Kidny

Kidny

சகல அமைச்சர்களுக்கும் திங்கள் காலை ஜனாதிபதி செயலகத்திற்க்கு அழைப்பு ..

 
எதிர்வரும் திங்கட்கிழமை அனைத்து அமைச்சர்களும் ஜனாதிபதி செயலகத்திற்கு அழைக்கப்பட்டிருப்பதாக அரச தரப்பு தகவல்கள் தெரிவித்தாக ஏற்கனவே செய்திகள்  வெளியான நிலையில் இது தொடர்பில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சுதந்திர கட்சி அமைச்சர் ஒருவர் மடவளை நியுசுக்கு உறுதிப்படுத்தினார்.

எதிர்வரும் 22ம் திகதி திங்கட்கிழமை காலை 08.30 மணிக்கு தன்னை  ஜனாதிபதி செயலகத்துக்கு வருகை  தருமாறும் ஜனாதிபதி செயலகம் தகவல் தெரிவித்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

அமைச்சரவையில் திருத்தங்களை மேற்கொள்வதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா என நாம் வினவிய போது எனது அமைச்சை மாற்றுமாறு நான் கோரியுள்ளேன் அது தொடர்பிலா என்பது பற்றி எனக்கு தெரியாது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

சகல அமைச்சர்களுக்கும் திங்கள் காலை ஜனாதிபதி செயலகத்திற்க்கு அழைப்பு .. சகல அமைச்சர்களுக்கும் திங்கள் காலை ஜனாதிபதி செயலகத்திற்க்கு அழைப்பு .. Reviewed by Madawala News on 5/20/2017 03:12:00 PM Rating: 5