Ad Space avaiable

கெஹலிய ரம்புக்வெல்லயின் முடி வெட்டும் தன்சல்.


வெசாக் பௌர்ணமி காலத்தில் நாட்டின் பல பாகங்களிலும் விதம் விதமான தன்சல்(தானங்கள்) வழங்கப்படுவது
வழமையானதாகும். எனினும் இம்முறை கண்டியில் நூதனமான ஓர் தானம் வழங்கப்பட்டுள்ளது.

உணவு வகைகளே அதிகளவில் தானமாக வழங்கப்படுகின்றது. எனினும், இம்முறை கண்டியில் சிகை அலங்கார தன்சல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த சிகை அலங்கார தன்சலை முன்னாள் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஆரம்பித்து வைத்தார்.

கண்டி குண்டசாலை பகுதியில் இந்த வித்தியாசமான தன்சல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தாம் புதுமையை வரவேற்கும் நபர் எனவும் இவ்வாறு புதிததாக சந்தித்து ஓர் தன்சலை ஏற்பாடு செய்தவர்கள் பாராட்டுக்குரியவர்கள் எனவும் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இந்த தனசலை ஆரம்பித்து வைத்த கெஹலிய தனது சிகையை அலங்காரம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கெஹலிய ரம்புக்வெல்லயின் முடி வெட்டும் தன்சல். கெஹலிய ரம்புக்வெல்லயின் முடி வெட்டும் தன்சல். Reviewed by Madawala News on 5/11/2017 09:39:00 AM Rating: 5