Kidny

Kidny

நாசகார செயலா ? சம்பவ இடத்தில் சந்தேகத்திற்க்கிடமான லைட்டர் மற்றும் ஸ்குரூவ் டிரைவர்ஸ் மீட்பு ..


நேற்று நள்ளிரவு தீக்கிரையான லாஸ்ட் சான்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ ஒரு நாசகார வேலையா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த வர்த்தக நிலையத்தில் விசாரனைகளை முன்னெடுத்துள்ள பொலிஸ் சோகோ பிரிவினரால் தீக்கிரையன வர்த்தக நிலையத்தில் இருந்து சந்தேகத்துக்கிடமான ஒரு லைட்டர் மற்றும் இரண்டு ஸ்குரூவ் டிரைவ்கள் மீட்கப்பட்டுள்ளதாக நம்பகமான செய்திகள் தெரிவிக்கின்றன.

தங்களது வர்த்தக நிலையம் தீயினால் முற்றுமுழுதாக தீக்கிரையாகி உள்ளதாகவும் பொலிஸார் ஸ்லத்துக்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அந்த நிறுவன பணிப்பாளர் ஏற்கன்வே எம்மிடம் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் குறித்த காட்சி அறையில் சுமார் 150 மில்லியன் பெருமதியான பொருட்கள் இருந்ததாக முதல்கட்ட இருப்பு தகவலின் படி அறிய முடிவதாக தெரிவித்தாகவும் ஏற்கனவே முகநூல் மற்றும் சமூக வலையூடாக தங்கள் நிறுவனத்துக்கு செல்லவேண்டாம் என இனவதாக ரீதியான தகவல்கள் பரப்பப்பட்டு வந்ததாகவும் மின் உபகரணங்கள் இருப்பதால் வழமையாக  வர்த்தக நிலையத்தை மூடும் போது மின் இணைப்புகளை முற்றுமுழுதாக துண்டிப்பதாக அவர் குறிப்ப்பிட்டிருந்தார்.

அலுத்கமை மல்லிகாஸ் பெஷன் பக் ஆகிய நிறுவனங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக ரசாயன பகுப்பாய்வு அறிக்கை வந்துள்ள நிலையில் இந்த சம்பவம் ஒரு நாசகார வேலையாக இருக்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

நாசகார செயலா ? சம்பவ இடத்தில் சந்தேகத்திற்க்கிடமான லைட்டர் மற்றும் ஸ்குரூவ் டிரைவர்ஸ் மீட்பு .. நாசகார செயலா ? சம்பவ இடத்தில் சந்தேகத்திற்க்கிடமான  லைட்டர் மற்றும் ஸ்குரூவ் டிரைவர்ஸ் மீட்பு .. Reviewed by Madawala News on 5/18/2017 11:12:00 AM Rating: 5