Ad Space Available here

அர­புக் ­கல்­லூ­ரிகளுக்­கான பொது­ப் பாடத்­திட்­டத்தின் மூலம் பிற மதத்­த­வர்­களின் தவ­றான சந்­தே­கங்­களைத் தீர்க்­கலாம்..


இலங்­கையிலுள்ள அர­புக்­கல்­லூ­ரி­க­ளுக்­கென ஒரு பொது­வான பாடத் திட்­டத்தை ஏற்­ப­டுத்­து­வதன் மூலம் அரபுக் கல்­லூ­ரி­க­ளைப்­பற்­றிய பிற மதத்­த­வர்­களின் வீணான சந்­தே­கங்­களை மாற்­றி­ய­மைக்க முடியும்.

இன்று முஸ்லிம் சமூகம் பல்­வேறு சவால்­க­ளுக்கும் முகம் கொடுத்து வரு­கின்­றது. அரபுக் கல்­லூ­ரி­களில் பயங்­க­ர­வாதம் போதிக்­கப்­ப­டு­வ­தாக ஒரு குற்­றச்­சாட்டை வீணாக முன்­வைத்­துள்­ளனர். இந்த தப்­பான அபிப்­பி­ரா­யத்தை மாற்­றி­ய­மைக்க வேண்டும் என ஜாமிஆ நளீ­மியா கலா­பீட பிரதிப் பணிப்­பாளர் அஷ்ஷெய்க் ஏ.ஸி.அகார் முஹம்மத் (நளீமி) கூறினார்.

பேரு­வளை, சீனன்கோட்டை ஜாமிஆ நளீ­மியா கலா பீட ADRT மாநாட்டு மண்­ட­பத்தில் நடை­பெற்ற இலங்­கையில் உள்ள அரபுக் கல்­லூ­ரி­களின் பாடத்­திட்­டத்தை ஒருமுகப்­ப­டுத்தல் மற்றும் மேம்­ப­டுத்தல் தொடர்­பான ஆரம்ப செய­ல­மர்வில் விசேட பேச்­சா­ள­ராகக் கலந்து கொண்டு உரை­யாற்றும்போதே அவர் இவ்­வாறு கூறினார்.

முஸ்லிம் சமய, கலா­சாரத் திணைக்­களம் ஏற்­பாடு செய்த இச் செய­ல­மர்வில் சுமார் 50 பேர் வரை­யி­லான உல­மாக்கள் பங்­கு­பற்­றினர் அதில் அவர் மேலும் கூறி­ய­தா­வது,

ஆறு தசாப்தகால வர­லாற்றில் இன்­றைய செய­ல­மர்வு மிகவும் வர­லாற்று முக்­கி­யத்­து­வ­மிக்­க­தாகும். நீண்டகால முயற்­சியை அறு­வடை செய்யும் சந்­தர்ப்­பத்தை நாம் அடைந்­தி­ருக்­கின்றோம். கடந்த காலத்தில் எடுக்­கப்­பட்ட முயற்­சி­களின் விளை­வாக நாம் அனை­வரும் ஒன்றுகூடி சிறந்த ஒரு முடிவை எடுக்க வேண்டும். வர்­ஹதா, முத­வக்­கி­தா­வுக்­கான ஒரு பாடத்­திட்­டத்தை தயா­ரித்து அந்தப் பாடத்­திட்டம் அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு இப்­போது அமு­லுக்கு வந்து பரீட்சைத் திணைக்­களம் தொடர்ந்தும் பரீட்­சை­களை நடாத்தி வரு­கின்­றது.

அதனைத் தொடர்ந்து தான­வி­யா­வுக்­கான பாடத்­திட்டம் தயா­ரிக்­கப்­பட்டு அந்­தப்­பாடத் திட்­டமும் அரச அங்­கீ­கா­ரத்தைப் பெற்று பரீட்சை திணைக்­க­ளத்­தினால் இப்­போது அது அமுல் நடத்­தப்­பட்டு பொதுப் பரீட்சை வெற்­றி­க­ர­மாக நடை­பெற்று வரு­கி­றது. இப்­போது நாங்­களே தயா­ரித்த மர்­ஹதா ஜாமி­ஆ­வுக்­கான பாடத்திட்டம் இருக்­கி­றது.

அந்தப் பாடத்­திட்­டத்தை தயா­ரிக்­கின்ற குழுவைச் சேர்ந்த பலரும் இங்­குள்­ளனர். அந்தப் பாடத்திட்­டத்தை மூன்றாம் கட்­ட­மாக நாங்கள் தயா­ரித்தோம். அது பல்­க­லைக்­க­ழகத் தரத்­தினைக் கொண்ட ஒரு பாடத்­திட்­ட­மாகும். என்­றாலும் அது தொடர்­பான நடை­முறைப் பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­கின்­றன. பரீட்சைத் திணைக்­களம் ஒரு நாளும் ஒரு பட்­டச்­சான்­றி­தழை வழங்­காது. அப்­ப­டி­யாக இருந்தால் இந்தப் பாடத்­திட்­டத்­துக்கு நாங்கள் உயர் கல்வி அமைச்சு ஊடாக பல்­க­லைக்­க­ழக மானிய ஆணைக்­கு­ழுவின் அரச அங்­கீ­காரம் பெறப்­பட வேண்டும். மர்­ஹதா ஜாமிஆ என்று வைக்­கப்­பட்­டுள்ள பெயரை வேண்­டு­மானால் மாற்றிக் கொள்­ளலாம். இது பிரச்­சி­னை­யல்ல.

இப்­போது நமக்கு முன்­னா­லுள்ள தேவை என்­ன­வென்றால் அரச அங்­கீ­கா­ரத்தைப் பெற்றுக் கொள்­ளத்­தக்க ஒரு பொதுப்­பா­டத்­திட்டம்,  இறு­தி­யாண்டு மாண­வர்­க­ளுக்­கான பாடத்­திட்ட முமாகும். இவர்கள் உல­மாக்­க­ளாக, மௌல­வி­மார்­க­ளாக, சேஹ்­மார்­க­ளாக அரபுக் கலா­சா­லை­க­ளி­லி­ருந்து பட்டம் பெற்று வெளி­யே­று­கின்­ற­போது மத்­ர­ஸா­வு­டைய சான்­றி­தழை அவர்கள் எடுத்துச் செல்லும் அதே நேரத்தில் அரச அங்­கீ­காரம் பெற்ற ஒரு தரம்­மிக்க சான்­றி­த­ழையும் பெற்­றுச்­செல்­வார்கள்.

இலங்­கையில் உள்ள உல­மாக்­களே இன்று முழு உல­கிற்­கும் முன்­மா­தி­ரி­மிக்­க­வர்­க­ளாக திகழ்­கின்­றனர். உல­மாக்கள் ஒரு ஜமாஅத் அமைப்­பிலோ தரீக்கா அமைப்­பிலோ அல்­லது இயக்க அமைப்பில் இருந்­தாலும் இவர்கள் அனை­வ­ரி­னதும் கண்­களும் உம்­மத்தின் பக்­கமே உள்­ளன. உம்­மத்துல் வாஹிதா என்­பதே எம் அனை­வ­ரி­னதும் கோட்­பா­டாகும்.

அதன் கார­ண­மா­கவே நாம் அனை­வரும் பாடத்­திட்­டத்தை ஒருமுகப்­ப­டுத்தும் பணியில் எல்லா கருத்து முரண்­பா­டு­களை  விட்டு விட்டு வந்­துள்­ளீர்கள். இந்த நிலையை பாக்­கிஸ்­தானில், இந்­தி­யாவில், பங்­க­ளா­தேஷில் காண­மு­டி­யாது. இந்த வகையில் இலங்கை உல­மாக்கள் முழு உல­கிற்கும் ஒரு முன்­மா­தி­ரி­யா­ன­வர்­க­ளாக உள்­ளனர்.

பல்­வேறு இயக்­கங்­களைச் சேர்ந்­த­வர்­க­ளாக இருப்­பினும் அடுத்த தலை­மு­றைக்கு இந்த தீனை பாது­காப்­பாக,  இல்மை பாது­காப்­பாகக் கொடுக்க வேண்டும் என்ற கவ­லை­யுடன் அனைத்து உல­மாக்­களும் இங்கு ஒன்று கூடி­யுள்­ள­மை­ வர­லாற்று முக்­கி­யத்­துவ மிக்­க­தாகும். ஷியாக்கள், காதி­யா­னிகள் உட்­பட எத்­த­கைய வழிகெட்ட அஹ்­லுஸ்­ஸுன்னா வல் ஜமாஅத்­து­டைய அகீ­தா­வுக்கு முர­ணான அம்­சங்கள் இருக்­கின்­ற­னவோ அவற்­றைப்­பற்றி விழிப்­பாக இருந்து பாடத்திட்­டத்தில் சேர்க்க வேண்­டிய விடயம், சேர்க்கக் கூடாத விட­யங்கள் பற்றி ஆழ­மாக ஆராய்ந்து ஒரு நல்ல முடிவை எடுப்போம். முரண்­பா­டுள்ள விட­யங்­களை தவிர்த்து உடன்­பா­டுள்ள விட­யங்­களை சேர்த்து இந்த பணியை காலம் தாழ்த்­தாது நிறை­வேற்­றுவோம். அரை நூற்­றாண்டை இதற்­காகக் கடத்தி விட்டோம். இன்­னொரு நூற்­றாண்டு இருக்கும் என யாரும் நினைக்கக் கூடாது என்றார்.

சுகா­தார அமைச்சின் மேல­திக செய­லாளர் அஷ்செய்க் வை.எல்.எம் நவவி (நளீமி) பேசும்போது, 1820 ஆம் ஆண்டு முதல் முதலில் காலி­ மக்­கியா அரபுக் கல்­லூரி ஆரம்­பிக்­கப்­பட்­டது. அதனைத் தொடர்ந்து பல அரபுக் கல்­லூ­ரிகள் நாட்டின் நாலா பகு­தி­க­ளிலும் ஸ்தாபிக்­கப்­பட்­டன. இன்று 260 வரை­யி­லான அரபுக் கல்­லூ­ரிகள் உல­மாக்­களை உரு­வாக்கும் சீரிய பணியைச் செய்­கின்­றன.

சிறந்­த­தொரு பாடத்­திட்­டத்தை பொதுப் பரீட்­சை­யொன்றை வைத்து சான்­றி­தழை வழங்கக் கூடிய பாடத்திட்­டத்தை தயார்­ப­டுத்தித் தந்தால் சிறப்­பாக இருக்கும்.

அகில இலங்கை ஜம்­இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செய­லாளர் அஷ்செய்க் அஹம்மத் முபாரக் பேசும்போது, பாடத்­திட்டம் என்­பதோ பாட நூல்கள் மாறு­கின்­றன என்­பதோ யாராலும் நிரா­க­ரிக்­க­மு­டி­யாத ஒன்­றாகும். கல்­விப்­பா­ட­நூல்கள் மாறு­வதும், பரீட்­சை­க­ளு­டைய அமைப்பு மாறு­வதும் சுமார் 5 வரு­டங்­க­ளுக்கு ஒரு தடவை நடை­பெற்றுக் கொண்­டுதான் இருக்­கின்­றன. அர­புக்­கல்­லூ­ரி­களில் ஒவ்­வொரு இடத்­திலும் தனித் தனி­யாக பரீட்­சை­களும் நடை­பெ­று­கி­ன்றன. O/L, A/L ஆகி­ய­வற்­றுக்கு பொதுப்­ப­ரீட்­சையை எழு­து­கி­றார்கள்.
சான்­றி­தழைப் பெறு­கின்­றனர்.

அப்­ப­டி­யான நிலையில் ஏன் அரபு மத்­ர­ஸாக்கள் இல்லை என்­பது அவர்­க­ளு­டைய சந்­தேகம். இத­னால்தான் பல விமர்­ச­னங்கள் வெளி­யா­கின்­றன. நாம் எல்­லோரும் ஒன்­றுதான் என்­பதை காட்ட ஒரு கரு­வியை தேடிக்­கொள்ள வேண்டும். அந்தக்  கருவி பொதுப் பரீட்­சை­ மூலம் நாம் அனை­வரும் ஒன்றுதான் என்­ப­தையும் அதற்­காக எமது பிள்­ளை­களை தயார் செய்­வதும் கட்­டா­ய­மாகும்.பரீட்­சைக்கு சிபா­ரிசு செய்­யப்­பட்­டுள்­ளதே தவிர மத்­ர­ஸாக்­களை உட­ன­டி­யாக மாற்றி விடுங்கள் என முஸ்லிம் சமய திணைக்­களம் கூற­வில்லை.
முஸ்லிம் சமய திணைக்களத்தின் எண்ணத்தை சிலர் தவறாகப் புரிந்து கொண்டனர். அதனால் மத்ரஸாக்களை மாற்றப்போகின்றனர். மத்ரஸா பாடத்திட்டத்தை மாற்றுகிறார்கள் என்றெல்லாம் பேசினார்கள் .அந்த நிலை மாற வேண்டும்.

ஸ்ரீலங்கா ஷரீஆ கவுன்ஸிலின் தலைவர் மௌலவி எம்.ஹஸ்புல்லாஹ் அப்துல் காதர் (பஹ்ஜி) பேசும் போது, 130 வருடங்களுக்கு முன்னர் ஸ்தாபிக்கப்பட்ட காலி பஹ்ஜதுல் இப்ராஹிமியா அரபுக் கல்லூரி உள்ளிட்ட பல அரபுக் கல்லூரிகளை ஸ்தாபித்த தலை சிறந்த உலமாக்கள் செய்த பணியை மறக்க முடியாது. நாம் அனைவரும் இன்று ஒன்று கூடியிருப்பது ஒரு நல்ல பணிக்காகவேயாகும். ஒற்றுமையாக செயற்பட்டு எமது சமுதாய நலனுக்காக நல்ல முடிவுகளை எடுப்போம் என்றார்.
Vidivelli-
அர­புக் ­கல்­லூ­ரிகளுக்­கான பொது­ப் பாடத்­திட்­டத்தின் மூலம் பிற மதத்­த­வர்­களின் தவ­றான சந்­தே­கங்­களைத் தீர்க்­கலாம்.. அர­புக் ­கல்­லூ­ரிகளுக்­கான பொது­ப் பாடத்­திட்­டத்தின் மூலம் பிற மதத்­த­வர்­களின் தவ­றான சந்­தே­கங்­களைத் தீர்க்­கலாம்.. Reviewed by Madawala News on 5/11/2017 11:57:00 AM Rating: 5