Kidny

Kidny

முஸ்லிம் அமைச்சர்கள் பா உறுப்பினர்கள் அவசர சந்திப்பு ..


நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரன நிலைமை தொடர்பில் அமைச்சர்கள் மற்றும் பாரளுமன்ற உறுப்பினர்கள் இடையேயான விஷேட சந்திப்பு முஸ்லிம் கலாசார அமைச்சில் சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் சுதந்திர கட்சி சார்பில் அமைச்சர்கள் பைஸர் முஸ்தபா , அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் எஸ் எம் மரிக்கார் , முஜீப் ரஹ்மான் மு கா சார்பில் அமைச்சர் ஹக்கீம், அ இ மக்கள் காங்கிரஸ் சார்பில் நவவி மற்றும் இஷாக் றஹுமான்,  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த சந்திப்பு தொடர்பில் மடவளை நியுஸுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் ஹலீம்..

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரன நிலைமை தொடர்பில் அமைச்சர்கள் மற்றும் பாரளுமன்ற உறுப்பினர்கள் இடையேயான விஷேட சந்திப்பு முஸ்லிம் கலாசார அமைச்சில் சற்றுமுன்னர் இடம்பெற்றதாக குறிப்பிட்ட அவர் முஸ்லிம் பா உறுப்பினர்கள் அனைவரும் ஜனாதிபதி மற்றும் பிரதமரை கூட்டாக சந்தித்து தற்போது ஏற்பட்டுள்ள நிலமை தொடர்பில் நேரில் விளக்கமளிக்க தீர்மாணித்துள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும் முஸ்லிம் உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்க உடனடியாக நேரம் ஒதுக்கித்தருமாறு கடிதம் மூலம் அறிவிக்க தீர்மானித்துள்ளதுடன் எதிர்வரும் தினங்களில்  அவரை சந்திக்கவும் தீர்மாணித்துள்ளதாக குறிப்பிட்டார்.

முஸ்லிம் அமைச்சர்கள் பா உறுப்பினர்கள் அவசர சந்திப்பு .. முஸ்லிம் அமைச்சர்கள் பா உறுப்பினர்கள் அவசர சந்திப்பு .. Reviewed by Madawala News on 5/19/2017 12:16:00 PM Rating: 5