Ad Space avaiable

ஒரு வாரத்துக்கு இறைச்சிக்கடைகள் குளோஸ்.


வெசாக் வாரத்தை முன்னிட்டு, நாட்டிலுள்ள சகல மதுபான சாலைகள் மற்றும் இறைச்சி மாமிசம் விற்பனை நிலையங்கள் என்பனவற்றை மூடிவிடுவதற்கு உள்நாட்டலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

இத்தினங்களில், சூது விளையாட்டுக்கள் இடம்பெறும் நிலையங்கள், இரவு, களியாட்ட விடுதிகள் என்பவற்றையும் மூடிவிடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பில் சகல மாகாண செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆகியோருக்கு சுற்று நிருபங்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய வெசாக் வாரம் கடந்த 07 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரையில் அமுல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  (மு)

ஒரு வாரத்துக்கு இறைச்சிக்கடைகள் குளோஸ். ஒரு வாரத்துக்கு இறைச்சிக்கடைகள் குளோஸ். Reviewed by Madawala News on 5/09/2017 09:54:00 PM Rating: 5