Ad Space avaiable

படங்கள் இணைப்பு... பொலீசாரே கஸ்டமராக சென்று விபசார நிலையத்தை முற்றுகையிட்டனர்.



கிளிநொச்சி மேற்கு பகுதியில் இயங்கிவந்த விபசார நிலையம் என சந்தேகிப்படும் வீடு, பொலிஸாரால் இன்று மதியம்  முற்றுகை இடப்பட்டுள்ளது.

இதன்போது பாலியல்  தொழிலில்  ஈடுபட்டதாக  சந்தேகிக்கப்படும்  நான்கு பெண்கள், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

கிளிநொச்சியில்  குறித்த விபசார  நிலையம் இயங்கி வருவதாக,  கிளிநொச்சி மற்றும்  முல்லைத்தீவு  பிரதிப்  பொலிஸ்மா அதிபர் மகேஷ் வெலிக்கன்னவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக, கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற அனுமதியுடன் குறித்த வீடு சோதனையிடப்பட்டது.

சிவில் உடையில் பொலிஸ் உத்தி​யோகத்தரை அந்த வீட்டுக்கு அனுப்பி, உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர் பொலிஸார் வீட்டை சுற்றிவளைத்துள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்களை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.





படங்கள் இணைப்பு... பொலீசாரே கஸ்டமராக சென்று விபசார நிலையத்தை முற்றுகையிட்டனர். படங்கள் இணைப்பு... பொலீசாரே கஸ்டமராக சென்று விபசார நிலையத்தை முற்றுகையிட்டனர். Reviewed by Madawala News on 5/17/2017 02:49:00 PM Rating: 5