Kidny

Kidny

பிறட்பி கேடய முதலாம் சுற்றில் றோயல் கல்லூரி வெற்றி. (படங்கள்)

- ஜே.எம்.ஹபீஸ்-

​கொழும்பு றோயல் கல்லூரிக்கும்  கண்டி திருத்துவக் கல்லூரிக்குமிடயே   இடம் பெற்று வரும் பிறட்பி கேடயத்திற்கான   றகர்  போட்டியின் முதலாம் சுற்றுப் போட்டியில் 22- 17  என்ற புள்ளி வித்தியாசத்தில்  கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி பெற்றது.(20.5.2017 மாலை)

கண்டி பல்லேகலையில் அமைந்துள்ள திருத்துவக் கல்லூரியின் றகர் மைதானத்தில்  இப் போட்டி இடம்  பெற்றது. இப்   போட்டி ஆரம்பித்து சில நிமிடங்களில் திருத்துவக் கல்லூரி  ஒரு ட்ரை மூலம் ஐந்து புள்ளிகளை பெற்ற போதும் சற்றுநேரத்தில் றோயல் கல்லூரி ஒரு ட்ரை மூலம் ஐந்து புள்ளிகளையும் அதற்காக இரண்டு  மேலதிக புள்ளிகளையும் பெற்று ஏழு புள்ளிகளை பெற்று முன்னிலைக்கு வந்தது,

போட்டியின் முதலாம் பகுதி முடியும்  போது  10- 05 என்ற புள்ளி வித்தியாசத்தில்  றோயல் கல்லூரி முன்னிலை வகித்து.
 போட்டியின் இரண்டாம் பகுதியின் போது இரு தரப்பும் 12 புள்ளிகள் வீதம் பெற்றதுடன் போட்டி 22- 17  என்ற  வித்தியாசத்தில்  கொழும்பு றோயல் கல்லூரி வெற்றி பெற்றது.

இப்போட்டயைக் கண்டு களிக்க பெருந்தொகையான பொது மக்கள் வந்திருந்ததுடன் அமைச்சர்களான ரவி கருனாநாயக்கா, கபீர் ஹாசிம், மலிக் சமரவிக்கரம உற்பட இன்னும் பலர் சமுகமளித்திருந்தனர்.

பிறட்பி கேடய முதலாம் சுற்றில் றோயல் கல்லூரி வெற்றி. (படங்கள்) பிறட்பி கேடய முதலாம் சுற்றில் றோயல் கல்லூரி வெற்றி. (படங்கள்) Reviewed by Madawala News on 5/21/2017 05:13:00 PM Rating: 5