Yahya

சாய்ந்தமருது வைத்தியசாலை உருமாற்றம் பெறுகிறதா?


எம்.எம்.எம். நூருல்ஹக்
சாய்ந்தமருது
சாய்ந்தமருது பிரதேச (மாவட்ட) வைத்தியசாலையை கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையுடன் இனணக்கப்பட்டு விசேட முறிவு வைத்திய அலகாக இயங்க வைப்பதற்கான ஒரு முன் மொழிவை இன்றைய சுகாதார பிரதியமைச்சர் பைசல் காசீம் முன்வைத்து அதனை சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் பரிபாலன சபை, சாய்ந்தமருது வைத்தியசாலை அபிவிருத்திக் குழு மற்றும் புத்திஐீவிகள் ஏற்றுக்கொண்டதாக அண்மையில் சில செய்திகள் பகிரப்பட்டு வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. 

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையை தள வைத்தியசாலையாக தரமுயர்த்தித் தர வேண்டும் என்கின்ற கோரிக்கையை பிரதி அமைச்சரிடம் முன்வைத்த போதே, அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையோடு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையை இனணப்பது தொடர்பான கருத்தை அமைச்சர் முன்னிறுத்தி இருக்கின்றார். இது ”கிணறு வெட்டப்போய் பூதம் கிழம்பிய” கதையை நமக்கு ஞாபகப்படுத்தி வைக்கின்றது.

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை 1952 ஆம் ஆண்டு திருமதி விமலா விஐயவா்த்தன எனும் அமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டு, சிறியதொரு மத்திய மருந்தகமாக செயற்பட தொடங்கிய ஒரு வைத்தியசாலையாகும். அதுமாத்திரமன்றி 1975 களில் பிரசவ விடுதிகளைக் கொண்ட வைத்தியசாலையாக செயற்படத் தொடங்கியதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய தொண்மையைக் கொண்ட ஒரு வைத்தியசாலை வேறொரு பகுதியில் அமைந்திருக்கின்ற வைத்தியசாலையோடு இணைக்கப்படுகின்ற போது அந்த ஊருக்காக இருந்து வந்த வைத்தியசாலை வளத்தையும் தடயத்தையும் இல்லாமல் செய்து விடுகின்ற ஆபத்தை விளைவிக்கும்.

இன்றிருக்கும் அரசியல் அதிகாரம் சாய்ந்தமருது வைத்தியசாலையை தரமுயர்த்தித் தருவதற்கான வாய்ப்பை கொண்டதல்ல என்பதை பிரதியமைச்சர் பைசால் காசிமின் மாற்றுக் கருத்து வெளிப்படுத்துகின்றது. அதுமாத்திரமன்றி தள வைத்தியசாலையாக தரம் உயர்த்துவதற்கு கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவை அங்கீகாரத்தை புல்மோட்டை, நிந்தT+ர், சாய்ந்தமருது ஆகிய மூன்று வைத்தியசாலைகளுக்கு வழங்கியிருந்தன. இவற்றில் சாய்ந்தமருது தவிர்ந்த ஏனைய இரண்டுவைத்தியசாலைகளும் தரமுயர்த்தப்பட்டிருப்பதைக் காண்கின்றோம். 

கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவை தீர்மானத்தை முன்னெடுக்கின்ற போது சுகாதார அமைச்சராக இருந்தவர் எம்.எஸ்.எம் சுபைர் ஆவார். இவர் மு.கா. கட்சி சாராதவராவார். ஆதலால் இவரது காலத்தில் இதனை அடைந்து கொள்வதற்கு சாயந்தமருது பெரிய பள்ளிவாசல் ஆர்வத்தைக் காட்டியிருக்கவில்லை. எனினும் கிழக்கு மாகாண சபையில் ஏற்பட்டிருந்த அமைச்சரவை மாற்றத்தின் அடிப்படையில் மு.கா வைச் சார்ந்த மன்சூர் முதலிலும் பின்னர் நஸீர் ஆகியோர் சுகாதார அமைச்சர்களாக வந்தனர். இந்நிலையில்தான் சாய்ந்தமருது தவிர்ந்த ஏனைய கிழக்கு மாகாண அமைச்சரவை அங்கீகாரம் பெற்றிருந்த புல்மோட்டை, நிந்தவூர்  ஆகிய வைத்தியசாலைகள் தரமுயர்த்தப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது.   

ஸ்ரீ லங்கா மு.காங்கிரஸ் கட்சி்யைப் பொறுத்தவரை அதன் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம் அஷ்ரஃப் தொட்டு அதன் பின்னைய தலைவர் றஊப் ஹக்கீம் வரை சாய்ந்தமருது மக்கள் தமது முழுமையான ஆதரவை நல்கி வந்துள்ளனர். . இவ்விரு தலைவர்களும் இம்மக்களுக்குத் தேவையான விடய அபிவிருத்திகளிலும் வளப்பெருக்கங்களிலும் புறக்கணிப்பு இயல்பை வெளிப்படுத்திய தருணங்கள் நிறைய உண்டு.

குறிப்பாக சாய்தமருது வைத்தியசாலை உயர்சிக்கு முதல்தடைச் சுவரை எம்.எச்.எம் அஷ்ரஃப் ஏற்படுத்தியிருந்தார். இவ்வைத்தியசாலைக்கு வந்த உதவிகள், உபகரணங்கள் கூட தராது, இன்றைய அஷரஃப் ஞாபகர்த்த வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்வதற்கும் அதன் தரத்தை உயர்த்துவதற்கும் அஷ்ரஃப் வழிசெய்திருந்தார். இவற்றையெல்லாம் பொருட்படுத்தாது இம்மக்கள் நுற்றுக்குத் தொன்னூறு வீதம் மு.காவிற்கு பங்களிப்பு செய்வதை அன்றும் கைவிடவில்லை இன்றும் மாற்றிக்கொள்ளவில்லை. 

இப்படியான எமது சாய்ந்தமருது மக்களுக்கு மு.கா. பல்வேறு துரோகத்தை செய்வதற்கும் குழிபறிப்பதற்கும் கங்கணம் கட்டிக்கொண்டு செயற்படுகின்ற கடும்போக்குகளைத்தான் இன்’றுவரை அனுபவிக்கும் அவலத்தை சந்தித்துக் கொண்டிருப்பது மறைவன்று. இத்தகைய அழுத்தங்களில் இருந்து சாய்ந்தமருது மக்கள் விடுபட்டதாகத் தெரியவில்லை என்பதற்கு அப்பால், நசுக்குதல்களை தொடர்ந்தேர்சியாக எதிர்கொள்கின்ற இடர்களில் இருந்த எமது மக்கள் விடுபடுகின்ற விடிவுகாலம் இன்னும் தோன்றவில்லை. 

ஏன் இப்படிக் கருத வேண்டியிருக்கிறதென்றால், கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்றிருந்த சாய்ந்தமருது வைத்தியசாலையை தரமுயர்தும் விடயத்தில் மு.கா கட்சியை சார்ந்த சுககாதார அமைச்சராக வந்த மனசூரோ அல்லது அதன் பிற்பாடு வந்த நஸீரோ இது விடயத்தில் அக்கறை செலுத்தவில்லை.  ஆனால் இவா்களின் வெற்றிக்குப் பின்னால் நமது ஊர் மக்களின் ஆதரவுக் கரமின்றி மக்கள் அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பெறவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

எமது மக்கள் கேட்டு வந்தும், அதனைச் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு இவர்கள் மீது இருந்து வருகின்றது. உண்மையில் மக்கள் பிரதிநிதி என்போர் அம்மக்களினால் அடையாளப்படுத்தும் தேவைகளின் பின்னால் தொடர்ந்து பயணிக்காது விட்டாலும் கூட, அம்மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டிய பொறுப்புடையவர்கள் என்பதை மறக்கலாமா?
எமது சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் அதன் சமயப் பணிகளுக்கு அப்பால் ஊரின் தேவைகள் குறித்து அரசியல் ரீதியாக பெரிதும் அக்கறை காட்டுவதில்லை என்கின்ற ஒரு குற்றச்சாட்டு அவர்கள் மீது இருப்பதையும் மறுக்கமாட்டார்கள். ஏனெனில் எமது ஊர் பெரிய பள்ளிவாசல் தலைவர் உட்பட்ட சபைக்கு என்று ஒரு அரசியல் பின்னணி இருக்கிறது. அது ஐக்கிய தேசியக் கட்சி சார்பு மற்றும் ஸ்ரீ லங்கா மு.கா விருப்பு நிலை என்பதுதான் அதன் அரசியல் பின்னணி ஆகும். 
இதனால்த்தான் அண்மைக்காலங்களில் எமது பெரிய பள்ளிவாசல் நிர்வாக சபை முன்னெடுத்த எமது ஊருக்கான உள்ளுராட்சிமன்ற உருவாக்க முயற்சி, வைத்தியசாலை தரமுயர்த்துதல் என்பனவற்றின் மீதான அவர்களின் ஈடுபாடு தோல்வியைத் தழுவியதிலிருந்தும் புரியக் கூடியதாக இருக்கின்றது. 

முன்ணால் மாகான சபை சுகாதார அமைச்சர் எம்.எஸ்.எம் சுபைர் அமைச்சரவை அங்கீகாரத்தை எடுத்துக் கொண்ட தருணத்தில் அவரைச் சந்திப்பதற்கு நமது பெரிய பள்ளி நிர்வாகம் முயற்சி எடுக்கவில்லை. இவர் நமது பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு பிடிப்பில்லாத அரசியல் பின்னணியைக் கொண்டவர் என்பதினால் நமது பெரிய பள்ளிவாசல் சபை தவிர்த்திருக்கலாம். என்றாலும் அவர்களுக்குப் பிடித்தமான மு.கா. சார்ந்த பிரதிநிதிகள் சுகாதார அமைச்சர்களாக ( மன்சூர், நஸீர்) வந்த போதிலாவது சந்திப்புக்களையும் அழுத்தங்களையும் பிரயோகிப்பதற்கு நமது பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் முனைந்திருந்தால் எமது வைத்தியசாலையை தரமுயர்தியிருக்க முடியும்.

இதனைச் செய்ய நமது பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் முன்வரவில்லை. இதனாலும் இன்று உருவாக்கப்பட்டிருக்கும் வைத்தியசாலைகளின் இனணப்புத் தன்மைக்கு தலைசாய்ப்பவர்களாக மாறவேண்டிய அவலத்தை அவர்கள் சுமக்க வேண்டியவர்கள் என்ற அடையாளத்தை இன்று உரித்தாக்கி இருக்கின்றது. 
உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சராக அதாவுல்லா இருந்த காலம் மிக முக்கியமானது. உரிய விடயத்திற்கு அவர் அமைச்சராக இருந்தார். அதேநேரம் சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சிமன்றத்தை நிறுவ வேண்டும் என்ற கருத்தையும் கொண்டிருந்தார். இந்த சந்தர்ப்பங்களில் மு.கா. எமது ஊருக்கான உள்ளுராட்சிமன்ற கோரிக்கையை கணக்கில் எடுக்காத ஓர் இயங்குதலுக்குள் உட்பட்டிருந்தனர். எமது ஊர் பெரிய பள்ளிவாசல் நிர்வாகமும் மு.கா. சார்பு நிலையை அதிகம் கொண்டிருந்த காரணத்தினால் அதாவுல்லாவின் பக்கம் கவனத்தை கிஞ்சிற்றும் செலுத்த அவர்கள் விரும்பவில்லை. உள்ளுராட்சிமன்ற கோரிக்கையில் அதிக தீவிர செயற்பாட்டு இயல்பில் இயங்கிவந்த மறுமலர்ச்சி மன்றம் அதாவுல்லாவின் சந்திப்புக்காக பெரிய பள்ளிவாசலின் ஆதரவை உள்ளார்ந்தமாகத் தந்து, எங்களோடு வாருங்கள் என்று கேட்ட போதும் கூட, எமது பெரிய பள்ளிவாசல் நிர்வாக சபை அதற்கு இசைந்து வரவில்லை. 
இப்படி கடினப் போக்கில் இருந்த எமது பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் மு.கா வின் அசைவு உள்ளுராட்சி சபையை நிறுவுவதில் திரும்பிய போதுதான் எமது பெரிய பள்ளிவாசல் நிர்வாகமும் கவனத்தைச் செலுத்த தயாராகினர். அந்த சூழலில் அதாவுல்லாவின் அரசியல் அதிகாரம் இல்லாதிருந்தது மற்றும் உள்ளுராட்சி மன்றத்தின் மீதான நமது மக்களின் தீவிர செயற்பாட்டின் காரணமாக மு.கா வினர் இதற்கு உடன்பட்டதினையும் நாம் அவதானிக்கலாம். அதேநேரம் எமது பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தின் அரசியல் பின்புலம் எதை நோக்கியது என்பதையும் கோடிட்டுக் காட்டி வைக்கின்றது. 

பொதுவாக எமது பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் மு.கா சார்பு நிலையில் இருக்கின்றது. நமது மக்களும் கூடிய பாகம் அதற்கு  இசைவாக இருந்து வருகின்றனர் என்பது மிகப் பிரத்தியட்சமானது. மு.கா வின் தலைவரோ அதன் அரசியல் மக்கள் பிரதிநிதிகளோ நம்மூர் பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தின் மீதும் நமது மக்கள் மீதும் ஆதரவாகவும் அவர்களின் நியாயங்களை செவிமடுக்க வேண்டும் என்கின்ற உணர்வோடும் இயங்கும் இயல்பைக் கொண்டிருக்கவில்லை என்பதற்கு அண்மைய மூன்று சம்பவங்களை இதற்கு உதாரணமாக நாம் எடுத்து நோக்க முடியும். 

கல்முனை மாநகர முதல்வராக இருந்த நம் ஊரைச் சேர்ந்த அதுவும் மு.கா வின் பிரதிநிதியுமான சிராஸ் மீரசாகிபுவின் பதவிக்காலத்தின் ஆறு மாதங்களை மேலதிகமாக நீடித்து தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்துச் சென்றமை. (இந்த நீடிப்பு சாய்ந்தமருது கடற்கரையில் அமைத்து வரப்பட்ட பார்க் வேலையை நிறைவு செய்வதற்காக என்ற நியாயத்தோடு கேட்டும் அது நடைபெறவில்லை. பின்னர் வந்த மேயர் இந்த பார்க் முழுமைப்படுத்தாது அறைகுறையாகத் திறந்து மக்கள் பாவனைக்கு விடாது தடுத்து வைத்திருந்த வரலாற்றையும் பார்க்கின்றோம். 

சாய்ந்தமருது மக்களின் நீண்டகால கோரிக்கையான உள்ளுராட்சி மன்றத்தினை விரைவாகப் பெற்றுத் தருவதாக எமது பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்திடம் வாக்குறுதியளித்தும், பின்னர் பிரதமர் ஊடாக உள்ளுராட்சிமன்றத்தை அறிவிப்பு செய்யப்பட்டிருந்தும் இன்று வரை  உள்ளுராட்சிமன்ற கோரிக்கை நிறைவேற்றித்தரவில்லை. அதற்கு மு.கா தரப்பினால் சொல்லப்பட்ட காரணம் எல்லை நிர்ணயம் நடைபெற்றுக் கொண்டிருப்பதினால் அது முடிவுற்ற பின்னர் செய்து தரப்படும் என்பதாகும். 

இது குறித்து நாம் அப்போதே எமது பள்ளி நிர்வாகிகளுக்கு விளக்கிச் சொன்னோம் சில கடிதங்கள் பெறப்பட வேண்டும் என்று அவர்கள் சொன்ன போதும், அவைகள் அவசியமற்றவை என்பதனையும் எடுத்துரைத்திருந்தோம். இவ்வாறான நடைமுறைக்கப்பால் உள்ளுராட்சிமன்றத்தை உருவாக்க முடியும் என்பதைனையும் நாங்கள் தெளிவுபடுத்தியிருந்தோம். எமது பெரிய பள்ளி நிர்வாகத்தினரிடம் இருந்த மு. கா வின் மீதான பிடிப்பு எமது நியாயங்களையும் நடைமுறை சாத்தியமான கருத்துக்களையும் அவர்களை ஏற்க விடாது தடுத்து நிறுத்தியது. 

ஆனால் நாம் அங்கு குறிப்பிட்டுக் காட்டிய கடந்த கால நிகழ்வுகளைப் போல் அண்மையில் பொலன்னறுவையில் இரண்டு உள்ளுராட்சி மன்றங்களை புதிதாக உருவாக்கியுள்ளனர். அதுவும் எல்லை நிர்ணய குழுவின் நடவடிக்கைகள் நிறைவடையாத நிலையில் ஆகும். இப்போதும் எமது பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் எமது பிராந்திய அரசியல் அதிகாரத்தை வைத்துள்ள மு.கா வினரை தொடர்ந்தேர்சியான அழுத்தங்களைக் கொடுக்காது நீண்ட தொய்வில் வைத்திருக்கின்றனர்.

எமது பிரதேச வைத்தியசாலையை தள வைத்தியசாலையாக தரமுயர்த்தி மாற்றித்தருமாறு கோரிக்கை விடுப்பதற்குச் சென்ற எமது பள்ளி நிர்வாகத்தினர்களின் எண்ணத்தில் மாற்றுச் சிந்தனையை விதைத்து அதுவும் இந்த வைத்தியசாலையை இவ் ஊருக்கென்ற தன்மையை முற்றாக இழக்கச் செய்கின்ற மூலைச் சலவை செய்யப்பட்டு, வைத்தியசாலைகளின் இனணப்புக்கு இணக்கம் தெரிவிக்கும் அளவிற்கு அவர்கள் உடன்பட்டிருப்பதானது நமது பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகளின் அரசியல் சாயத்தை வெளிப்படுத்துகின்றது. 
ஓர் ஊரில் இரண்டு கண்கள் என போற்றப்படுவது வைத்தியசாலையும் நூலகமுமாகும். ஆயின் இவ்விரண்டையும் எந்த ஊர்களும் எதற்காகவும் இழப்பதற்கு தயார் ஆவது என்பது சிந்தனை ரீதியான முன்னெடுப்பாகா’து. இவை இரண்டும் இல்லாத ஊர்கள் அவைகளை உருவாக்குவதற்காக படுகின்ற அவதிகளை அறிந்து வைத்துள்ள நாம், இருப்பதை இழந்து விடுவதற்கு துணிந்திருப்பது ஆரோக்கியமான நெறியல்ல. 

நமது சாய்ந்மருது வைத்தியசாலை அம்பாறை மாவட்த்தில் அமைந்துள்ள பல ஊர்களில் அமைந்துள்ள வைத்தியசாலைகளின் காலத்திற்கு முந்திய தொன்மையைக் கொண்டதாகும். அது மாத்திரமன்றி இவ் ஊரின் மக்கள் தொகையைவிட குறைந்த பிரதேசங்களுக்கெல்லாம் வைத்தியசாலை இருந்து வரும்  போது எம ஊர் வைத்தியசாலையை வேறு பிரதேசத்துடன் இனணத்து அல்லது தாரை வார்த்துக் கொடுத்து இல்லாமல் செய்வது மாபெரும் வரலாற்றுத் தவறாகும். வைத்தியசாலை என்பது நமது ஊரின் சுகாதாரத் துறையோடு மட்டுமன்றி வரலாற்றுத் தடயத்தோடும் தொடர்புபட்டதாகும். 

இனணத்துக் கொடுத்துவிட்டு அதனை மீண்டும் பிரித்து எடுப்பது அவ்வளவு இலகுவான ஒன்றுமல்ல. நிர்வாக ரீதியாக ஏற்படுகின்ற சிக்கல்கள் மற்றும் இதனை அழிக்க வேண்டும் என்கின்ற உணர்வுடைய ஆதிக்க அதிகாரங்களை கையிழந்து விடுவதற்கு ஆயத்தமாகாத கடும் போக்கையும் நாம் இதில் சந்திக்க முடியும். இதற்கு நல்லதொரு உதாரணமாக அரசாங்கம் கொண்டுவந்த உள்ளுராட்சி சட்ட திட்டத்திற்கு அமைவாக நாம் தனித்திருந்த சபையை இழந்தோம் அதனை மீட்டிப் பெறுவதில் நாம் இன்று எதிர்கொள்கின்ற பல வகையான ஆதிக்க அகோரங்களை அனுபவித்துக்  கொண்டிருக்கும் நாம், நமது கரங்களில் இருந்த ஒன்றை இனணத்துக் கொடுப்பதற்கு சம்மதம் தெரிவிப்பது ஓர் அடி முட்டாள்த்தனமாகவே அமையலாம் 
இன்று சாய்ந்தமருது அரசியல் அதிகாரத்தில் பின்தங்கி இருக்கின்றது என்பதற்காக இனி வரும் காலம் எல்லாம் அப்படித்தான் இருக்குமென்று கணித்துக் கொள்ளக்கூடாது. 

சில வேளை எமது மக்களின் எதிர்பார்பின் நியாயத்தையும் அது கடந்து வந்ந அநீதிகளையும் ஆதிக்க அடக்குமுறமைகளிலிருந்தும் விடுதலை அழிப்பதற்கு உறுதியுடன் செயற்படுகின்ற அரசியல் பிரதிநிதித்துவம் ஒன்று நமதூரில் இருந்தோ அல்லது இவ் ஊருக்கு வெளியிலிருந்தோ உருவாகி விடாது என்’று நாம் இன்று தீர்மானிப்பது முறையல்ல. நாளை வருவான் ஒருவன் என்று நம்புவதும் விவேகத்தின் வழிதான். எமது சாய்ந்தமருது வைத்தியசாலையை தரமுயர்த்துவதற்கு சங்கடங்கள் இருப்பின், அவ்வைத்தியசாலையை இன்றிருக்கும் தரத்துடனேனும் தொடர்ந்து இருப்பதற்கு அனுமதிப்பதுதான் நியாயத்தின் நெறிமுறையுமாகும். 

சாய்ந்தமருதுக்குரிய சொத்தான வைத்தியசாலையை இன்னுமொரு பிரதேசத்துடன் இணைத்துத்தான் அந்த வளத்தை காப்பாற்ற வேண்டுமென்பதுமல்ல. இப்போது கூட அவர்கள் இணைத்து செய்ய வேண்டும் என்று கூறுவதை இனணயாதும் செய்ய முடியும். உதாரணமாக தள வைத்தியசாலையுடனான இனணப்புக்குக்குப் பதிலாக தனி அலகொன்றை நேரடியாக மத்திய சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் வகையில் துறை சார்ந்த வைத்தியசாலைகளாக இயங்கி வருகின்ற மகரகமையில் அமைந்துள்ள புற்றுநோய் மருத்துவமனை கொழும்பில் அமைந்துள்ள டி சொய்ஷா மகப்பேற்று வைத்தியசாலலை மற்றும் கண் வைத்தியசாலை வெலிசறையில் அமைந்துள்ள மார்பு சிகிச்சை விசேட வைத்தியசாலை போன்று இன்று உருவாக்க முற்படுகின்ற விபத்து-முறிவு வைத்தியசாலையை இங்கு உருவாக்க முடியும். 

அப்படித் தோற்றுவிக்க பிரதியமைச்சர் பைசால் காசீம் சிந்திக்கத் தவறியது ஏன்?

அவ்வாறு தோற்றுவிக்கப்படுகின்ற போதுதான் இந்த விபத்து முறிவு விசேட வைத்தியசாலையை மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களும் ஆகக் குறைந்த பட்சமாவது முதலில் அனுபவிப்பதற்கு வாய்ப்பளிக்கும். மாறாக ஒரு தள வைத்தியசாலையோடு இணைக்கப்படுகின்ற போது இப்பகுதியில் அமைந்துள்ள ஏனைய தள வைத்தியசாலைகளில் காணப்படுகின்ற வளத்தையும் அதற்கான வைத்திய நிபுணர்களையுமே கொண்டு இயங்க முடியும். 
நேரடியாக மத்திய சுகாதார அமைச்சின் கீழ் இயங்குகின்ற தனி விசேட விபத்து – முறிவு வைத்தியசாலையாக உருவாக்குவதற்கு முனைகின்ற போதுதான் தனித்துவமாகவும் அதற்கான பிரபல்யமான வைத்திய நிபுணர்களையும் இங்கு கொண்டு வர முடியும். நமது ஊரின் வளம் பலருக்கும் பயன்படுவதாகவும் நமது ஊரின் வைத்தியசாலை என்ற அம்சமும் இழக்கப்படாத பாதுகாப்பையும் உறுதி செய்யும். அப்படியல்லாது இப்போது முன்வைத்திருக்கின்ற திட்டத்தின் பின்னால் பல துரோகங்களும் சூழ்ச்சிகளும் வேரோடிக் கிடக்கின்றன என்பது தான் யதார்த்தமாகும்.
ஆகவே இந்த விடயத்தில் கல்முனைத் தொகுதியைப் மையப்படுத்திய அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மு.கா. பிரதித் தலைவருமான பிரதியமைச்சர் எச்.எம்.எம. ஹரீஸ் தலையிட்டு சாய்ந்தமருது மக்களின் விருப்புக்கு மாறாக அவ் ஊரின் வைத்தியசாலையை கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையுடன் இணைக்கக் கூடாது என்று கருத்துப்பட ஓர் அறிக்கையை பகிரங்கமாக உடனடியாக விடுக்க வேண்டும். மேலும் இந்த விடயத்தை அவரது தலைவர் ரஊப் ஹக்கீமின் கவனத்திற்கு உட்படுத்தியும் பிரதியமைச்சர் பைசால் காசிமின் பிழையான அணுகு முறைமையையும் கைவிட நடவடிக்கை மேற்கொள்வது பிரதியமைச்சர் ஹரீஸின் மக்கள் அரசியல் பிரதிநிதித்துவத்தின் தார்மீகக் கடமை என்பதை நினைவு படுத்தி வைக்கின்றோம்.  
சாய்ந்தமருது வைத்தியசாலை உருமாற்றம் பெறுகிறதா? சாய்ந்தமருது வைத்தியசாலை உருமாற்றம் பெறுகிறதா? Reviewed by Madawala News on 5/15/2017 07:21:00 PM Rating: 5