Kidny

Kidny

மோடியை கொல்ல கூரிய ஆயுதத்துடன் வெசாக் நிகழ்வுக்கு சென்ற முஸ்லிம் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்..


இலங்கையில் நடைபெற்ற சர்வதேச வெசாக் தின நிகழ்வுகளின், கடந்த 12 ஆம் திகதி பி.எம்.ஐ.சி.எச். இல் பிரதமர் மோடி கலந்துகொண்ட நிகழ்வு இடம்பெற்ற பகுதிக்குள்,இஸ்லாமிய சமயப் போதகர் போன்று கத்தரி ஒன்றை எடுத்துக் கொண்டு ஒருவர் நுழைய முற்பட்டுள்ளதாக ஞானசார தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இஸ்லாம் போதிக்கும் தீவிரவாதம் மூலமே இவ்வாறு இந்த நபர் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் இவ்வாறு நுழைய முற்பட்டவர் மாளிகாவத்தைப் பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

அடந்த தாடியுடனும் ஜுப்பா அணிந்த நிலையில் முஸ்லிம் சமய போதகர் எனத் தெரிவித்து மாநாட்டு அறைக்குள் பிரவேசிக்க முற்பட்டுள்ளார்.இதன்போது, அமைச்சர்களுக்கான பாதுகாப்பு அதிகாரிகள் இவரைப் பிடித்து கருவாத்தோட்டப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சீனப் பிரதிநிதி ஒருவரின் நுழைவுச் சீட்டை எடுத்துக் கொண்டே இவர், மாநாட்டு அறைக்குள் பிரவேசிக்க முற்பட்டுள்ளார். 

இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், மேலதிக வைத்திய அறிக்கைக்காக அங்கொட மனநல வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.குறித்த சந்தேகநபரின் மனைவி தெமட்டகொட பிரதேசத்தில் வசிப்பதாக தெரியவந்துள்ளது.

இதேபோன்று, மற்றுமொரு பெண்ணும், மாநாட்டு மண்டபத்துக்குள் அனுமதிப் பத்திரம் இன்றி அன்றைய தினம் நுழைய முற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளதாகவும் சகோதர ஊடகமொன்று வடிவமைக்கப்பட்ட புகைப்படத்துடன் அறிவித்துள்ளது.  

மோடியை கொல்ல கூரிய ஆயுதத்துடன் வெசாக் நிகழ்வுக்கு சென்ற முஸ்லிம் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.. மோடியை கொல்ல கூரிய ஆயுதத்துடன் வெசாக் நிகழ்வுக்கு சென்ற முஸ்லிம் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.. Reviewed by Madawala News on 5/17/2017 07:42:00 AM Rating: 5