Kidny

Kidny

இந்த அளவுக்கா ஒரு மனிதன் ஏமாறுவான்.. #முடியல #இலங்கை



பாறுக் ஷிஹான்

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியை சேர்ந்த நபர் ஒருவரிடமிருந்து இலங்கையில் உள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றில் பெருமளவு பணம் பரிசாக கிடைத்துள்ளதாக கூறி ரூபா 75,000 ரூபா பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
 

அதில் உங்களுக்கு 1மில்லியன் ரூபாய் பணம் பரிசாக கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளதுடன், அந்த பணத்தை பெறுவதற்கு ரூபா 25,000 வரிப்பணமாக செலுத்தவேண்டும் என கூறியுள்ளனர். 

இதற்காக ஈ.சீ வைப்பு மூலம் பணத்தினை வைப்பு செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதற்காக குறித்த நபர் 5தடவைகள் 5,000 ரூபா வீதம் 25ஆயிரம் ரூபா பணத்தினை ஈ.சீ பணம் மூலம் வைப்பில் இட்டுள்ளார். பணத்தினை பெற்றுக்கொண்ட நபர் மீண்டும் அழைப்பிணை மேற்கொண்ட நபர் உங்களுக்கு முச்சக்கரவண்டி ஒன்று பரிசாக விழுந்துள்ளது.

அதற்காக நீங்கள் 50ஆயிரம் ரூபா பணத்தினை மீண்டும் வைப்பில் இடவேண்டும் என கூறியுள்ளனர். பணத்தின் மீதான ஆசை காரணமாக குறித்த நபர் தனது மனைவியின் தங்க ஆபரணத்தை அடகு வைத்து 50ஆயிரம் ரூபாவிற்காக ஈசி பணத்தினை 5ஆயிரம் ரூபா வீதம் 10முறை வைப்பில் இட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மீண்டும் தொலைபேசி அழைப்பிணை ஏற்படுத்திய நபர்கள் இன்னும் 25ஆயிரம் ரூபா பணம் செலுத்தினால் நீங்கள் 1மில்லியன் ரூபாவிற்கும், முச்சக்கரவண்டிக்கு உரித்தானவர் என கூறியுள்ளனர்.

சந்தேகம் அடைந்த நபர் இது தொடர்பில் மானிப்பாய் பொலிஸாரிடம் தொடர்பு கொண்டு இவ்வாறான நடமுறை ஒன்று உள்ளதாக என வினாவியுள்ளார். இச் சம்பவத்தின் உண்மைத்தன்மையினை பொலிஸார் விளங்கப்படுத்தியபோது, தான் ஏமாற்றப்பட்டதனை உணர்ந்து கொண்டுள்ளார். 

இச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட நபர், உள்வந்த அழைப்பு இலக்கத்தின் உதவியுடன் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

யாழ்.குடாநாட்டில் தொலைபேசி நிறுவனங்களில் பணப் பரிசு கிடைத்துள்ளதாகவும், பிரபல வங்கிகளில் வேலை பெற்றுக் கொடுப்பதாகவும் கூறி பல பண மோசடி சம்பவங்கள் இடம்பெற்று வருகின்ற போதும் பொதுமக்களிடம் போதிய அறிவின்மையும், நாளாந்தம் பத்திரிகைகளை வாசிக்க தவறுவதுமே இவ்வாறு மோசடிக்காரர்கள் தமது கைவரிசையினை காட்ட ஏதுவாக அமைந்துள்ளது என மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்
இந்த அளவுக்கா ஒரு மனிதன் ஏமாறுவான்.. #முடியல #இலங்கை இந்த அளவுக்கா ஒரு மனிதன் ஏமாறுவான்.. #முடியல #இலங்கை Reviewed by Madawala News on 5/12/2017 07:09:00 PM Rating: 5