Ad Space avaiable

சமகால பிரச்சினையில் ஜம்மியதுல் உலமா முஸ்லிம் எம் பிக்கள் இணைந்து செயல்பட தீர்மானம் !


அகில இலங்கை ஜம்மியதுல் உலமா மற்றும் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் பா உறுப்பினர்களுக்கு இடையேயான விஷேட கூட்டம் சற்றுமுன் முடிவடைந்துள்ளது.

இந்த கூட்டத்தில் சமகால விடயங்கள் தொடர்பில் தீவிரமாக ஆராயப்பட்டுள்ள அதேவேளை முஸ்லிம் அமைச்சர்கள் பா உறுப்பினர்களுடன் ஜம்மியதுல் உலமா இணைந்து செயலாற்ற வேண்டும் என வழியுருத்தப்பட்டுள்ளது.

குறித்த கூட்டத்தில் பெரும்பாளான அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டுள்ள அதேவேளை மாவட்ட ரீதியில் ஒவ்வொருவரும் பொறுப்பேற்று செயலாற்ற வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கு அமைவாக கொழும்பு மாவட்டத்தில்  அனைத்து எம்பிக்களும் வசிப்பதால் கொழும்புக்கு வெளியே கம்பஹா மாவட்டத்தின் பொறுப்பு முஜீபுர் ரஹ்மானுக்கும் குருநாகல் மாவட்ட பொறுப்பு அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஹலீமுக்கும் நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களின் பொறுப்புகள் அமைச்சர் ஹக்கீமுக்கு வழங்கப்பட்டுள்ளன.

எஸ்.எம் மரிக்கார் காலி மாவட்டத்திற்கும் , ஹம்பாந்தோட்டை பைஸர் முஸ்தபா, மாத்தறை அமீர் அலி , புத்தளம் நவவி , களுத்துறை மாவட்டம் அமைச்சர் பௌசி , ஹிஸ்புல்லாஹ் மொனராகலை பொலன்னறுவை ,இஷாக் றஹுமான் அனுராதபுரம், சப்ரகமுவ மாகாணம் அமைச்சர் கபீர் ஹாசிமுக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் அம்பாரை மட்டு திருமலை உற்பட இதர மாவட்டங்களும் இதர பா உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு பொறுப்பு  வழங்கப்பட்டுள்ளாத தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட ரீதியில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மாவட்டங்களில் கவனம் எடுத்துகொண்டு அங்குள்ள பெரும்பான்மை முக்கியஸ்தர்கள் மற்றும் அங்குள்ள மக்களுடன் தொடர்பை ஏற்படுத்தி செயற்பட வேண்டும் என தீர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தவிர நாளை மறுதினம் சமகால விடயங்கள் தொடர்பில் ஜம்மியதுல் உலமாவின் விஷேட அறிக்கை ஒன்றும் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


சமகால பிரச்சினையில் ஜம்மியதுல் உலமா முஸ்லிம் எம் பிக்கள் இணைந்து செயல்பட தீர்மானம் ! சமகால பிரச்சினையில் ஜம்மியதுல் உலமா முஸ்லிம் எம் பிக்கள் இணைந்து செயல்பட தீர்மானம் ! Reviewed by Madawala News on 5/23/2017 11:13:00 PM Rating: 5