Kidny

Kidny

செய்த வேலைக்கு சம்பளம் கேட்ட சிறுவனின் கையை துண்டாக வெட்டி எறிந்த பெண். #பாகிஸ்தான்


பாகிஸ்தான் லாகூரில் இருந்து சுமார் 50 கி.மீ தூரத்தில் உள்ளது சப்தாராபாத் என்ற கிராமம்.
இங்கு ஷப்காத் பீபியின் என்ற பெண்மணி வீட்டில் இர்பான்
(வயது 13) என்ற சிறுவன் வேலை செய்து வருகிறான். அவனுக்கு மாதம் ரூ.3000 என்று சம்பளம் வழங்குவதாக ஷப்காத் பீபி கூறினார். இந்நிலையில் தான் வேலை செய்த சம்பளத்தை இர்பான் முதலாளி பெண்ணிடம் கேட்டு வந்தார். ஒரு வாரமாக தொடர்ந்து கேட்டு வந்ததால் ஆத்திரம் அடைந்த முதலாளி பெண் கால்நடை தீவனங்களை வெட்டும் மிஷினில் சிறுவனின் கையை வைத்து வெட்டி எறிந்துள்ளார். இதனையடுத்து இர்பான் சிகிச்சைக்காக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வலியால் அலறி துடித்த அந்த சிறுவன் தாயிடம் நடந்தவற்றை கூறியுள்ளான். இது தொடர்பாக சிறுவனின் தயார் உள்ளூர் போலீசாரிடம் சென்று புகார் அளித்தனர். ஆனால் அவரது புகாரை ஏற்க மறுத்து விட்டனர். அதனை தொடர்ந்து சிறுவனின் தாயார் நீதிமன்றத்தை நாடினார். நீதிபதி உத்தரவிட்ட பிறகு ஷப்காத் பீபி அவரது சகோதரர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து ஷப்காத் பீபி சகோதரை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து பஞ்சாப் முதல்-மந்திரி ஷாபாஸ் ஷெரிப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்றும்,சட்டத்தின் முன் நிறுத்தி அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
செய்த வேலைக்கு சம்பளம் கேட்ட சிறுவனின் கையை துண்டாக வெட்டி எறிந்த பெண். #பாகிஸ்தான் செய்த வேலைக்கு சம்பளம் கேட்ட  சிறுவனின் கையை துண்டாக வெட்டி எறிந்த பெண். #பாகிஸ்தான் Reviewed by Madawala News on 5/11/2017 01:39:00 AM Rating: 5