபெற்றுள்ளார்,  வாக்களிப்பு முடிந்து 2 மணித்தியாளத்துக்குள் தேர்தல் முடிவும் வந்துவிட்டது,

இதுதான் ஜனநாயகம்! இதுதான் மாற்றம்!

முஸ்லிம்களுக்கு எதிர்ப்பு, ஐரோப்பிய ஒன்றித்துக்கு மூடுவிழா, பிரான்சின் எல்லைக்கு பூட்டு என அதிதீவிர வலதுசாரி கொள்கையைக் கொண்ட மரின் லீ பென் பிரான்ஸ் தேர்தலில் தோல்வியடைந்திருக்கிறார்.

தீவிர வலதுசாரிகளுக்கு நேர் எதிராக - ஜனநாயகம், பன்முகத்தன்மை, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றுமையை வலியுறுத்திய இமானுவல் மக்ரான் வெற்றி பெற்றுள்ளமையானது அந்நாட்டு மக்களின்  ஆணையை பறைசாட்டுகின்றது.

ஃப்ரான்ஸ் அதிபர் வேட்பாளர் மக்ரோனுக்கு எதிராக பெரும் இணைய ஊடுருவல் தாக்குதல் (Hacking Attack) நடத்தப்பட்டு ஏராளமான ஆவணங்கள் சூறையாடப்பட்டன,
மக்ரோனின் அரசியல் இயக்கமான En Marche இன் மின்னஞ்சல்கள்,மற்றும் இணையத்தளங்களுக்குள் அடையாளம் தெரியாத இணைய ஊடுருவிகள் நுழைந்து இயக்கத்தின் அரசியல், மற்றும் நிதிச் செயற்பாடுகள் சம்பந்தப்பட்ட ஒன்பது ஜிகாபைட் அளவு ஆவணங்களையும் கோப்புக்களையும் அபகரித்திருந்தனர்.

இருப்பினும் இம்மானுவல் மாக்ரோன் தனது கொள்கை அடிப்படையிலும்,தனக்கு எதிரான அனைத்து முட்டுகட்டைகளையும் முறியடித்து பிரான்ஸ் அரசியலில் புதிய யுகம் படைத்துள்ளார்.அத்துடன் ஐரோப்பிய ஒன்றிய அதிர்ச்சிகளை தொடர்ந்து, பிரான்ஸ் நாட்டிலும் பூகம்பம் வெடிக்குமோ என் உலகம் அச்சத்தில் இருந்தது. இமானுவல் மக்ரான் வெற்றியால் - ஐரோப்பிய ஒன்றியம் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளது!

 ✍✍✍✍அ.ற.மு.அஸாம்
பிரான்ஸ் தேர்தலும் மக்களின் ஆணையும் .. பிரான்ஸ் தேர்தலும்  மக்களின் ஆணையும் .. Reviewed by Madawala News on 5/08/2017 10:35:00 PM Rating: 5