Kidny

Kidny

(வீடியோ) முஸ்லிம் எம்.பிக்களுக்கு எதிராக ஞானசார தேரர் முறைப்பாடு.



எஸ். ஹமீத்-

நேற்றைய தினம் இனவாதி ஞானசார தேரருக்கெதிராக அமைச்சர்களான ரிசாத் பதியுதீன், பைசர் முஸ்தபா, கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் மற்றும் ஆசாத் சாலி ஆகியோர் பொலிஸ் தலைமையகத்தில் புகார் ஒன்றைப் பதிவு செய்து, முஸ்லிம்களுக்கெதிரான ஞானசாரரின் அடாவடித்தனங்களைப் பற்றி எடுத்துக் கூறி, அவரைக் கைது செய்யுமாறு கோரிக்கையும் விடுத்திருந்தார்கள்.

இந்த நிலையில், இன்று ஞானசார தேரர் பொலிஸ் தலைமையகத்திற்குச் சென்று அமைச்சர் ரிசாத், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ். எம். மரிக்கார், முஜிபுர் ரஹ்மான் மற்றும் ஆசாத் சாலி ஆகியோருக்கெதிராகப் புகார் ஒன்றினைப் பதிவு செய்துள்ளார். பின்னர் அவர் ஊடகங்களிடம் பேசினார்.

''இது அரபு நாடு இல்லையென்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள். எந்த ஆட்சி இந்த நாட்டில் வருகிறதோ அந்த ஆட்சியின் தயவைப் பெற்றுக் கொள்கிறார்கள். வில்பத்தில் காணி அபகரிப்பு மற்றும் போதை பொருள் விற்பனையாளர்களைப் பாதுகாப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். அரபு நாடுகளிடம் பணத்தைப் பெற்றுத் தனியான ஆட்சி நடத்துகிறார்கள். சதொச நிறுவனங்களை அதிகமாக முஸ்லிம்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். மன்னார் வில்பத்துவில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை மறைத்து வைத்து இந்தியாவைத் தாக்கும் சூழ்நிலைகளை உருவாக்கி வருகிறார்கள். கிழக்கு மாகாணத்தில் ஒரு முஸ்லிம் பிராந்தியத்தை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்......'' என்று மிக நீண்ட குற்றப் பட்டியலை வாசித்த ஞானசார, ''சிங்களவர்களுக்குப் பிரச்சினையென்றால் நீதி கிடைப்பதில்லை; ஆனால், முஸ்லிம் ஒருவருக்கு மூத்திரம் போகாவிட்டாலும் அதனைப் பற்றி ஆட்சியாளர்கள் மிகவும் கவலைப்படுகிறார்கள்!'' என்றும் கூறினார்.

நேற்றைய முஸ்லிம் அரசியல்வாதிகளின் புகாரின் பேரில் தான் கைது செய்யப்பட்டு விடுவோமோ என்ற பயத்தில் அவசர அவசரமாக இன்று தானே போய் புகார் செய்துவிட்டு வந்திருக்கிறார் ஞானசாரர் என்று விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் இன்று மன்னாரில் நடந்த கச்சேரிப் புதுக் கட்டிடத் திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை மேடையில் வைத்துக் கொண்டு பிக்குகள் ஒரு சிலர் முஸ்லிம்களுக்கெதிராக நடாத்துகின்ற அக்கிரமங்கள் பற்றி அமைச்சர் ரிசாத் மிகக் காட்டமான உரையொன்றை நிகழ்த்தினார். மேலும் ஜனாதிபதியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, முஸ்லிம்களுக்கெதிரான அக்கிரமங்களைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்ற கோரிக்கையையும் அவர் முன் வைத்துள்ளார்.


- தகவல் : ரிப்தி அலி - விடியல் -
(வீடியோ) முஸ்லிம் எம்.பிக்களுக்கு எதிராக ஞானசார தேரர் முறைப்பாடு. (வீடியோ) முஸ்லிம் எம்.பிக்களுக்கு எதிராக  ஞானசார தேரர் முறைப்பாடு. Reviewed by Madawala News on 5/19/2017 04:59:00 PM Rating: 5