Ad Space avaiable

சவூதி ஆட்சியாளர்களும் அமெரிக்கனும்.....


சவூதிய மண்ணரை சந்திக்க தனது முதலாவது மத்தியகிழக்கு பயணத்தில் வந்துள்ளார் டொனால்ட் ரம்.சவூதி அரபியா ஒரு முஸ்லிம்நாடு அதேவேளை அமெரிக்கா அதற்கு எதிரான நாடு இவ் இரண்டு நாடுகளுக்கும் எந்த வித்தில் பாசப்பினைப்பு என்பதை சற்று நிதானமாக யோசிக்க வேண்டியுள்ளது.

அமெரிக்கா அதிபர் தேர்தல் காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொண்ட டொனால்ட் ரம் ஏன் சவூதி வருகின்றார்??????

அமெரிக்காவுடன் இணைந்து தலபான்களை உருவாக்கினார்கள். பிறகு அமெரிக்காவுடன் இணைந்து அவர்களே தலபான்களை அழித்தார்கள். ஆப்கானிஸ்தானும் அழிந்தது.
அமெரிக்காவுடன் இணைந்து அல்கய்தாவை  உருவாக்கினார்கள்.பிறகு அமெரிக்காவுடன் இணைந்து அவர்களே அல்கய்தாவை அழித்தார்கள். பாகிஸ்தானும் அழித்துக்கொண்டு இருக்கிறது.

அமெரிக்காவுடன் இணைந்து ஈரானைத் தாக்க சதாமை தூண்டினார்கள். பிறகு அமெரிக்காவுடன் இணைந்து அவர்களே சத்தாமையும் அழித்தார்கள். (ஈராக் மீது எறியப்பட்ட அமெரிக்க ஏவுகணைகள் அனைத்தும் சவூதி, குவைத் தளங்களில் இருந்தே மேற்கொள்ளப்பட்டன). ஈராக்கும் முற்றுமுழுதாக அழிந்தது.
எகிப்தில் டாக்டர் முர்ஸியின் இஸ்லாமிய சகோதரத்துவ ஆட்சியை வீழ்த்த அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் துணை போனார்கள். அவர்களே சீசீயை பதவியில் அமர்த்தினர். இங்கு கொல்லப்பட்டர்களுக்கு கணக்கே இல்லை. 
சகோரத்துவம் இன்று சிறையில் வாடுகிறது.

லிபியா அழியவும் கடாபி கொல்லப்படவும் துணை போனார்கள். லிபியாவின் இறைமை அமெரிக்காவாசம் செல்ல அவர்களே உதவினார்கள். லிபியாவும் முற்றுமுழுதாக அழிந்தது.
சிரியாவின் அழிவுக்கு காரணமாய் இருந்தார்கள். ISIS க்கு ஆரம்பத்தில் பணமும் ஆயுதமும் வழங்கியது சவுதியே. சிரியாவும் முற்றுமுழுதாக அழிந்தது.

இஸ்லாம் விரோத சக்திகளுடன் இணைந்து யெமனையும் முற்றுமுழுதாக அழித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இவற்றில் எதையும் சவூதி ஆட்சியாளர்கள் மறைவாகவோ அல்லது ரகசியமாகவோ செய்யவில்லை.

இந்த அநியாயத்தைக் கண்டு முஸ்லிம்களுக்கு நியாயமாக சவுதியின் மீது ஆத்திரமும் கோபமும் வந்திருக்கவேண்டும்.... ஆனால் அப்படி வரவில்லை. காரணம் என்ன என்று ஆராய்கின்ற போதுதான் தெரிகின்றது அமெரிக்காவின் கைப்பிள்ளையே
சவூதியின் அரம்கோவின் (எண்ணெய்)அதிகமான பங்குகளை அமெரிக்காவே தன்வசம் வைத்துள்ளதுடன்,அண்மையில் மந்தகதியல் சென்ற சவூதியின் நாணயகொள்கையை மீண்டும் நீட்டி நிமிர வைத்து தனது விசுவாசத்தை காட்டியுள்ளது அமெரிக்கா.

✍✍✍✍அ.ற.மு.அஸாம்
சவூதி ஆட்சியாளர்களும் அமெரிக்கனும்..... சவூதி ஆட்சியாளர்களும் அமெரிக்கனும்..... Reviewed by Madawala News on 5/21/2017 01:04:00 AM Rating: 5