Ad Space avaiable

மோடியை வரவேற்க தயாராகும் மலையகம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மலையகத்துக்கான விஜயத்தை மேற்கொள்வதையொட்டி, முக்கியமான மைதானங்களுக்கு அருகிலுள்ள குளவிக் கூடுகளை அகற்றும் நடவடிக்கைகள்,நேற்று (8)முன்னெடுக்கப்பட்டன. 

ஹட்டன்-டன்பார், தரவளை மற்றும் நோர்வூட் ஆகிய மைதானங்களுக்கு அருகில், பாரிய மரங்களில் கட்டப்பட்டிருக்கும் குளவி கூடுகளே, அகற்றப்படுகின்றன.  

பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பயணிக்கும் ஹெலிகள், மேற்குறிப்பிட்ட மைதானங்களிலேயே தரையிறப்படவுள்ளன.  

அந்த மைதானங்களுக்கு அருகில், கட்டப்பட்டிருக்கும் குளவி கூடுகள், ஹெலிகொப்டர்கள் உள்ள விசிறிகளிலிருந்து வெளியாகும், காற்றின் வேகத்தில், கலைந்து, முக்கிய பிரமுகர்களை கொட்டலாம் அல்லது மிககுறுகிய நேர, நிகழ்ச்சி நிரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற காரணத்தை காண்பித்தே, இந்த கூடுகள் அகற்றப்படுகின்றன. 

இந்த நிலையில் இன்று டி.ஷங்கீதன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மலையகத்துக்கு  வருகையை முன்னிட்டு, அவற்றுக்கான முன்னேற்பாடுகள் மிகவும் விரைவாக நடைபெற்று வருகின்றன. 

இந்திய ஹெலிகொப்டர்கள் இரண்டு, ஹட்டன் டன்பார் மைதானத்தில் பரீட்சார்த்தகரமாக தறையிறக்கப்பட்டன. 

இதன் போது, யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைகான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் ஏ.நடராஜன் தலைமையிலான குழுவினருடன் கலந்துரையாடலும் இடம்பெற்றது. இந்த கலந்துரையாடலில் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.ராஜாராம்;ம.ம.மு),சோ.ஸ்ரீதரன்(தொ.தே.ச),கணபதி கணகராஜ் (இ.தொ.கா)மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோரன்ஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
மோடியை வரவேற்க தயாராகும் மலையகம் மோடியை வரவேற்க தயாராகும் மலையகம் Reviewed by Madawala News on 5/09/2017 02:04:00 PM Rating: 5