Ad Space avaiable

இந்தியாவில் இருந்து விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்கள் இலங்கைக்கு இறக்குமதியாகிறார்கள்..


மலையகத்தில் நிலவும் விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்கள் குறைபாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக இந்தியாவின் தமிழ் நாட்டில் இருந்து விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்களை அழைத்துவர இணக்கப்பட்டுக்கு வந்துள்ளதாக கல்வி ராஜாங்க அமைச்சர் ராதா கிருஸ்னன் குறிப்பிட்டுள்ளார்.

மலையகத்தில் நிலவும் விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக அங்குள்ள மாணவர்கள் உயர்தரத்தை தொடரமுடியாத நிலை உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர் மலையகத்தில் விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்களை பற்றாக்குறை நிலவுவதாகவும் குறிப்பிட்டார்.

இதற்காக 100 ஆசிரியர்களை அழைத்துவர இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருடன் ஆலோசனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய அரசு அவர்களுக்கான சம்பளத்தை வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய பிரதமரின் இலங்கை வருகையின் போது இது தொடர்பில் கலந்துரையாட வாய்ப்புள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் எதுவித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை என கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ள நிலையில் ஆசிரியர் தொழிற்சங்கள் இந்த யோசனைக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளன.
இந்தியாவில் இருந்து விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்கள் இலங்கைக்கு இறக்குமதியாகிறார்கள்.. இந்தியாவில் இருந்து விஞ்ஞான பட்டதாரி ஆசிரியர்கள் இலங்கைக்கு இறக்குமதியாகிறார்கள்..  Reviewed by Madawala News on 5/08/2017 07:41:00 PM Rating: 5