Ad Space avaiable

பல கொழுத்த நிறுவங்கள் ரவியின் கீழ் வருகிறது !

வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு வெளிவிவகார அமைச்சின் கீழ் முன்பு காணப்படாத நிறுவனங்களும் வழங்கப்பட்டுள்ளது.

அபிவிருத்தி லொத்தர் சபை, தேசிய லொத்தர் சபை மற்றும் மஹாபொல புலமைப்பரிசில் நம்பிக்கை நிதியம் போன்ற நிறுவனங்கள் வெளிவிவகார அமைச்சின் கீழ் கொண்டுவரப்படவுள்ளது.

இதேவேளை, இலங்கையின் வெளிவிவகார கொள்கையை பொருளாதார நோக்கில் கொண்டு செல்லும் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் இணைந்த தீர்மானத்துக்கமைய தேசிய ரீதியில் செயலகம் ஒன்றும் புதிய நிதியம் ஒன்றும் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் கீழ் ஆரம்பிக்கப்படவுள்ளது.

மேலும், தற்பொழுது வேறு அமைச்சின் கீழ் உள்ள பெருந்தோட்டத் துறை நிறுவனங்களும் அவரின் கீழ் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஸ்ரீ லங்கன் விமான சேவையும் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் கீழ் கொண்டுவரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
பல கொழுத்த நிறுவங்கள் ரவியின் கீழ் வருகிறது ! பல கொழுத்த நிறுவங்கள் ரவியின் கீழ் வருகிறது ! Reviewed by Madawala News on 5/23/2017 02:06:00 PM Rating: 5